Wednesday, September 16, 2026

Sep 16

 மனதில் பதிக்க

“ஞானம் மெய்யானது என்பதற்கு அதை ஏற்றுக்கொண்டோரின் செயல்களே சான்று”  -  லூக்கா  7 : 35

“But wisdom is proved right by all her children” -  Luke 7: 35

                                                           மனதில் சிந்திக்க

கடவுளின் ஞானம் உலகின் கண்களுக்கு மறைவாக இருக்கலாம்; ஆனால், அவருடைய சித்தப்படி வாழ்ந்து பரிசுத்தத்தின் கனிகளைத் தருவோரின் வாழ்வில் அது வெளிப்படுகிறது. விசுவாசத்துடனும் கீழ்ப்படிதலுடனும் கடவுளின் வழியைத் தேர்ந்தெடுத்து, நம் வாழ்வின் மூலம் அவருடைய ஞானத்திற்குச் சாட்சியாக வாழ்கிறோமா, அல்லது இன்னும் உலகத்தின் ஆசைகளைப் பின்பற்றுகிறோமா? 

God’s wisdom may be hidden from the eyes of the world, yet it is revealed through the lives of those who surrender themselves to His will and bear fruits of holiness. Are we humbly choosing His ways with faith and obedience, allowing our lives to become a living witness to His wisdom, or are we still following the desires of this world?

-- Twenty-Fourth Wednesday in Ordinary Time - Cycle 2


Tuesday, September 15, 2026

Sep 15

 மனதில் பதிக்க

இயேசு தம் சீடரிடம்,  "இவரே உம் தாய்" என்றார் -  யோவான்  19: 26

Jesus said to the disciple, “Here is your mother” - John 19: 26

                                                         மனதில் சிந்திக்க

இயேசு சிலுவையில் தம் உயிரை ஒப்புக்கொடுத்தபோது, ​​தமக்கு மிகவும் பிரியமான அன்னை மரியாளை நம்மிடம் ஒப்படைத்தார். நம் அன்னை நம்முடைய போராட்டங்களின்போது நம்மை மென்மையாக வழிநடத்தி, இயேசுவிடம் நம்மை இன்னும் நெருக்கமாகச் சேர்க்கிறார். அன்னை மரியா நம் இதயங்களைச் செதுக்கி, நித்திய அரசை நோக்கி நம்மை வழிநடத்த நாம் அனுமதிக்கிறோமா, அல்லது இன்னும் பாவத்திலேயே நிலைத்திருக்கத் தேர்ந்தெடுக்கிறோமா? 

As Jesus surrendered His life on the Cross, He entrusted His beloved Mother Mary to us. Our Mother gently leads us through our struggles, drawing us ever closer to Her Son, Jesus. Are we allowing Mother Mary to mold our hearts and guide us toward the eternal Kingdom, or are we still choosing to remain in sin?

-- Twenty-Fourth Tuesday in Ordinary Time -Cycle 2




Monday, September 14, 2026

Sep 14

 மனதில் பதிக்க

“தம் மகனையே அளிக்கும் அளவுக்குக் கடவுள் உலகின் மேல் அன்பு கூர்ந்தார் ”  - யோவான்   3: 16


“For God so loved the world that He gave His one and only Son “- John 3: 16

                                                         மனதில் சிந்திக்க

நிலையற்றதும் ஆழமற்றதுமான அன்பு நிறைந்த இவ்வுலகில், நம் அப்பா தந்தை நம்மை என்றும் மாறாத அன்புடன் நேசிக்கிறார். நாம் பாவத்தில் விழுந்தாலும் அவர் நம்மைக் கைவிடுவதில்லை. ஒவ்வொரு நாளும் அவருடைய மாறாத அன்பை நாம் உணர்கிறோமா, அல்லது அவரை மறந்து, நாம் இன்று அடைந்திருக்கும் அனைத்திற்கும் காரணம் நாமே என்று நினைக்கிறோமா?


