Wednesday, August 28, 2024

Aug 28

 மனதில் பதிக்க…


On the outside you appear to people as righteous but on the inside you are full of hypocrisy and wickedness Matt 23: 28

வெளியே மக்களுக்கு நேர்மையாளராய்த் தோற்றமளிக்கிறீர்கள். ஆனால் உள்ளேயோ போலித்தனமும் நெறிகேடும் நிறைந்தவர்களாய் இருக்கிறீர்கள். மத் 23: 28


மனதில் சிந்திக்க…


True beauty and goodness comes from within the hearts and minds. Let us continue to ask Holy Spirit to renew our internal self with God's wisdom and love.

உண்மையான அழகும் நன்மையும் இதயத்திலும் மனதிலும் இருந்து வருகிறது. இறைவனுடைய ஞானத்தினாலும் அன்பினாலும் நம்முடைய அகத்தை புதுப்பிக்க தூய ஆவியானவரை தொடர்ந்து  வேண்டுவோம்.


Tuesday, August 27, 2024

Aug 27

 மனதில் பதிக்க…

Blind Pharisee! First clean the inside of the cup and dish, and then the outside also will be clean. Matt 23: 26

குருடனான பரிசேயனே! பாத்திரங்களின் வெளிப்புறம் சுத்தமாகும்படி அவைகளின் உட்புறத்தை முதலாவது சுத்தமாக்கு. மத் 23: 26


மனதில் சிந்திக்க…

Sometimes we let blind spots to blur our vision of God's Kingdom and His ways. Let us think about our outward practices, and ask God to reveal what is truly important and necessary. Let God's love shapes our minds and transforms our hearts and actions. 

கடவுளுடைய அரசு மற்றும் அவருடைய வழிகள் பற்றிய நமது பார்வையை மங்கலாக்க சில சமயங்களில்  அனுமதிக்கிறோம். நம்முடைய வெளிப்புற நடைமுறைகளைப் பற்றி சிந்தித்து, உண்மையிலேயே முக்கியமான மற்றும் அவசியமானதை மட்டும் வெளிப்படுத்தும்படி கடவுளிடம் கேட்போம். அவர் அன்பு, நம் மனதை வடிவமைத்து, நம் இதயங்களையும், நம் செயல்களையும் மாற்றட்டும்.

Monday, August 26, 2024

Aug 26

 மனதில் பதிக்க…


Your endurance and faithfulness in all the persecutions, hardships and sufferings are evidence that God's judgment is just, and as a result you will be counted worthy of the kingdom of God.  2 Thes 1:5

உங்கள் துன்பங்களுக்கிடையே நீங்கள் காட்டிய சகிப்புத்தன்மையையும் இன்னல்களுக்கு இடையே நீங்கள் கொண்டிருந்த மனவுறுதியையும் நம்பிக்கையையும், கடவுளின் தீர்ப்பு நீதியானது என்பதற்கு அறிகுறியாக அமைகின்றன. இவை அனைத்தின் விளைவாக நீங்கள் இறையாட்சிக்குத் தகுதி உள்ளவர்கள் ஆவீர்கள். 2 Thes 1:5

மனதில் சிந்திக்க…


When the Lord Jesus knocks on the door of our heart let us be ready to answer and receive him. Let us not shut the door to The heavenly Kingdom through our stubborn pride or disbelief.

இயேசு நம் இதயக் கதவைத் தட்டும்போது, ​​அவருக்குப் பதில் சொல்லவும், அவரை ஏற்றுக்கொள்ளவும் ஆயத்தமாவோம். நம்முடைய பிடிவாதம், பெருமை மற்றும் நம்பிக்கையின்மையின் மூலம் இறையாட்சிக் கதவை அடைக்காமல் இருப்போம்.


Sunday, August 25, 2024

Aug 25

 மனதில் பதிக்க…


Master to whom shall we go? You have the words of eternal life.  John 6:68

யாரிடம் செல்வோம் இறைவா வாழ்வு தரும் வார்த்தையெல்லாம் உம்மிடம் அன்றோ உள்ளன. யோவான் :6: 68 



மனதில் சிந்திக்க…


Our Lord Jesus has the words of everlasting life. Let us cast aside all our doubts and fears, freely embrace His word and with complete trust and joy surrender all to him. Let our prayers be Thy will be done.

