Monday, August 31, 2026

Aug 31

 மனதில் பதிக்க

நான் பறைசாற்றிய செய்தி ஞானத்தின் கவர்ச்சியான சொற்களில் அமையவில்லை. ஆனால் அது தூய ஆவியின் வல்லமையை எடுத்துக் காட்டுவதாக அமைந்தது. - 1 கொரிந்தியர் 2:4

My message and my proclamation were not with persuasive words of wisdom, but with a demonstration of spirit and power - 1 Corinthians 2:4

                                                          மனதில் சிந்திக்க

நமது இயேசு ஆண்டவர் தூய ஆவியானவரை நமக்காக தந்திருக்கின்றார். எனவே நமது செயல்கள், வார்த்தைகள், சிந்தனைகள், அனைத்தும்   தூய ஆவியானவரின் விருப்பத்தோடும், அவரது வல்லமையோடும் தான் நடைபெறுகிறதா என்பதை அடிக்கடி பரிசீலனை பண்ணுகின்றோமா என்று சிந்திப்போம்.

Our Lord Jesus has given us the Holy Spirit. Therefore, let us reflect on whether we frequently examine whether all our actions, words, and thoughts are taking place in accordance with the will and power of the Holy Spirit.


-- Twenty-Second Monday in Ordinary Time - Cycle 2


Sunday, August 30, 2026

Aug 30

 மனதில் பதிக்க

என்னைப் பின்பற்ற விரும்பும் எவரும் தன்னலம் துறந்து, தம் சிலுவையைத் தூக்கிக்கொண்டு என்னைப் பின்பற்றட்டும். - மத்தேயு  16:24 


Whoever wishes to come after me must deny himself, take up his cross, and follow me. - Matthew 16:24

                                                       மனதில் சிந்திக்க

இயேசுவை பின்பற்றுவது என்பது நம் சொந்த விருப்பங்களைக் கடந்து, அவரின் வழியைத் தேர்ந்தெடுக்கும் தாழ்மையான, பிறருக்காக ஒப்புக்கொடுக்கும்  வாழ்க்கையாகும். நாம் நம்  சிலுவைகளைத் துணிவுடன் சுமக்க வரம் வேண்டியும், அவர் அழைக்கும் பாதையில் தைரியமாக முன்னேறவும் முயல்வோமா?


Following Jesus is a humble life of self-surrender for the sake of others, transcending our own desires to choose His way. Shall we strive to seek the grace to bear our crosses with fortitude and to move forward courageously along the path to which He calls us?


-- Twenty-Second Sunday in ordinary time - Cycle 2


Saturday, August 29, 2026

Aug 29

 மனதில் பதிக்க


பெருமை பாராட்ட விரும்புகிறவர் ஆண்டவரைக் குறித்தே பெருமை பாராட்டட்டும். - 1 கொரிந்தியர் 1:29

Whoever boasts, should boast in the Lord. - 1 Corinthians 1:29


                                                           மனதில் சிந்திக்க

எல்லாப் புகழுக்கும் மாட்சிமைக்கும் உரிய உன்னதவராம் கடவுள், நமது மீட்புக்காகத் தம்மையே தாழ்த்தி மனித உருவெடுத்தார். அவ்வாறிருக்க, நமது மீட்பின் முழுமுதற் காரணமாய் விளங்கும் அவரைப் பற்றிப் பெருமைப் பாராட்டாமல் நம்மால் எவ்வாறு வாழ இயலும்?


God Most High assumed human form for the sake of our salvation, humbling Himself who is worthy of all praise and glory. How then can we live without proclaiming Him, the ultimate author of our salvation?

-- Twenty-First Saturday in Ordinary Time - Cycle 2


Friday, August 28, 2026

Aug 28

 மனதில் பதிக்க

எப்பொழுதும் விழிப்பாய் இருந்து செபியுங்கள். - லூக்கா 21:36

Be vigilant at all times and pray. -  Luke 21:36

                                                          மனதில் சிந்திக்க

எல்லாச் சூழ்நிலையிலும் செபம் இன்றியமையாதது என்பதை இயேசு நமக்குக் காட்டியுள்ளார். அது கடவுளுடனான நம் உறவின் அடித்தளம். நாம் கற்பனை செய்வதை விடச் சிறந்த வழிகளில் அவர் பதிலளிக்கிறார் என்பதை உணர்ந்து, செபத்தின் வழியாக அவரோடு எப்போதும் பேச நம்மால் அர்ப்பணிக்க முடியுமா?


Jesus showed us that prayer is essential in every circumstance. It is our direct link to God and the foundation of our relationship with Him. Can we commit talking to Him through prayer always remembering that He answers us in ways far better than we can imagine?