In a world of fleeting and superficial love, our Abba Father loves us with an everlasting love, never abandoning us even when we fall into sin. Do we recognize His unfailing love each day, or do we forget Him and believe that we are the reason for all that we have become?

-- Twenty-Fourth Monday in Ordinary Time - Cycle 2


Sunday, September 13, 2026

Sep 13

 மனதில் பதிக்க

“நான் உனக்கு இரக்கம் காட்டியதுபோல நீயும் உன் உடன்பணியாளருக்கு இரக்கம் காட்டியிருக்க வேண்டும் அல்லவா?”  மத்தேயு  18: 33


“Shouldn't you have had mercy on your fellow servant just as I had on you?” Matthew 18: 33

                                                      மனதில் சிந்திக்க

நித்திய வாழ்வைப்  பெறுவதற்காக அவரிடமிருந்து நாம் பெற்ற அதே இரக்கத்தைப் பிறருக்கும் காட்டுமாறு இயேசு நம்மிடம் வெறும் வேண்டுகோள் மட்டும் விடுக்கவில்லை, மாறாக அதைக் கட்டளையிடுகிறார்.  கிறிஸ்துவின் போதனைகளின்படி வாழ்ந்து, அவருடைய இரக்கத்தையும் மன்னிப்பையும் நம் வாழ்வில் வெளிப்படுத்துகிறோமா? அல்லது, ஆன்மீக மந்தநிலையில் உலகத்தின் வழிகளைப் பின்பற்றுகிறோமா?

Jesus does not merely ask us, but commands us to show others the same mercy we have received from Him to gain eternal life. Are we truly living according to Christ’s precepts, allowing His mercy and forgiveness to transform our lives, or are we becoming spiritually lethargic and following the ways of the world?

-- Twenty-Fourth Sunday in Ordinary time - Year A


Saturday, September 12, 2026

Sep 12

 மனதில் பதிக்க

நான் உமக்கு நன்றிப் பலி செலுத்துவேன்.திருப்பாடல் - 116:17

To you, Lord, I will offer a sacrifice of praise. Psalm - 116:17


                 மனதில் சிந்திக்க

ஆண்டவரே! மகிழ்ச்சி, சுமை, ஐயம், அருள் ஆகிய அனைத்திலும் நீர் எங்களை உண்மையுடன் தாங்கி நடத்தினீர். எங்கள் நன்றியையும், பணியையும், போராட்டங்களையும், நம்பிக்கையையும் உமக்கு அர்ப்பணிக்கிறோம். ஒவ்வோர் ஆசீர்வாதமும் உமது கொடை என்றும், ஒவ்வோர் சோதனையும் உம்மை நோக்கிய பாதை என்றும் உணர எங்களுக்குக் கற்பியுங்கள். இன்று இன்னும் அதிக நம்பிக்கையுள்ள இதயத்தோடு உம்மைப் புகழ எங்களுக்கு வரம் தாரும்.


Lord, you have faithfully carried me through joy, burden, doubt, and grace. I offer You our gratitude, work, struggles, and hope. Teach us to recognize every blessing as Your gift and every trial as a path toward You. Grant us the grace to praise You today with hearts filled with even greater faith and confidence.


-- Twenty-Third Saturday in Ordinary Time - Cycle 2




Friday, September 11, 2026

Sep 11

 மனதில் பதிக்க

பார்வையற்ற ஒருவர் பார்வையற்ற வேறொருவருக்கு வழிகாட்ட இயலுமா?. - லூக்கா - 6: 39

Can a blind person guide a blind person?. - Luke - 6:39


                                                           மனதில் சிந்திக்க

இயேசு, பிறரைத் தீர்ப்பிடுவதற்கு முன் நம் இதயங்களை ஆராய அழைக்கிறார். நம் கண்ணிலுள்ள “உத்திரம்,” திருத்துவதற்கு முன் தாழ்மை அவசியம் என்பதை நினைவூட்டுகிறது. நம் பலவீனங்களை உணரும்போது, பிறரிடம் அதிக இரக்கமும் கருணையும் காட்டுவோம். பிறருடைய குறைகளைத் திருத்துவதிலேயே நாம் அதிக கவனம் செலுத்துகிறோமா, அல்லது இயேசு நம்மை மாற்ற அனுமதிக்கிறோமா?


