Monday, June 1, 2026

Jun 01

 மனதில் பதிக்க

இன்னும் எஞ்சியிருந்தவர் ஒருவரே. அவர் அவருடைய அன்பு மகன். தம் மகனை அவர்கள் மதிப்பார்கள் என்று அவர் நினைத்துக் கொண்டு இறுதியாக அவரை அவர்களிடம் அனுப்பினார் -மாற்கு 12:6


He had one other to send, a beloved son. He sent him to them last of all, thinking, ‘They will respect my son.’ - Mark 12: 6


மனதில் சிந்திக்க


கடவுள் நம்மை அவருடைய உரிமைப் பேரான பிள்ளைகளாக தெரிவு செய்தது மாத்திரமல்லாமல் நம் மேல் மிகுந்த நம்பிக்கை வைத்திருக்கின்றார். ஆனால் நாம் இவ்வுலகிற்கு வந்த இயேசு ஆண்டவரை நமது அன்றாட பாவங்களால் தினம் தினம் காயப்படுத்தி கடவுள் நம்மீது வைத்த நம்பிக்கைக்கு மாறாக நடந்து கொள்கின்றோம். எனவே கடவுள் நம்பிக்கைக்கு உரிய வாழ்வு வாழ முன்வருவோமா?


God has not only chosen us as His rightful children, but He also places immense trust in us. Yet, through our daily sins, we wound the Lord Jesus—who came into this world—day after day, thereby acting contrary to the trust God has placed in us. Therefore, shall we live a life worthy of God's trust?


-- Ninth Monday in Ordinary time - Cycle 2