-- Twenty-First Friday in ordinary time - Cycle 2


Thursday, August 27, 2026

Aug 27

 மனதில் பதிக்க

விழிப்பாயிருங்கள்; ஏனெனில், உங்கள் ஆண்டவர் எந்த நாளில் வருவார் என உங்களுக்குத் தெரியாது. - மத்தேயு 24:42

Stay awake! For you do not know on which day your Lord will come. - Matthew 24:42

                                                          மனதில் சிந்திக்க

இவ்வுலக வாழ்வு குறுகியது; கிறிஸ்து எந்நேரமும் வரலாம். எனவே, ஆன்மீக விழிப்புணர்வே நம் முதல் இலக்காக இருக்க வேண்டும். உண்மையான ஞானம் என்பது அழியும் உலக இன்பங்களைத் துறந்து, இறைவனின் நித்திய அரசில் முதலீடு செய்வதே ஆகும். நம் அன்றாட வாழ்வை ஆராய்ந்து, இந்த தற்காலிக உலகை விட நித்திய வாழ்வுக்காக உழைப்போமா?"


Given the brevity of our earthly life and the uncertainty of Christ’s return, spiritual vigilance must be our ultimate pursuit. True wisdom prompts us to invest in God's eternal kingdom rather than chase the fleeting shadows of this world. When we examine how we spend our days, can we labor for eternal life rather than a passing worldly life?

-- Twenty-First Thursday in ordinary time - Cycle 2


Wednesday, August 26, 2026

Aug 26

 மனதில் பதிக்க

அமைதியை அருளும் ஆண்டவர்தாமே எப்பொழுதும் எல்லா வகையிலும் உங்களுக்கு அமைதி அளிப்பாராக! ஆண்டவர் உங்கள் அனைவரோடும் இருப்பாராக! - 2 தெசலோனிக்கர் 3:16

May the Lord of peace himself give you peace at all times and in every way. The Lord be with all of you. - 2 Thessalonians 3:16

    மனதில் சிந்திக்க

இயேசுவே அமைதியின் அரசர். அவர் நமக்குள் வாழும்போது, உலகம் தர முடியாத ஆழமான அமைதியை நாம் பெறுகிறோம். பிறரை நேசிப்பதன் மூலமும், உலக வழிகளை விட அவர் போதனைகளுக்கு முதலிடம் தருவதன் மூலமும், இந்த அமைதியை நம் வாழ்வில் வரவேற்போமா?


Jesus is the Prince of Peace. When He dwells within us, we experience a profound peace that the world can never replicate. Can we, then, actively invite this peace into our lives by choosing to love others and prioritizing His eternal teachings over the fleeting ways of the world?


-- Twenty- first Wednesday in ordinary time - cycle 2




Tuesday, August 25, 2026

Aug 25

 மனதில் பதிக்க

நீங்கள் கிண்ணத்தையும் தட்டையும் வெளிப்புறத்தில் தூய்மையாக்குகிறீர்கள். ஆனால் அவற்றின் உட்புறத்தையோ கொள்ளைப் பொருள்களாலும் தன்னல விருப்புகளாலும் நிரப்புகிறீர்கள். - மத்தேயு 23:25

You cleanse the outside of cup and dish, but inside they are full of plunder and self-indulgence. - Matthew 23:25

                                                        மனதில் சிந்திக்க

வெளிப்புற நடத்தையைவிட அகத்து எண்ணங்களுக்கே இயேசு முக்கியத்துவம் அளிக்கிறார். வெளியில் இருந்து செல்பவை அல்ல, உள்ளத்திலிருந்து வெளிவருபவையே மனிதரைத் தீட்டுப்படுத்துகின்றன என்கிறார். இதை உணர்ந்த நாம், புறத்தோற்றத்தைத் தவிர்த்து, உள்ளார்ந்த நற்பண்புகளை வளர்ப்பதில் முன்னுரிமை செலுத்துவோமா?


Jesus teaches that our inner motives carry far greater weight than our outward behavior. He insists that we are defiled not by what enters us from the outside, but by what comes out of our hearts. Knowing this, can we prioritize our internal character over external impressions?