Jesus invites us to examine our own hearts before judging others. The “log” in our eye reminds us that humility must come before correction. When we recognize our weaknesses, we become more compassionate and merciful toward others. Are we more focused on correcting others’ faults than allowing Jesus to transform ourselves?

-- Twenty-Third Friday in ordinary time - Cycle 2


Thursday, September 10, 2026

Sep 10

 மனதில் பதிக்க

நீங்கள் வலுவற்ற மனச்சான்றைக் காயப்படுத்திச் சகோதரர் சகோதரிகளுக்கு எதிராகப் பாவம் செய்தால், அது கிறிஸ்துவுக்கே எதிரான பாவம் ஆகும்.- 1 கொரிந்தியர்- 8: 12

When you sin in this way against your brothers and wound their consciences, weak as they are, you are sinning against Christ. - 1 Corinthians 8: 12

                                                          மனதில் சிந்திக்க

இயேசு நம்மைக் காயப்படுத்தியவர்களிடமும் அன்பு செலுத்தவும், ஆசீர்வதிக்கவும், ஜெபிக்கவும் அழைக்கிறார். பதிலடி கொடுப்பதற்குப் பதிலாக, அவரது இரக்கத்தைப் பின்பற்றுவோம். நம்மால் முடிந்தவரை நன்மை செய்து, கிறிஸ்துவின் அன்பையும் மன்னிப்பையும் நம் வாழ்வில் ளிப்படுத்துவோம். மற்றவர்களின் விசுவாசத்தைத் தடுமாறச் செய்வதற்குப்பதிலாக, நம் வார்த்தைகள் மற்றும் முடிவுகள் மூலம் அவர்களின் விசுவாசத்தை வலுப்படுத்த நம்மால் முடியுமா?


Jesus calls us to love, bless, and pray for those who have hurt us. Instead of retaliating, let us follow His example of mercy. Let us do good whenever possible and manifest Christ’s love and forgiveness in our lives. Instead of causing others' faith to stumble, can we strengthen their faith through our words and decisions?


-- Twenty Third Thursday in Ordinary time - Cycle 2


Wednesday, September 9, 2026

Sep 09

 மனதில் பதிக்க

ஏழைகளே நீங்கள் பேறு பெற்றோர்; செல்வர்களே ஐயோ! உங்களுக்குக் கேடு. - லூக்கா - 6: 20

Blessed are you who are poor; woe to you who are rich! - Luke - 6:20

                                                       மனதில் சிந்திக்க

 செல்வம், வசதி அல்லது புகழ்ச்சி ஆகியவற்றிலிருந்து அல்ல; மாறாக, கடவுள் மீது நம்பிக்கை வைப்பதிலிருந்தும் மற்றவர்கள் மீது அன்பு செலுத்துவதிலிருந்தும் தான் ஆசீர்வாதங்கள் கிடைக்கின்றன. உலகியல் சார்ந்தவற்றில் பற்றுக் கொள்ளாமல் இருக்கும்போது, நம்முடைய நேரம், திறமைகள் மற்றும் வளங்களைக் கொண்டு மற்றவர்களை கண்ணியத்துடனும் கனிவுடனும் நடத்த முடியும். நாம்  அன்றாட வசதிக்காக வாழ்கிறோமா , அல்லது கடவுளின் நோக்கத்திற்காக வாழ்கிறோமா ?

 

Blessings come from trusting God and loving others, not from wealth, comfort, or praise. When we do not cling to worldly things, we can use our time, talents, and resources to treat others with dignity and kindness. Are we living for daily comfort, or for God’s purpose?

