Thursday, April 30, 2026

Apr 30

 மனதில் பதிக்க


 “இவற்றை நீங்கள் அறிந்து அதன்படி நடப்பீர்கள் என்றால் நீங்கள் பேறுபெற்றவர்கள்” - யோவான் 13:17


If you understand this, blessed are you if you do it. - John 13:17


                                                         மனதில் சிந்திக்க


இயேசு கிறிஸ்துவே இறை மகன், அவரே மெய்யான கடவுள் என்பதை முழுமையாக உணர்ந்து அவரால் ஆசீர்வதிக்கப்பட்ட பிள்ளைகளாய் வாழ முயல்வோமா?


Shall we strive to live as children blessed by Jesus Christ—fully realizing that He is the Son of God and the true God Himself?


-- Fourth Thursday in Easter - Cycle 2


Wednesday, April 29, 2026

Apr 29

 மனதில் பதிக்க


 “என்னிடம் நம்பிக்கை கொள்பவர் இருளில் இராதபடி நான் ஒளியாக உலகிற்கு வந்தேன்” -  யோவான் 12:45


“I have come into the world as light, to prevent anyone who believes in me from staying in the dark anymore” - John 12:45


                                                        மனதில் சிந்திக்க


கடவுளின் வார்த்தையை கேட்டு, அதன் படி நாம் வாழும் போது  அவரின் ஆசீர்வாதங்களை நிறைவாக பெறுகிறோம். நாமும் கடவுளின் மேல் அசைக்க முடியாத நம்பிக்கையை வளர்த்துக்கொண்டு, அவரின் ஒளியில் வாழ முயல்வோமா?


When we listen to God’s Word and live according to it, we receive His blessings in fullness. Can we also try to grow in an unshakable faith in God and strive to live in His light?


-- Wednesday in the Fourth week of Easter


Tuesday, April 28, 2026

Apr 28

 மனதில் பதிக்க


 “தூய ஆவியால் ஆட்கொள்ளப்பட்டு நம்பிக்கை நிறைந்தவராய்ப் பெருந்திரளான மக்களை ஆண்டவரிடம் சேர்த்தார்” -  திருத்தூதர் பணி 11:24


 “Filled with the Holy Spirit and with faith. And a large number of people were won over to the Lord.”  - Acts 11:24


                                                        மனதில் சிந்திக்க


நாம் கடவுள் மேல் முழு நம்பிக்கை கொண்டிருந்தால் அவரின் மிக பெரிய அருட்கொடையான தூய ஆவியை நமக்கு துணையாளராக அளிப்பார்.  இயேசுவில் நிலைத்திருந்து அவரின் மக்களாக வாழ முயல்வோமா? சிந்திப்போம்


If we have complete trust in God, He will grant us His greatest gift—the Holy Spirit—as our helper. Can we strive to lead our life holding on to Jesus and be called His own people?


-- Tuesday in the Fourth Week of Easter - Cycle 2


Monday, April 27, 2026

Apr 27

 மனதில் பதிக்க


 “வாழ்வுக்கு வழியான மனமாற்றத்தைப் பிற இனத்தவருக்கும் கடவுள் கொடுத்தார் என்று கூறி அவரைப் போற்றிப் புகழ்ந்தார்கள்” -  திருத்தூதர் பணி 11:18


 “This account satisfied them, and they gave glory to God, saying, 'God has clearly granted to the gentiles too the repentance that leads to life.'”  - Acts 11:18


                                                        மனதில் சிந்திக்க


நாம் வெறும் வார்த்தைகளால் கடவுளை ஏற்றுக்கொண்டதால் மட்டுமே நிலைவாழ்வை அவர் நமக்கு வாக்களிக்கவில்லை. உண்மையான நம்பிக்கை மாற்றத்தை அழைக்கிறது. இயேசுவின் வழி நடக்கும் நாமும் அவரை நம் வாழ்க்கையின் மையமாக வைத்து, அவருடைய வார்த்தையின் படி வாழ்ந்து, கடவுளின் உண்மையான பிள்ளைகளாக வாழ முயல்வோமா? சிந்திப்போம்


God does not promise eternal life to us merely because we say we accept Him. True faith calls for transformation. Being the followers of Jesus, can we strive to make Him the center of our lives and live according to His teachings and grow as the true children of God?