-- Twenty-First Tuesday in ordinary time - Cycle 2


Monday, August 24, 2026

Aug 24

 மனதில் பதிக்க


இறைவாக்கினர்களும் திருச்சட்ட நூலில் மோசேயும் குறிப்பிட்டுள்ளவரை நாங்கள் கண்டுகொண்டோம். நாசரேத்தைச் சேர்ந்த யோசேப்பின் மகன் இயேசுவே அவர். - யோவான் 1:45

We have found the one about whom Moses wrote in the law, and also the prophets, Jesus son of Joseph, from Nazareth - John 1:45

                                                         மனதில் சிந்திக்க

பிலிப்பு மகிழ்ச்சியோடு, 'மெசியாவைக் கண்டுவிட்டேன்' என்கிறார். இயேசுவின் மூலம் நமக்கு மீட்பு கிடைக்கிறது. 'அன்பாய் இருங்கள்' என்ற கட்டளைப்படி வாழ்ந்து, அதை மற்றவர்களுடன் பகிர்ந்து, நாமும் நம் அன்றாட வாழ்வில் இயேசுவை சந்திப்போமா?


Philip joyfully proclaims that he has found the Messiah—the ultimate fulfillment of God's covenant. Through Jesus, humanity is offered the gift of salvation. Can we also encounter Jesus in our daily lives by living out and sharing His foremost commandment-to love one another?

-- Twenty-first Monday in ordinary time - Cycle 2


Sunday, August 23, 2026

Aug 23

 மனதில் பதிக்க

நீதி அவர்முன் செல்லும்; அவர்தம் அடிச்சுவடுகளுக்கு வழி வகுக்கும்.-  தி பா 85:13


Justice shall walk before him, and salvation, along the way of his steps. - psalms 85:13

                                                          மனதில் சிந்திக்க

While the road of faith is rarely easy, it remains spiritually secure. Divine protection ensures that no matter what obstacles we encounter, both our souls and our ultimate destination are fully protected. By intentionally walking in the footsteps of Jesus, can we unlock the path to eternity?


விசுவாசப் பாதை எப்பொழுதும் எளிதானதாக இல்லாவிட்டாலும், அது ஆன்மீக ரீதியில் பாதுகாப்பானது. நாம் எந்தவிதமான தடைகளை எதிர்கொண்டாலும், நமது ஆன்மாவும் நமது இறுதி இலக்கும் முழுமையாகப் பாதுகாக்கப்படுவதை இறைவனின் பாதுகாப்பு உறுதி செய்கிறது. இயேசுவின் அடிச்சுவடுகளைத் தீர்க்கமாகப் பின்பற்றி நடப்பதன் மூலம், நாம் நித்தியத்திற்கான பாதையைத் திறப்போமா?

-- Twenty-first Sunday in ordinary time - Year A


Saturday, August 22, 2026

Aug 22

 மனதில் பதிக்க


“அவருக்கு அஞ்சி நடப்போர்க்கு அவரது மீட்பு அண்மையில் உள்ளது என்பது உறுதி” -  தி பாடல் 85:9

“His saving help is near for those who fear him, his glory will dwell in our land.” - Psalms 85:9

                                                          மனதில் சிந்திக்க

கடவுள் நம்மை அளவற்ற அன்புடன் நேசிக்கிறார். ஆனால், பல நேரங்களில் அவருடைய அன்பையும் இரக்கத்தையும் உதாசின பறித்துக்கொண்டு , பாவத்தின் விளைவுகளைப் பற்றி சிந்திக்காமல் தீய வழியில் நடக்கிறோம். கடவுள் மீது நமது நம்பிக்கையை வளர்த்துக்கொண்டு , இறை அச்சத்தோடு பாவமில்லா வாழ்க்கையை வாழ முயல்வோமா? சிந்திப்போம்

 

God loves us so much that many a times we take him for granted and commit sins casually with the fear of God or the consequences of our sins. So, can we build our trust in God and develop the fear in Him so that we lead a righteous path to get the promised rewards of eternal life?


-- Twentieth Saturday in ordinary time - Cycle 2





Friday, August 21, 2026

Aug 21

 மனதில் பதிக்க


“தம் நெருக்கடியில் ஆண்டவரைக் கூவியழைத்தனர்; அவர்களுக்குற்ற துன்பங்களிலிருந்து அவர்களை அவர் விடுவித்தார்” -  தி பாடல் 107:6

“They cried out to Yahweh in their distress, he rescued them from their plight” - Psalms 36:26

                                                          மனதில் சிந்திக்க

நம்மை அளவற்ற அன்புடன் நேசிக்கும் இறைவன், நாம் எந்தச் சூழ்நிலையில் இருந்தாலும், எத்தகைய பாவ நிலையில் இருந்தாலும், நம்மைக் கைவிடாமல் தம் கரம் நீட்டி தூக்கி விட தயாராக இருக்கிறார். அவர்மீது முழு நம்பிக்கை வைத்து, அவரை நாடி அவரிடம் திரும்ப நாம் தயாராக இருக்கிறோமா? சிந்திப்போம்

 

Our loving God is always ready to reach out His hand and lift us up, no matter what situation we are in or how sinful our state may be. Are we ready to place our trust in Him, seek Him, and turn to Him? Let us reflect.