-- Twenty-Third Wednesday in Ordinary Time - Cycle 2


Tuesday, September 8, 2026

Sep 08

 மனதில் பதிக்க

ஆண்டவரில் நான் பெருமகிழ்ச்சி அடைவேன் – திருப்பாடல்கள் :13:6


With delight I rejoice in the Lord – Psalm: 13:6

                                                              மனதில் சிந்திக்க

இந்த திருப்பாடல்  துன்பத்திலும் நிச்சயமற்ற நிலையிலும் கடவுளின் இரக்கத்தை நம்ப அழைக்கிறது. மரியாளின் தாழ்மையான சரணாகதியைப் போல, நம் இழப்புகள், கவலைகள், நிறைவேறாத திட்டங்கள் அனைத்தையும் ஆண்டவரிடம் ஒப்படைக்கிறோம். நம்பிக்கை துன்பத்தை அகற்றாது; ஆனால் கடவுளின் நன்மையில் உறுதியாகவும் இருக்க நம்மை மாற்றுகிறது. இன்று நாம் கடவுளின் உண்மையான அன்பில் நம்பிக்கை வைத்து சரணடைய முடியுமா?

 

Psalm calls us to trust God’s mercy amid pain and uncertainty. Like Mary’s humble surrender, we place our losses, worries, and broken plans before the Lord. Trust does not erase suffering; it transforms it into hope and confidence in God’s goodness. Can we surrender, trusting God’s faithful love today?


-- Feast of the Nativity of the Blessed Virgin Mary







Monday, September 7, 2026

Sep 07

 மனதில் பதிக்க

நம் பாஸ்கா ஆடாகிய கிறிஸ்து பலியிடப்பட்டிருக்கிறார் -1 கொரிந்தியர் 5: 1

For our Paschal Lamb, Christ, has been sacrificed- 1 Corinthians 5:1


                                                         மனதில் சிந்திக்க

புனித பவுல் , நம் பாஸ்கா ஆட்டுக்குட்டியான கிறிஸ்து நம்மை புதியவர்களாக்குகிறார் என நினைவூட்டுகிறார். பாவம், அகந்தை, மனக்கசப்பு ஆகிய பழைய புளிப்பை அகற்றி, உண்மையுடனும் நேர்மையுடனும் வாழ அழைக்கப்படுகிறோம். கடவுளின் திருத்தம் குணப்படுத்தவும் மீட்டெடுக்கவும் செய்கிறது. இன்று நாம் கிறிஸ்துவிடம் ஒப்படைக்க வேண்டிய பழக்கம் எது?


St. Paul reminds us that Christ, our Paschal Lamb, makes us new. We are called to remove the “old yeast” of sin, pride, and resentment, and live with sincerity and truth. God’s correction is always meant to heal and restore. What is one habit we need to surrender to Christ today?


-- Twenty- Third Monday in Ordinary Time - Cycle 2


Sunday, September 6, 2026

Sep 06

 மனதில் பதிக்க

குற்றம் செய்தவர் உங்களுக்குச் செவிசாய்த்தால் நல்லது; உங்கள் உறவு தொடரும். - மத்தேயு 18: 15

If he listens to you, you have won over your brother. - Matthew 18:15

                                                          மனதில் சிந்திக்க

இந்த நற்செய்தி, தாழ்மையுடன் திருத்துதல், பொறுமையுடன் அறிவுறுத்துதல், மன்னித்தல் ஆகிய இரக்கச் செயல்களை நாம் கடைப்பிடிக்க அழைக்கிறது. கிறிஸ்தவப் பொறுப்புணர்வு, பிறரின் உள்ளத்தைத் தீர்ப்பிடாமல், தவறான செயல்களைச் சுட்டிக்காட்டி மனமாற்றத்திற்கும் குணமடைவதற்கும் வழி செய்கிறது. கடினமான உரையாடல்களிலும் கிறிஸ்து நம்மோடு இருந்து, நாம் சரி என்பதை நிரூபிப்பதற்குப் பதிலாக உறவுகளை மீட்டெடுக்க வழிநடத்துகிறார். முரண்பாடு ஏற்படும் போது, நாம் முதலில் சமரசத்தையே நாடுகிறோமா?