-- Monday of the Fourth Week of Easter - Cycle 2


Sunday, April 26, 2026

Apr 26

 மனதில் பதிக்க


 “நெறிகெட்ட இந்தத் தலைமுறையிலிருந்து, உங்களைக் காப்பாற்றிக்கொள்ளுங்கள்” ( திருத்தூதர் பணி 2:39)


“Save yourselves from this perverse generation.” (Acts 2:39)


                                                       மனதில் சிந்திக்க


கடவுளால் படைக்கப்பட்ட நம் அனைவருக்கும் நம் வாழ்க்கை பாதையை தேர்ந்தெடுக்கும் உரிமையை அளித்துள்ளார் . கிறிஸ்துவின் பெயரால் திருமுழுக்கு பெற்ற நாம் அனைவரும் அவரின் மேல் நம்பிக்கை கொண்டு பாவமில்லா வாழ்க்கையை வாழ முயல்வோமா? சிந்திப்போம்



God our creator has given us the freedom to choose our path in life. We who have received baptism in the name of Christ, can we strive to live a sinless life with firm faith in God?


-- Fourth Sunday in Easter - year A






Saturday, April 25, 2026

Apr 25

 மனதில் பதிக்க


ஒருவர் மற்றவரோடு பழகும்போது எல்லாரும் மனத்தாழ்மையை ஆடையாய் அணிந்திருங்கள். - 1 பேதுரு 5:5


And all of you, clothe yourselves with humility in your dealings with one another. - 1 Peter 5:5


                                                         மனதில் சிந்திக்க


நாம் சந்திக்கின்ற ஒவ்வொரு மனிதர்களிடமும் தாழ்மையுடன் நடக்கவேண்டும் என்பதையே இறைவன் நமக்கு எடுத்துரைக்கின்றார். நமது சக மனிதர்களிடத்தில் வேறுபாடு காட்டாமல், பெருமை பேசாமல், எல்லோருடனும் தாழ்மையுடன் நடந்து கொண்டு இறைவனின் இரக்கத்தைப் பெற நம்மை தகுதியாக்கிக் கொள்வோம் .


God teaches us to be humble towards every person we encounter. Shall we qualify ourselves to receive God's mercy by treating our fellow human beings without discrimination or arrogance, and by interacting with everyone in a spirit of humility.


-- Saturday in the third week of Easter





Friday, April 24, 2026

Apr 24

 மனதில் பதிக்க

அவர் பிற இனத்தவருக்கும் அரசருக்கும் இஸ்ரயேல் மக்களுக்கும் முன்பாக எனது பெயரை எடுத்துச்செல்ல நான் தேர்ந்தெடுத்துக்கொண்ட கருவியாய் இருக்கிறார். - திருத்தூதர் பணிகள் 9:15


“Go, for this man is a chosen instrument of mine to carry my name before Gentiles, kings, and Israelites" - Acts 9:15


                                                          மனதில் சிந்திக்க


இறைவனது நற்செய்தியையும், அவர் ஒருவரே உண்மையான கடவுள் என்பதையும், அவரால் மட்டுமே நமக்கு மீட்பு உண்டு என்பதையும், மற்ற மனிதர்களுக்கு நம் நடத்தையால் எண்பிக்க வேண்டும் என்று இறைவன் அழைப்பு விடுகின்றார். எனவே இறைச்செய்தியின் படி  வாழ்ந்து காட்ட தயங்காமல் முன்வருவோமா..?


God calls upon us to demonstrate to others—through our conduct—His Good News, the truth that He alone is the true God, and that salvation is found solely through Him. Therefore, shall we step forward without hesitation to live our life and exemplify this divine message?