-- Twentieth Friday in Ordinary Time - Cycle 2




Thursday, August 20, 2026

Aug 20

 மனதில் பதிக்க

“உங்கள் உடலிலிருந்து கல்லாலான இதயத்தை எடுத்துவிட்டு, சதையாலான இதயத்தைப் பொருத்துவேன். என் ஆவியை உங்களுக்குள் புகுத்துவேன்” -  எசேக்கியேல் 36:26

“I shall give you a new heart and put a new spirit in you; I shall remove the heart of stone from your bodies and give you a heart of flesh instead.” - Ezekiel 36:26

                                                                                                 

மனதில் சிந்திக்க

நம் படைப்பாளராகிய இறைவன், நம் எண்ணங்களையும், போராட்டங்களையும், செயல்களையும் நன்கு அறிந்திருக்கிறார். நாம் பாவத்தில் விழுந்தாலும், அன்புள்ள இறைவன் நம்மை மன்னித்து, நம் உள்ளங்களை மாற்றி, தூய ஆவியானவரின் துணையுடன் புதுப்பிக்கப்பட்ட வாழ்வை வாழச் செய்ய எப்போதும் தயாராக இருக்கிறார். இறைவன் நம் உள்ளங்களை மாற்றுவதற்கு நம்மை அர்ப்பணித்து, எப்போதும் அவரது உண்மையான பிள்ளைகளாக வாழ நாம் தயாராக இருக்கிறோமா? 

Our God, our Creator, knows our thoughts, struggles, and actions. Even when we fall into sin, His loving heart is always ready to forgive, transform us, and give us the Holy Spirit to lead a renewed life. Are we ready to open our hearts to God’s transformation and remain His faithful children always?

-- Twentieth Thursday in ordinary Time -Cycle 2



Wednesday, August 19, 2026

Aug 19

 மனதில் பதிக்க


“சாவின் இருள்சூழ் பள்ளத்தாக்கில் நான் நடக்க நேர்ந்தாலும், நீர் என்னோடு இருப்பதால் எத்தீங்கிற்கும் அஞ்சிடேன்” -  தி. பாடல் 23:4

“Even were I to walk in a ravine as dark as death I should fear no danger, for you are at my side.” - Psalms 23:4

                                                                                                 

மனதில் சிந்திக்க

கிறிஸ்தவர்களாகிய நாம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவை நம்புவது, அவர் நமக்கு சவால்களும் துன்பங்களும் இல்லாத வாழ்க்கையை வாக்களித்ததால் அல்ல; மாறாக, நாம் எதிர்கொள்ளும் ஒவ்வொரு சூழ்நிலையிலும் நமக்குத் தேவையான வலிமையையும் தைரியத்தையும் அவர் அளிப்பதால். எனவே, நம் நல்ல ஆயனாகிய ஆண்டவர் இயேசுவின் உண்மையுள்ள ஆடுகளாக, அவரது குரலைக் கேட்டு, அவரைப் பின்பற்றி வாழ முயற்சிப்போமா?

 We Christians, believe in our lord Jesus Christ not coz he promises us a life without challenges or struggles, but because He provides us the strength and the courage in all situations. So can we try to lead a life as the faithful sheep of our Good Shepherd and receive His blessings always.

-- Twentieth Wednesday in ordinary time - Cycle 2



Tuesday, August 18, 2026

Aug 18

 மனதில் பதிக்க

“ஆனால் நீ கடவுளைப் போல் அறிவாளியாக இருப்பதாக எண்ணிடினும், நீ கடவுளல்ல; மனிதனே!” - எசேக்கியேல் 28:2

“Though you are human, not divine, you have allowed yourself to think like God” - Ezekiel 28:2

  மனதில் சிந்திக்க

கடவுளின் ஆசீர்வாதத்தால் நாம் பெற்ற அறிவையும், திறமையையும், ஆற்றலையும் கொண்டு, பல நேரங்களில் கடவுளைவிட பெரியவர்கள் என்ற எண்ணத்தில் வாழ்கிறோம். ஆனால், ஆண்டவரின் கிருபையும் அருளும் இல்லையென்றால் நாம் ஒன்றுமில்லை என்பதை உணர்ந்து வாழ முயல்வோமா? 


Through the knowledge, talents, and abilities we have received through God’s blessings, we often live with the thought that we are greater than God. Can we understand and accept the reality that without the Lord’s grace and blessings, we are nothing and lead a humble life united with God.