நம் ஆண்டவர் இயேசுவிடம் நித்திய வாழ்வின் வார்த்தைகள் உள்ளன. நம்முடைய சந்தேகங்கள் மற்றும் பயங்கள் அனைத்தையும் ஒதுக்கி வைத்துவிட்டு, சுதந்திரமாக அவருடைய வார்த்தையை ஏற்றுக்கொண்டு, முழுமையான நம்பிக்கையுடனும் மகிழ்ச்சியுடனும் அனைத்தையும் அவரிடம் ஒப்படைப்போம். நம் ஜெபங்கள் உமது சித்தம் நிறைவேறட்டும் என இருப்பதாக. 


Saturday, August 24, 2024

Aug 24

 மனதில் பதிக்க…


“You believe that just because I said I saw you under the fig tree. You are going to see greater things than that" (John 1:50 

“உம்மை அத்திமரத்தின் கீழ்க் கண்டேன் என்று உம்மிடம் சொன்னதாலா நம்புகிறீர்? இதை விடப் பெரியவற்றைக் காண்பீர்” என்றார்." (யோவான் 1: 50)


மனதில் சிந்திக்க…


Like Nathaniel even we at many times find Jesus when there is a wonder/miraculous thing in our life. If we are able to stay united with God even during our challenging times, can we also see greater things in life?


நத்தனியேலைப்போல நாமும் பல நேரங்களில் நமது வாழ்கையில் நடக்கும் அற்புதங்களில் கடவுளின் மகிமையை கண்டுகொள்கிறோம்..

வாழ்க்கையில் வரும் துன்ப வேளையிலும் இயேசுவோடு நாம் இணைந்திருந்து  இன்னும் பெரியவற்றை இயேசு நிகழ்த்துவதை காண்போமா.. சிந்திப்போம்…


Friday, August 23, 2024

Aug 23

 மனதில் பதிக்க…


“You must love your neighbour as yourself" (Matthew 22:39) 

“உன்மீது நீ அன்பு கூர்வது போல உனக்கு அடுத்திருப்பவர்மீதும் அன்பு கூர்வாயாக" (மத்தேயு 22: 39)


மனதில் சிந்திக்க…


Love is the foundation of our Christianity. Jesus not only preached the commandment to love one another but he also practised and showed us how to do it. 

So we the followers of Christ, can we also love our neighbours and make this world the kingdom of God??


அன்பு தான் நம் கிறிஸ்தவத்தின் அடித்தளம்.. அன்புக்காட்ட இயேசு கட்டளையை மட்டும் விடுக்கவில்லை மாறாக அதை வாழ்ந்தும் காட்டினார்..

எனவே கிறிஸ்துவை பின்பற்றும் நாமும் அவரைப்போல் நம் அயலாரை நேசித்து அவரின் இராஜியத்தை இவ்வுலகின் நிலைநாட்டுவோமா.. சிந்திப்போம்…


Thursday, August 22, 2024

Aug 22

 மனதில் பதிக்க…

“For many are invited but not all are chosen." (Matthew 22:14)

“அழைப்புப் பெற்றவர்கள் பலர், ஆனால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களோ சிலர்" (மத்தேயு 22: 14)


மனதில் சிந்திக்க…

Everyone of us born as Christians have been invited by God to know about him. But Jesus gives us a strict warning that it doesn't guarantee us the kingdom of God.
Are we ready to listen to the word of God and follow it in our life to become the Chosen ones of God?


கிறிஸ்துவர்களாய் பிறந்த நாம் ஒவ்வொருவருமே கடவுளின் அழைப்பை பெற்றவர்கள். ஆனால் அதுவே விண்ணரசில் நுழைய தகுதி ஆகிவிடாது என்று இயேசு நமக்கு எச்சரிக்கை விடுக்கிறார்..

கடவுளின் வார்த்தையைக் கேட்டு அதனை நம் வாழ்க்கையில் கடைப்பிடித்து,  நாமும் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் ஆவோமா? சிந்திப்போம்…

 

Wednesday, August 21, 2024

Aug 21

 மனதில் பதிக்க…

“And everyone who has left houses, brothers, sisters, father, mother, children or land for the sake of my name will receive a hundred times as much, and also inherit eternal life." (Matthew 19:29) 

“என் பெயரின் பொருட்டு வீடுகளையோ, சகோதரர்களையோ, சகோதரிகளையோ, தந்தையையோ, தாயையோ, பிள்ளைகளையோ, நில புலங்களையோ விட்டுவிட்ட எவரும் நூறு மடங்காகப் பெறுவர். நிலை வாழ்வையும் உரிமைப் பேறாக அடைவர்." (மத்தேயு 19: 29)


மனதில் சிந்திக்க…

Christian life is focused on sacrifices. We do lot of sacrifices for the mission of God. Jesus makes a promise that every sacrifice be it small or big will not go unrewarded.