- Friday in the Third week of Easter - Cycle 2

Thursday, April 23, 2026

Apr 23

 மனதில் பதிக்க


“இயேசு கிறிஸ்து இறைமகன் என்று நம்புகிறேன்” என்றார். - திருத்தூதர்பணிகள் 8:37


I believe that Jesus Christ is the Son of God. - Acts 8:37


                                                                  

மனதில் சிந்திக்க


இயேசு ஆண்டவர் ஒருவரே நம் கடவுள் என்பதை நாம் முழுமையாக நம்பும் போது தான் நம்மில் முழுமையான மாற்றத்தை ஏற்படுத்த முடிவதோடு நாம் மகழ்ச்சியாகவும் இருக்க முடிகிறது. எனவே புறச்சூழல் மாற்றத்தை விட நம் அகச்சூழலை இயேசுவுக்காக இன்னும் அதிகமாக மாற்ற முயற்சிப்போம் ...


It is only when we fully believe that the Lord Jesus alone is our God that a complete transformation can take place within us, enabling us to experience true happiness. Therefore, let us strive to transform our inner selves for Jesus even more than we attempt to change our external circumstances.


-- Thursday in the Third week of Easter - cycle 2


Wednesday, April 22, 2026

Apr 22

 மனதில் பதிக்க


என்னிடம் வருபவரை நான் புறம்பே தள்ளிவிடமாட்டேன். - யோவான் 6:37


I will not reject anyone who comes to me - John 6:37


                                                         மனதில் சிந்திக்க


நாம் எப்படிப்பட்ட பாவங்களை செய்து கடவுளை விட்டு தூரமாக போயிருந்தாலும் மீண்டும் அவரிடத்தில் போய் அவரோடு சேர வேண்டும் என்றே கடவுள் ஆசைப்படுகின்றார். அதுவே அவரது திட்டமாகவும் இருக்கின்றது. எனவே அடிக்கடி நல்ல பாவசங்கீத்தனம் செய்து இயேசுவோடு பயணிக்கலாமா...


No matter what kind of sins we may have committed—or how far we may have drifted away from God—He desires that we return to Him and be reunited with Him. Indeed, that is His very plan. Therefore, shall we make frequent, sincere and complete confession and journey with Jesus?


-- Wednesday in the Third week of Easter





Tuesday, April 21, 2026

Apr 21

 மனதில் பதிக்க


வாழ்வு தரும் உணவு நானே. என்னிடம் வருபவருக்குப் பசியே இராது; - யோவான் 6:35


I am the bread of life; whoever comes to me will never hunger - John 6:35


                                                        மனதில் சிந்திக்க


இயேசு ஆண்டவர் நிறைவாழ்வு தரும் உணவாக நற்கருணையை குறிப்பிடுகிறார். ஏனெனில் அதிலே தான் தன்னை மிகவும் தாழ்த்திக் கொண்டு நமக்காக வீற்றிருக்கிறார். அவரே நம் ஆன்மாவை காத்துக்கொள்வார். எனவே முடிந்தால் தினமும் அவரிடம் போய் அமைதியாக சிறிதுநேரம் அமர்ந்துவிட்டு வருவோமா?


The Lord Jesus refers to the Eucharist as the food that grants fullness of life. For it is therein that He has humbled Himself most profoundly to dwell among us. He Himself will safeguard our souls. Therefore, if possible, shall we receive Him daily in the Holy Mass—or, alternatively, be in the chapel and adore His presence?


-- Tuesday in the Third week of Easter - Cycle 2




Monday, April 20, 2026

Apr 20

 மனதில் பதிக்க


அழிந்து போகும் உணவுக்காக உழைக்க வேண்டாம். நிலைவாழ்வு தரும் அழியாத உணவுக்காகவே உழையுங்கள். - யோவான் 6:27


Do not work for food that perishes but for the food that endures for eternal life, which the Son of Man will give you. - John 6:27


                                                      மனதில் சிந்திக்க


நமது வாழ்வில் பொருளாதார தேவைகள் தான் நமக்கு நிறைவைத்தருவதாக எண்ணி ஓடிக்கொண்டிருக்கின்றோம். ஆனால் நமது இயேசு ஆண்டவரோடு நமக்கு இருக்கின்ற மிக நெருக்கமான உறவே நம்மை அழியா வாழ்விற்கு அழைத்துச்செல்கின்றன என்பதை நினைத்து வாழ முயற்சிப்போம் .