-- Twentieth Tuesday in ordinary time - Cycle 2



Monday, August 17, 2026

Aug 17

 மனதில் பதிக்க

“நிறைவுள்ளவராக விரும்பினால் நீர் போய், உம் உடைமைகளை விற்று ஏழைகளுக்குக் கொடும். அப்பொழுது விண்ணகத்தில் நீர் செல்வராய் இருப்பீர்” - மத்தேயு 19:21

“If you wish to be perfect, go and sell your possessions and give the money to the poor, and you will have treasure in heaven” - Mathew 19:21

         மனதில் சிந்திக்க

கடவுள் நம் அனைவரையும் எல்லா வகையிலும் ஆசீர்வதித்துள்ளார். கடவுள் நமக்கு அளித்தது நமக்காக மட்டுமல்ல; தேவையில் இருப்போருக்கு உதவி செய்து, பிறருக்கு ஆசீர்வாதமாக இருப்பதற்காகவும் என்பதை உணர்ந்து வாழ முயற்சி செய்வோமா? சிந்திப்போம்?


God has blessed each one of us abundantly in every way. Can we realize that what God has given us is not meant only for ourselves, but also to help others in their need and be a blessing to others.


-- Twentieth Monday in ordinary time - Cycle 2


Sunday, August 16, 2026

Aug 16

 மனதில் பதிக்க


“கடவுள் தாம் விடுத்த அழைப்பையும் கொடுத்த அருள் கொடைகளையும் திரும்பப் பெற்றுக்கொள்வதில்லை” -  உரோமையர் 11:29

“There is no change of mind on God's part about the gifts he has made or of his choice.” - Romans 11:29


                                                  மனதில் சிந்திக்க

கிறிஸ்தவர்களாகிய நாம் ஒவ்வொருவரும் கடவுளின் அழைப்பைப் பெற்றிருக்கிறோம். நம்மீது அளவற்ற அன்பு கொண்ட நம் தேவன், நாம் எத்தகைய பாவ நிலையில் இருந்தாலும், நம்மைத் தள்ளிவிடாமல், அன்போடு அரவணைக்கக் காத்திருக்கிறார். அவருடைய அன்பையும் அழைப்பையும் உணர்ந்து, நம் பாவங்களை விட்டு விலகி, கடவுளின் அன்புப் பிள்ளைகளாக வாழ முயற்சி செய்வோமா?

As Christians, every one of us have been Chosen by God. Our God, who loves us unconditionally, is always waiting to embrace us with love, regardless of the sinful state we may be in.  Can we recognize His love and His call and turn away from our sins, and strive to lead life as the beloved children of God?

-- Twentitn Sunday in Ordinary Time - Year A



Saturday, August 15, 2026

Aug 15

 மனதில் பதிக்க


"இது என்றென்றும் நான் இளைப்பாறும் இடம்; இதை நான் விரும்பினதால் இதையே என் உறைவிடமாக்குவேன். - திருப்பாடல்கள்(சங்கீதங்கள்) 132:14

“Zion is my resting place forever; in her will I dwell, for I prefer her.” - Psalm 132:14


                                                       மனதில் சிந்திக்க

நம் ஆண்டவர் நம்மை மிகவும் விரும்பி, நம் இதயத்தைத் தம் உறைவிடமாகத் தேர்ந்தெடுத்துள்ளார். ஒப்புரவு அருட்சாதனத்தின் மூலம் நம் இதயத்தைத் தூய்மையாகக் காத்து, அவருக்குக் கீழ்ப்படிந்து, எப்போதும் அவரைப் பிரியப்படுத்த நாம் தயாரா?


Our Lord desires us so deeply that He has chosen our hearts as His dwelling place. Are we willing to keep our hearts pure through the Sacrament of Confession and strive to obey Him and please Him in all we do?

-- Nineteenth Saturday in ordinary time - Cycle 2



Friday, August 14, 2026

Aug 14

 மனதில் பதிக்க

இனி அவர்கள் இருவர் அல்ல; ஒரே உடல். எனவே கடவுள் இணைத்ததை மனிதர் பிரிக்காதிருக்கட்டும். "என்றார். - மத்தேயு 19:6

So they are no longer two, but one flesh. Therefore, what God has joined together, man must not separate." - Matthew 19:6


                                                 மனதில் சிந்திக்க

இயேசு திருமணம் மனிதனால் உருவாக்கப்பட்டது அல்ல, அது கடவுளின் படைப்பு என்பதை உறுதிப்படுத்துகிறார். கணவன்-மனைவியை இணைக்கும் பிரிக்க முடியாத பந்தத்தை கடவுளே ஏற்படுத்துவதால், எந்த அதிகாரத்தாலும் அதை முறிக்க முடியாது. நம் துணையில் கிறிஸ்துவைக் கண்டு, திருமணத்தின் வழியாக இயேசுவோடு ஒன்றிணைய நாம் தயாரா?