Are we ready to do sacrifices whatever we can to do the God’s work to get the reward of eternal life??


கிறிஸ்துவ வாழ்வு தியாகத்தை மைய படுத்தியது. நாம் கடவுளின் பணிக்காக பல்வேறு வகைகளில் தியாகம் செய்கிறோம்.. எத்தகைய தியாகமும் சிரிதோ பெரிதோ அதற்கான கைமாறு நிச்சயம் உண்டு என்று இயேசு வாக்களிக்கிறார்..

நிலை வாழ்வை பெற இயேசுவின் பணிக்காக நம்மால் முயன்ற தியாகத்தை செய்ய தயாராக உள்ளோமா? சிந்திப்போம்…



Tuesday, August 20, 2024

Aug 20

 மனதில் பதிக்க…

“And everyone who has left houses, brothers, sisters, father, mother, children or land for the sake of my name will receive a hundred times as much, and also inherit eternal life." (Matthew 19:29) 

“என் பெயரின் பொருட்டு வீடுகளையோ, சகோதரர்களையோ, சகோதரிகளையோ, தந்தையையோ, தாயையோ, பிள்ளைகளையோ, நில புலங்களையோ விட்டுவிட்ட எவரும் நூறு மடங்காகப் பெறுவர். நிலை வாழ்வையும் உரிமைப் பேறாக அடைவர்." (மத்தேயு 19: 29)


மனதில் சிந்திக்க…

Christian life is focused on sacrifices. We do lot of sacrifices for the mission of God. Jesus makes a promise that every sacrifice be it small or big will not go unrewarded.

Are we ready to do sacrifices whatever we can to do the God’s work to get the reward of eternal life??


கிறிஸ்துவ வாழ்வு தியாகத்தை மைய படுத்தியது. நாம் கடவுளின் பணிக்காக பல்வேறு வகைகளில் தியாகம் செய்கிறோம்.. எத்தகைய தியாகமும் சிரிதோ பெரிதோ அதற்கான கைமாறு நிச்சயம் உண்டு என்று இயேசு வாக்களிக்கிறார்..

நிலை வாழ்வை பெற இயேசுவின் பணிக்காக நம்மால் முயன்ற தியாகத்தை செய்ய தயாராக உள்ளோமா? சிந்திப்போம்…

Monday, August 19, 2024

Aug 19

 மனதில் பதிக்க 


“நிறைவுள்ளவராக விரும்பினால் நீர் போய், உம் உடைமைகளை விற்று ஏழைகளுக்குக் கொடும். அப்பொழுது விண்ணகத்தில் நீர் செல்வராய் இருப்பீர்." (மத்தேயு 19: 16-22)


"If you wish to be perfect, go and sell your possessions and give the money to the poor, and you will have treasure in heaven" (Matthew 19:16-22)




 மனதில் சிந்திக்க


God created the rich and the poor so that rich could share their wealth and help the poor..


Being rich is not a mistake but getting rich with the blessings of God and not using the wealth to help others doesn't please God..


Are we ready to be generous to share our wealth with the poor and get the treasure in heaven?


கடவுள் ஏழை பணக்காரர் என படைத்ததே அவர்களின் அதிகப்படியான செல்வத்தை எழைகளோடு பகிர்ந்துக்கொள்ளும் மனதை வளர்ப்பதற்காகவே..


பணக்காரர்களாக இருப்பது தவறல்ல மாறாக கடவுளின் ஆசீர்வாதத்தால் பெற்ற செல்வத்தை பிறருக்கு பகிராமல் தமக்கென மட்டுமே வாழ்வதையே இயேசு விரும்புவதில்லை..


நாமும் இவ்வுலகில் பகிர்ந்து வாழ்ந்து வின்னரசில் பணக்காரர்களாய் இருக்க தயாராக உள்ளோமா? சிந்திப்போம்