We spend our lives ceaselessly striving, under the impression that it is our material needs that bring us true fulfillment. However, let us strive to live with the realization that it is, in fact, our intimate relationship with our Lord Jesus that leads us toward eternal life.


-- Monday of the third week of Easter - Cycle 2



Sunday, April 19, 2026

Apr 19

 மனதில் பதிக்க


நான் ஆண்டவரை எப்போதும் என் கண்முன் வைத்துள்ளேன்; அவர் என் வலப்பக்கம் உள்ளார்; எனவே நான் அசைவுறேன். - திருத்தூதர்பணிகள் 2:25


‘I saw the Lord ever before me, with him at my right hand I shall not be disturbed. Therefore my heart has been glad and my tongue has exulted; - Acts 2:25


 மனதில் சிந்திக்க


நமது வாழ்வில் ஆண்டவர் எப்போதும் இருந்தால் அவர் நம்மை ஒருபோதும் எந்த தீமைக்கோ அல்லது பாதாளத்திற்கோ ஒப்புவிக்க மாட்டார் என்பது உண்மை. எனவே இறைவனை நமது வாழ்வில் எப்போதும் தக்கவைத்துக் கொள்வதற்கு எல்லா விதமான ஊணியல்புகளிலிருந்தும் விடுதலை பெற்றுக்கொள்வோம்.


It is true that if the Lord is always present in our lives, He will never abandon us to any evil or to the depths of the abyss. Therefore, let us liberate ourselves from all forms of worldly attachments so that we may always retain God in our lives.


-- Third Sunday in Easter - Year A


Saturday, April 18, 2026

Apr 18

 


மனதில் பதிக்க

அவர்களை அவர் நோக்கி: நான்தான், பயப்படாதிருங்கள் என்றார் - யோவான் 6:20


But he said to them, “It is I. Do not be afraid.” - John 6:20


                                                        மனதில் சிந்திக்க


இயேசுவின் துணையில், பயத்திற்கு இடமில்லை, ஏனென்றால் அவருடைய பராமரிப்பு நமது பயணத்தின் ஒவ்வொரு அடியையும் பாதுகாக்கிறது. அவர் நமது தேவைகள் அனைத்தையும் சந்திப்பவர் என்பதை அறிந்து நாம் பயத்திலிருந்து விடுதலை பெறுகிறோம். ஒரு வார்த்தையினால் அவரால் சீறிப்பாயும் கடலை அமைதிப்படுத்த முடியுமென்றால், நம் வாழ்க்கையில் அவரால் கையாள முடியாத அளவிற்குப் பெரிய புயல் எது இருக்க முடியும்?


In the company of Jesus, fear finds no home, for His providence covers every step of our journey. we are liberated from fear, knowing He is the provider of all our needs. If He can calm the raging seas with a single word, what storm in our life is too big for Him to handle?


-- Saturday of the second week of Easter - Cycle 2


Friday, April 17, 2026

Apr 17

 


மனதில் பதிக்க

இயேசு அப்பங்களை எடுத்துக் கடவுளுக்கு நன்றி செலுத்தி அமர்ந்திருந்தோருக்குக் கொடுத்தார். - யோவான் 6:11


Then Jesus took the loaves, gave thanks, and distributed them to those who were reclining. - John 6:11


                                                       மனதில் சிந்திக்க


தாராள மனதுடன் நம்மிடம் உள்ளதை நாம் அர்ப்பணிக்கும்போது, அவர் அதைத் தேவையை விட அதிகமாகப் பெருக்குகிறார். நமது "குறைவை" அவர் "நிறைவாக" மாற்றுகிறார். நம்மிடம் உள்ள பற்றாக்குறையை எண்ணிக் கவலைப்படுவதை விட்டுவிட்டு, அவருடைய அளவில்லாத ஆசீர்வாதத்தில் வாழத் தொடங்குவோமா?