Jesus reaffirms that marriage is God’s creation, not man’s invention. Since God establishes the inseparable bond between husband and wife, no civil or religious authority has the power to break it. Are we willing to see Christ in our spouse and unite to Jesus through our marriage?


-- Nineteenth Friday in Ordinary Time - Cycle 2


Thursday, August 13, 2026

Aug 13

 மனதில் பதிக்க


உங்களுள் ஒவ்வொருவரும் தம் சகோதரர் சகோதரிகளை மனமார மன்னிக்கா விட்டால் விண்ணுலகில் இருக்கும் என் தந்தையும் உங்களை மன்னிக்க மாட்டார். - மத்தேயு 18:35

So will my heavenly Father do to you, unless each of you forgives his brother from his heart. - Matthew 18:35


                                                        மனதில் சிந்திக்க

கடவுள் நம்மீது காட்டிய இரக்கத்தையும் மன்னிப்பையும் போல, நாமும் பிறரிடம் இரக்கமும் மன்னிப்பும் காட்ட வேண்டும். கடந்ததை விட்டுவிட்டு, நம் சகோதர சகோதரிகளை மனதார மன்னித்து, கிறிஸ்துவின் அன்பு நம் ஆழமான காயங்களை குணப்படுத்த அனுமதிக்கிறோமா?


God calls us to be merciful and forgiving to others, just as we have received His mercy and forgiveness. Are we willing to forgive our brothers and sisters from our hearts, let go of the past and allow Christ’s love to heal the deep wounds within us?


-- Nineteenth Thursday in Ordinary Time - Cycle 2





Wednesday, August 12, 2026

Aug 12

 மனதில் பதிக்க

இபெருஞ்செல்வத்தில் மகிழ்ச்சி அடைவதுபோல், நான் உம் ஒழுங்குமுறைகளின்படி நடப்பதில் மகிழ்ச்சியுறுகின்றேன்.- திருப்பாடல்கள்(சங்கீதங்கள்) 119:14

In the way of your decrees I rejoice, as much as in all riches. - Psalm 119:14


                                                         மனதில் சிந்திக்க

கர்த்தருடைய சட்டம் எல்லாச் செல்வங்களையும் விட மேலானது; அது நமக்கு உண்மையான ஞானத்தை அளிக்கிறது. அவருடைய கட்டளைகளைக் கடைப்பிடிப்பது நமக்கு அமைதியையும், பாவத்தை வெல்லும் வலிமையையும் தரும் ஆசீர்வாதம். அவருடைய கட்டளைகளுக்குக் கீழ்ப்படிந்து, அவரில் மகிழ நாம் தயாரா?


The law of the Lord is more valuable than any riches, because it gives us true wisdom. Observing His commandments is a blessing, bringing us peace and strength to overcome sin. Are we willing to obey His commandments and delight in Him?


-- Nineteenth Week In Ordinary Time - Cycle 2




Tuesday, August 11, 2026

Aug 11

 மனதில் பதிக்க

இந்தச் சிறு பிள்ளையைப்போலத் தம்மைத் தாழ்த்திக் கொள்பவரே விண்ணரசில் மிகப் பெரியவர். மத்தேயு 18:4

Whoever becomes humble like this child is the greatest in the Kingdom of heaven. Matthew 18:4

                                                          மனதில் சிந்திக்க

கடவுள் எல்லாவற்றையும் விட தாழ்மையான, கீழ்ப்படிதலுள்ள இதயத்தையே மதிக்கிறார். குழந்தையைப் போல (குழந்தைத்தனமாக அல்ல) அவரை முழுமையாக நம்பி, அவரது திருவுளத்தைச் செய்ய நம்மை அழைக்கிறார். நம் விருப்பங்களை விட்டுவிட்டு, அவரை முழுமையாக நம்பி, அவரது திருவுளத்திற்குக் கீழ்ப்படிய நாம் தயாராக இருக்கிறோமா?


God values a humble and obedient heart more than anything. He calls us to be childlike (not childish) trusting Him completely and seeking to do His will. Are we willing to surrender our own ways, trust Him completely, and obey His will?