This Gospel calls us to practice mercy through humble correction, patient instruction, and forgiveness. Christian accountability addresses harmful actions without judging hearts, inviting conversion and healing. In difficult conversations, Christ remains present, guiding us to restore relationships rather than prove ourselves right. When conflict arises, do we seek reconciliation first?

-- Twenty-Third Sunday in Ordinary time - Year A


Saturday, September 5, 2026

Sep 05

 மனதில் பதிக்க

ஒருவரை ஆதரித்தும் மற்றவரை எதிர்த்தும் செயல்படாதீர்கள்; இறுமாப்புக் கொள்ளாதீர்கள். நீங்கள் மற்றவர்களைவிட உயர்ந்தவர்கள் என்று சொன்னவர் யார்? - 1 கொரிந்தியர் 4: 6-7

so that none of you will be inflated with pride in favor of one person over against another. Who confers distinction upon you? - 1 Corinthians 4: 6-7

                                                            மனதில் சிந்திக்க

பாரபட்சம், பிரிவினை, பாகுபாடு, ஏற்றத்தாழ்வு, இறுமாப்பு ஆகிய குணங்கள் இல்லாத வாழ்க்கையை நாம் ஒவ்வொருவரும் வாழ வேண்டும் என்று இறைவன் நம்மை இன்று அழைக்கின்றார். நமது உயிர் உள்ளவரை மட்டுமே இறைவனுடைய இரக்கத்தை பெற முடியும். உயிர் பிரிந்த உடனே இறைவனுடைய தீர்வையில் நிற்க வேண்டும் என்பதை மனதில் நிறுத்தி தூய வாழ்கை வாழ்ந்து இறைவனுடைய இராட்சியத்தில் பங்கு பெற நம் உள்ளங்களை ஆயத்தமாக்கிக் கொள்வோமா?

God calls upon each of us today to lead a life free from partiality, divisiveness, discrimination, inequality, and arrogance. We can receive God's mercy only as long as we are alive. Bearing in mind that we must stand before God's judgment immediately upon death, shall we prepare our hearts to lead a pure life and share in God's kingdom?


-- Twenty-Second Saturday in Ordinary time - Cycle 2






Friday, September 4, 2026

Sep 04

 மனதில் பதிக்க

அதாவது ஆண்டவரின் வருகைக்கு முன் யாருக்கும் தீர்ப்பளிக்க வேண்டாம். அவரே இருளில் மறைந்திருப்பவற்றை வெட்ட வெளிச்சமாக்குவார்; உள்ளங்களின் நோக்கங்களையும் வெளிப்படுத்துவார். - 1கொரிந்தியர் 4:5

Therefore, do not make any judgment before the appointed time, until the Lord comes, for he will bring to light what is hidden in darkness and will manifest the motives of our hearts, and then everyone will receive praise from God. - 1 Corinthians 4:5

                                                       மனதில் சிந்திக்க

எப்பொழுதும் நாம் மற்றவர்களின் குறைகளை தேடி அடுத்தவரைக் குறித்து இவர் இப்படிப்பட்டவர் என்று தீர்ப்பிடுகின்றோமாயின் இறைவன் கடிந்து கொள்கின்றார். கடவுள் தாமே நமது உள்ளங்களை வெளிச்சத்திற்கு கொண்டு வர தகுதியுள்ளவர் என்பதை ஆழமாக உள்வாங்கி நமது தவறுகளை ஆராய்ந்து பார்த்து அவற்றிளிருந்து தூய்மை அடைவோமா?

If we constantly seek out the faults of others and pass judgment on them, God rebukes us. Shall we deeply internalize the truth that God alone is capable of bringing our hearts into the light, and instead examine our own errors to find purification from them?