When we offer what we have with a generous heart, He multiplies it to exceed the need, turning our "not enough" into more than enough. Shall we stop relying on our own scarcity and start living in His abundance?


-- Friday of the second week of Easter - Cycle 2




Thursday, April 16, 2026

Apr 16

 


மனதில் பதிக்க

மேலிருந்து வருகிறவர் எல்லாவற்றிற்கும் மேலானவர்; பூமியிலிருந்து வருகிறவன் பூமியைச் சேர்ந்தவன், பூமியைச் சேர்ந்தவைகளைப் பேசுகிறான்.— யோவான் 3:31


The one who comes from above is above all. The one who is of the earth is earthly and speaks of earthly things. -  John 3:31


                                                        மனதில் சிந்திக்க


உலக வாழ்க்கை, கஷ்டங்கள் நிறைந்ததாக இருந்தாலும், இயேசுவோடு நாம் கொள்ளும் உறவு இருண்ட காலங்களிலும் நமக்கு நம்பிக்கையைத் தருகிறது. எனவே, உலக காரியங்களுக்கு முதலிடம் கொடுப்பதை நிறுத்திவிட்டு, நம் கவனத்தை இயேசுவின் மீது திருப்புவோமா? 


Even though life on earth is full of limits and hardships, connecting with the one from above gives us hope even in our darkest moments, should we stop prioritizing earthly things and put our focus on Jesus instead?


-- Thursday of the second week of Easter -Cycle 2




Wednesday, April 15, 2026

Apr 15

 


மனதில் பதிக்க

உண்மைக்கேற்ப வாழ்பவர்கள் ஒளியிடம் வருகிறார்கள். இதனால், அவர்கள் செய்யும் அனைத்தையும் கடவுளோடு இணைந்தே செய்கிறார்கள் என்பது வெளியாகும். - யோவான் 3:21


But whoever lives the truth comes to the light, so that his works may be clearly seen as done in God. - John 3:21


                                                         மனதில் சிந்திக்க


இந்த ஒளியை நாம் ஏற்று வாழும்போது, நம் வழியாக இறைவனின் திருமுன்னிலை வெளிப்படுகிறது; இது மற்றவர்களும் தங்கள் உள்ளத்து இருளைக் களைந்து, உண்மையான விசுவாசத்துடன் வாழத் தூண்டுகோலாக அமைகிறது. நம்மைச் சூழ்ந்திருப்பவர்களின் வாழ்வில் இறைவனின் ஒளி இன்னும் மேலோங்கி நிற்க, நாம் எவ்விதம் சான்றுகளாகத் திகழலாம்?


By embracing this light, we allow God’s presence to radiate through our lives, empowering others to step out of the shadows and pursue a journey of authentic faith. How can we more intentionally let His presence shine through us to touch the lives of those we encounter?


-- Wednesday in the second week of Easter - Cycle 2


Tuesday, April 14, 2026

Apr 14

 


மனதில் பதிக்க

தம் ஒரே மகன் மீது நம்பிக்கை கொள்ளும் எவரும் அழியாமல் நிலைவாழ்வு பெறும் பொருட்டு அந்த மகனையே அளிக்கும் அளவுக்குக் கடவுள் உலகின்மேல் அன்பு கூர்ந்தார். - யோவான்3:16


For God so loved the world that he gave his only Son, so that everyone who believes in Him might not perish but might have eternal life. - John 3:16


மனதில் சிந்திக்க

இயேசுவின் மூலம் கடவுள் நமக்கும் அவருக்குமான இடைவெளியைக் குறைத்தார். இது நமது தகுதியால் அல்ல, அவருடைய கிருபையால் நமக்குக் கிடைத்த பரிசு. அழிவிலிருந்து நம்மைப் பாதுகாத்து நித்திய ஜீவனைத் தரும் இந்த அன்பு, மற்றவர்களையும் நாம் நிபந்தனையின்றி நேசிக்கத் தூண்டுகிறதல்லவா?