-- Nineteenth Tuesday in Ordinary Time - Cycle 2



Monday, August 10, 2026

Aug 10

 மனதில் பதிக்க


தமக்கென்றே வாழ்வோர் தம் வாழ்வை இழந்து விடுவர். இவ்வுலகில் தம் வாழ்வைப் பொருட்டாகக் கருதாதோர் நிலைவாழ்வுக்குத் தம்மை உரியவராக்குவர். - யோவான் 12:25

Whoever loves his life loses it, and whoever hates his life in this world will preserve it for eternal life. - John 12:25


                                                       மனதில் சிந்திக்க

நாம் நமக்குள் இறந்து, நம்மைத் தியாகம் செய்யும்போதுதான், இறைவனிடமிருந்து நிறைவான வாழ்வைப் பெற்று, அவருடைய அன்பையும் வாழ்வையும் பிறருக்கு வழங்கும் கருவிகளாக முடியும். இறைவன் என்னுள் நிறைவாக நிறைந்து, என் வழியாகச் செயல்பட நான் எதை விட்டுக்கொடுக்க வேண்டும்?


Only when we die to ourselves can we receive the fullness of life from God and become channels of His life and love to others. What do I need to surrender or die to in myself so that God can fill me more fully and work through me?

-- Nineteenth Monday in Ordinary Time - Cycle 2


Sunday, August 9, 2026

Aug 09

 மனதில் பதிக்க


"துணிவோடிருங்கள் ; நான்தான், அஞ்சாதீர்கள்". - மத்தேயு 14:27

Take courage, it is I; do not be afraid.” - Matthew 14:27


                                                        மனதில் சிந்திக்க

இயேசுவிடமிருந்து விலகி இருக்கும்போது, நம் பிரச்சினைகளில் நாம் எளிதில் தடுமாறி, துவண்டு போகிறோம். ஆனால் அவருடன் நம் உறவைப் புதுப்பித்து, அவரிடம் நெருங்கி வரும்போது, யாவே நம்முடன் இருக்கிறார் என்ற நம்பிக்கையுடன் எந்தப் புயலையும் அச்சமின்றி எதிர்கொள்ளலாம். இயேசுவிடம் இன்னும் நெருங்கி, அவருடன் ஒன்றிப்புடன் வாழ நாம் தயாரா?


When we are far from Jesus we can easily feel lost and overwhelmed by our struggles. But as we renew our relationship with Him and grow closer to Him, we can face every storm without fear knowing that Yahweh is with us. Are we willing to draw closer to Jesus and remain in union with Him?


-- Nineteenth Sunday in Ordinary Time - Year A



Saturday, August 8, 2026

Aug 08

 மனதில் பதிக்க


“உங்கள் நம்பிக்கைக் குறைவுதான் காரணம்” - மத்தேயு  17: 20

“Because you have so little faith” - Matthew 17: 20

                                                       மனதில் சிந்திக்க


சீடர்களிடம் இயேசு கூறிய வார்த்தைகள், நம்முடைய விசுவாசத்தின் ஆழத்தை ஆராய நம்மை அழைக்கின்றன. ஆசீர்வாதங்கள் நம்மைத் தேடி வரும்போது மட்டுமே நாம் ஆண்டவரை நம்புகிறோமா? அல்லது வாழ்க்கையின் மிக இருண்ட தருணங்களிலும் அவரோடு உறுதியாக நிலைத்திருக்கிறோமா? 


Jesus’ words to the disciples challenge us to examine the depth of our own faith. Do we seek and praise God only when blessings flow our way, Or do we remain steadfast, holding on to Him even in the darkest moments of life?


-- Eighteenth Saturday in Ordinary Time - Cycle 2


Friday, August 7, 2026

Aug 07

 மனதில் பதிக்க


“மனிதர் உலகம் முழுவதையும் ஆதாயமாக்கிக் கொண்டாலும் தம் வாழ்வையே இழப்பாரெனில் அவருக்குக் கிடைக்கும் பயன் என்ன?” - மத்தேயு  16: 26

“Will you gain anything if you win the whole world but lose your life?” - Matthew 16: 26                                                                                              

  மனதில் சிந்திக்க

புனித பிரான்சிஸ் சவேரியாரின் வாழ்வை மாற்றியமைத்த இயேசுவின் இவ்வார்த்தைகள், நம்முடைய சொந்த வாழ்வையும் சுயபரிசோதனை செய்துகொள்ள நம்மை அழைக்கின்றன. செல்வம், அந்தஸ்து, மனித அங்கீகாரம் போன்ற நிலையற்ற உலக ஆசைகளுக்காக நம் ஆன்மாவை இழக்கிறோமா, அல்லது கிறிஸ்துவில் உள்ள நித்திய வாழ்வைத் தேடுகிறோமா? 


These words of Jesus, which transformed the life of St. Francis Xavier, also invites us to examine our own lives. Are we losing our souls in pursuit of temporary worldly desires such as wealth, status, and human recognition, or are we seeking the eternal life found in Christ?