God bridged the gap between humanity and divinity by giving His Son, Jesus. This gift offers eternal life to everyone who believes—not as a reward for merit, but as an act of pure grace that rescues us from perishing

can we let His example inspire us to love others just as unconditionally?


-- Tuesday of the second week of Easter - Cycle 2


Monday, April 13, 2026

Apr 13

 


மனதில் பதிக்க

இயேசு அவரைப் பார்த்து, "ஒருவர் தண்ணீராலும் தூய ஆவியாலும் பிறந்தாலன்றி இறையாட்சிக்கு உட்பட இயலாது என உறுதியாக உனக்குச் சொல்கிறேன்." யோவான் 3:5


Jesus answered, “Very truly I tell you, no one can enter the kingdom of God unless they are born of water and the Spirit. John3:5


மனதில் சிந்திக்க

காற்று கண்ணுக்குத் தெரியாவிட்டாலும் அதன் விளைவுகள் மறுக்க முடியாதவை; அதுபோலவே தூய ஆவியார் நமக்குள்ளே வல்லமையுடன் செயல்படுகிறார். நமது அன்றாட வாழ்வில் இறைவன் தரும் தெய்வீகத் தூண்டுதல்களுக்கு ஏற்ப, நமது சொந்தத் திட்டங்களிலிருந்து விலகி, நெகிழ்வுத்தன்மையுடனும் ஆர்வத்துடனும் செயல்படுவோமா?


Just as the wind is invisible but its effects are undeniable, the Holy Spirit works powerfully within us. Shall we be flexible and responsive, shifting our focus from our own plans to the divine nudges God places in our day-to-day routines?


-- Monday of the Second Week of Easter - Cycle 2


Sunday, April 12, 2026

Apr 12

 மனதில் பதிக்க

“அப்போது இயேசு அங்கு வந்து அவர்கள் நடுவில் நின்று, “உங்களுக்கு அமைதி உரித்தாகுக!” என்று வாழ்த்தினார். - யோவான்  20:19-31


Jesus came and stood in their midst and said to them, “Peace be with you.” - John 20:19-31



மனதில் சிந்திக்க

இயேசு நம்மை நாமே 'சரிசெய்யும்' வரை காத்திருப்பதில்லை. அவர் நம்முடைய ஆழ்ந்த கவலைகளுக்குள்ளும் சந்தேகங்களுக்குள்ளும் தாமாகவே நுழைந்து, நமக்கு முழுமையான அமைதியையும் ஆறுதலையும் தருகிறார். நம் இதயக் கதவுகள் பயத்தினால் பூட்டப்பட்டிருந்தாலும், விசுவாசத்தின் வழியாக அவரை உள்ளே நுழைய நாம் அனுமதிப்போமா?


Jesus doesn’t wait for us to "fix" ourselves before He shows up. He enters our quiet anxieties and deepest doubts, offering a peace that brings wholeness and comfort. Even when our hearts feel bolted shut, will we let Him in through the simple door of faith?


-- Second Sunday of Easter

Saturday, April 11, 2026

Apr 11

 மனதில் பதிக்க

“உலகெங்கும் சென்று படைப்பிற்கெல்லாம் நற்செய்தியைப் பறைசாற்றுங்கள்”  - மாற்கு 16: 15


“Go into all the world and preach the gospel to all creation" - Mark 16: 15



மனதில் சிந்திக்க

இயேசு நம்மை நற்செய்தியின் தூதுவர்களாக மட்டும் அழைக்கவில்லை; மாறாக, அவருடைய ஒளியைப் பிரதிபலிக்கும் கண்ணாடியாகவும் இருக்க அழைக்கிறார். விவிலியத்தை கற்க ஒருவர் நம் வாழ்க்கை முறையை மட்டும் பார்த்தார் என்றால் நாம் அவருக்கு என்ன கற்றுக்கொடுக்க போகிறோம்? சிந்திப்போமா?