-- Eighteenth Friday in ordinary time - Cycle 2


Thursday, August 6, 2026

Aug 06

 மனதில் பதிக்க


“என் அன்பார்ந்த மைந்தர் இவரே. இவர் பொருட்டு நான் பூரிப்படைகிறேன். இவருக்குச் செவிசாயுங்கள்.”  - மத்தேயு  17: 5

“This is my beloved Son, with whom I am well pleased. Listen to him.” - Matthew 17:5                                                                                                 

 மனதில் சிந்திக்க

இவ்வார்த்தைகள், கீழ்ப்படிதலுள்ள தம் மகன் மீது ஒரு தந்தைக்கு இருக்கும் பெருமையை வெளிப்படுத்துகின்றன. இயேசு, இறைமகனாகவும், இரக்கமுள்ள ஊழியராகவும் வாழ்ந்து, நமக்குச் சிறந்த முன்மாதிரியை விட்டுச் சென்றார். நாம் அவருடைய முன்மாதிரியைப் பின்பற்றி நம் இறைத்தந்தைக்கு மகிழ்ச்சியை அளிக்கிறோமா? அல்லது கிறிஸ்துவைப் போல மாறாமல் அவரை வெறுமனே வியந்து ரசிப்பதிலேயே திருப்தியடைகிறோமா?

These words reveal the pride of a Father in His obedient Son. Jesus lived as a faithful son, and a compassionate servant, leaving us the perfect example to follow. Are we following His example and bringing joy to our Heavenly Father, or are we content with admiring Christ without truly becoming more like Him?


-- Feast of the Transfiguration of the Lord



Wednesday, August 5, 2026

Aug 05

 மனதில் பதிக்க


“அம்மா, உமது நம்பிக்கை பெரிது. நீர் விரும்பியவாறே உமக்கு நிகழட்டும்”  - மத்தேயு  15: 28

“Woman, you have great faith. Your request is granted" - Matthew 15: 28

                                                                                                  

மனதில் சிந்திக்க


நமது சூழ்நிலைகள் எவ்வளவு சாத்தியமற்றதாகத் தோன்றினாலும், ஆண்டவருக்காகக் காத்திருக்க வேண்டும் என்பதை இந்த வசனத்தின் மூலம் நாம் நினைவுகூருகிறோம். நிலையான தீர்வைக் கொண்ட அவரிடம் காத்திருப்பதற்குப் பதிலாக, நமது சொந்த அறிவை நம்பி தற்காலிகத் தீர்வுகளைத் தேடுகிறோம். வாழ்க்கையின் ஆழ்ந்த போராட்டங்களிலும் நாம் அவரைப் பற்றிக்கொண்டு நிற்கிறோமா, அல்லது இந்த உலகத்தின் துயரத்திற்கு இடமளிக்கிறோமா?

Through this verse, we are reminded to wait on the Lord, no matter how impossible our situation may seem. We rely on our own understanding and seek temporary solutions instead of waiting on Him, who alone has the perfect and lasting answer. Are we holding on to Him in life's deepest struggles, or are we giving in to the sadness of this world?

-- Eighteenth Wednesday in Ordinary Time - Cycle 2


Tuesday, August 4, 2026

Aug 04

 மனதில் பதிக்க


“பார்வையற்ற ஒருவர் பார்வையற்ற வேறொருவரை வழிநடத்தினால் இருவரும் குழியில் விழுவர் ” -   மத்தேயு  15: 14

“If the blind lead the blind, both will fall into a pit” - Matthew 15: 14                                                            

 மனதில் சிந்திக்க


இயேசுவின் ஞானத்தையும் வழிநடத்துதலையும் சார்ந்து வாழாவிட்டால் , அவரில் வேரூன்றாதவர்களை நாம் கண்மூடித்தனமாகப் பின்பற்றுவோம், அல்லது நம் சொந்தப் புரிதலை நம்பி மற்றவர்களைத் தவறான வழியில் நடத்துவோம் என்பதை இயேசு நமக்கு நினைவூட்டுகிறார். ஒவ்வொரு நாளும் இயேசு நம்மை வழிநடத்த நாம் அனுமதிக்கிறோமா, அல்லது உலகத்தின் குரல்களைப் பின்பற்றுகிறோமா?

Jesus reminds us that unless we are led by His wisdom, we will either blindly follow those not rooted in Him or mislead others by trusting our own understanding instead of God's truth. Are we allowing Jesus to lead us each day, or are we following the voices of the world?

-- Eighteenth Tuesday in Ordinary Time - Cycle 2