Jesus does not merely call us to be messengers of a text, but to be mirrors of His light. If our lives were the only 'Bible' someone ever read, what would they learn from us? Let's think about it.


-- Saturday in the Octave of Easter


Friday, April 10, 2026

Apr 10

 மனதில் பதிக்க

“அவர் ஆண்டவர் தாம் என்று அவர்கள் அறிந்து கொண்டார்கள்.”  யோவான் 21: 12


“The disciples knew it was the Lord.”  John 21: 12


மனதில் சிந்திக்க

சீடர்கள், அது ஆண்டவர் தான் என்கிற அசைக்க முடியாத நம்பிக்கையில் இருந்ததால், 'நீர் யார்?' என்று அவரிடம் கேட்கத் துணியவில்லை. நம்முடைய வாழ்க்கையில் எல்லாம் சாதகமாக நடக்கும்போது மட்டும் கடவுளின் பிரசன்னத்தின் மீது உறுதியான நம்பிக்கை கொள்கிறோமா, அல்லது தோல்விகள் மற்றும் நிச்சயமற்ற நிலைகளின் போதும் அந்த நம்பிக்கை நிலைத்திருக்கிறதா?


The disciples were so consumed by the conviction that it was the Lord that they did not dare to ask His identity. Do we maintain a steadfast belief in God’s presence only when life is favorable, or does it endure even during failures and uncertainty?


-- Friday in the Octave of Easter


Thursday, April 9, 2026

Apr 09

 மனதில் பதிக்க

“உங்களுக்கு அமைதி உரித்தாகுக!'' - லூக்கா 24: 36


"Peace be with you" - Luke 24: 36


மனதில் சிந்திக்க

இறை அருள் நம்மில் செயலாற்றும் போது நாம் அதை புரிந்து கொள்ளாததால்  சீடர்களைப் போலவே பதற்றப்படுகிறோம். இந்த மாற்றங்கள் மீது நமக்கு எவ்விதக் கட்டுப்பாடும் இல்லாத நிலையில், இறை அருளால் வரும் மாற்றத்தை  கண்டு அஞ்சுகிறோமா  அல்லது அவரது கிருபையை மன அமைதியோடு தாழ்மையாக ஏற்றுக்கொள்கிறோமா ?


When God moves in our lives, we feel anxious like the disciples because it’s unfamiliar or overwhelming. Are we trembling at the changes God brings to our lives, over which we have no control?  Or are we trusting His ‘Shalom’ more than our own scare, even when the cost is high?


-- Thursday in the octave of Easter


Wednesday, April 8, 2026

Apr 08

 மனதில் பதிக்க


“அவர்கள் கண்கள் திறந்தன. இயேசுவை அடையாளம் கண்டுகொண்டார்கள்”  - லூக்கா 24: 31


“And their eyes were opened, and they knew Him” - Luke 24: 31



மனதில் சிந்திக்க


சீடர்களின்  கண்கள், தங்கள் சொந்த எதிர்பார்ப்புகளாலும் துயரத்தாலும் மறைக்கப்பட்டிருந்து. இயேசு அப்பத்தைப் பிட்டபோது, ​​அவர்களின் புறப் பார்வை விலகி, ஆன்மீக வெளிச்சம் பிறந்தது. எப்போதும் நம் அருகிலேயே நடந்துவரும் நம் மீட்பரை நம்மால் உண்மையாகவே அடையாளம் கண்டுகொள்ள முடிகிறதா? அல்லது, நம்முடைய சொந்தப் போராட்டங்களின் சுமையால் நம் கண்கள் மறைக்கப்பட்டதாகவே இருக்கிறதா?


The disciples were blinded by their own expectations and grief. But when Jesus broke the bread, their physical sight gave way to spiritual revelation. Are we truly able to recognize our Savior who walks beside us always, or are we still so blinded by the weight of our own struggles and problems?


-- Wednesday in the Octave of Easter