-- Twenty-Second Friday in ordinary time - Cycle 2


Thursday, September 3, 2026

Sep 03

மனதில் பதிக்க

இயேசு சீமோனை நோக்கி, “அஞ்சாதே; இது முதல் நீ மனிதரைப் பிடிப்பவன் ஆவாய்” என்று சொன்னார். - லூக்கா 5:10

Jesus said to Simon, “Do not be afraid; from now on you will be catching men.”  - Luke 5:10

                                                           மனதில் சிந்திக்க

இறை அரசை கட்டி எழுப்ப அன்று சீமோனை அழைத்த இயேசு ஆண்டவர் இன்று நம் ஓவ்வொருவரையும் அழைக்கின்றார். ஆனால் நாம் நமது சொந்த தேவைகளை முன்னிட்டு இறைவனுடைய காரியங்களை அல்லது மறைபரப்பு பணியை செய்வதில் தாமதம் காண்பித்து  வருகின்றோம். எனவே இனிமேலும் தயங்காமல் மறைபரப்பு பணியில் உற்சாகமாக ஈடுபடுவோமா?


The Lord Jesus, who once called Simon to build up the Kingdom of God, calls each of us today. Yet, prioritizing our own needs, we delay engaging in God’s work or the mission of evangelization. Shall we, therefore, cast aside hesitation and enthusiastically commit ourselves to this missionary task?


-- Twenty-Second Thursday In Ordinary Time - Cycle 2





Wednesday, September 2, 2026

Sep 02

 மனதில் பதிக்க

நான் உங்களுக்குத் திட உணவை அல்ல, பாலையே ஊட்டினேன். ஏனெனில், திட உணவை உங்களால் உண்ண முடியவில்லை. இப்போதும் அதே நிலையில்தான் இருக்கிறீர்கள்.- 1கொரிந்தியர் 3:2

I fed you milk, not solid food, because you were unable to take it. Indeed, you are still not able, even now - 1 Corinthians 3:2

                                                          மனதில் சிந்திக்க

நாம் இன்னும் உலக நாட்டங்களிலேயே மூழ்கி ஊனியல்பிலிருந்து விடுபட முடியாமல் அல்லது விடுபட விருப்பம் இல்லாதவர்களாக இருப்பதால் இன்னொரு கிறிஸ்துவாக வாழ முடியவில்லை. தூய ஆவியின் துணையோடு இவைகளில் இருந்து விடுபட்டு  இன்னொரு கிறிஸ்துவாக வாழ முன்வருவோமா?


We are unable to live as 'another Christ'—or perhaps lack the desire to do so—because we remain immersed in worldly pursuits and cannot break free from our carnal nature. Shall we step forward to break free from these things with the help of the Holy Spirit and live as 'another Christ'?


-- Twenty-Second Wednesday in Ordinary Time - Cycle 2




Tuesday, September 1, 2026

Sep 01

 மனதில் பதிக்க

ஆண்டவருடைய மனத்தை அறிபவர் யார்? அவருக்கு அறிவுரை கூறுபவர் யார்?. நாமோ கிறிஸ்துவின் மனத்தைக் கொண்டுள்ளோம். - 1 கொரிந்தியர் 2:16

For “who has known the mind of the Lord, so as to counsel him?” But we have the mind of Christ. - 1 Corinthians 2:16

                                                         மனதில் சிந்திக்க

நாம் மற்றவருக்கு நன்மை செய்தபோதும் நமக்கு தீமை வரும்போது கடளிடம் கேள்வி எழுப்புகின்றோம். ஏன் ஆண்டவரே எனக்கு இத்தீமையை அனுமதித்தீர்கள் என்று. ஆனால் கிறிஸ்துவின் மனதைக் கொண்டுள்ள நாம் அந்த தீமைக்குப் பின் அனேக நன்மைகள் இருக்கின்றன; இறைவன் நன்மையன்றி தீமையை ஒருபோதும் வரவிடமாட்டார் என்று நம்புவோமா? 

When we face adversity despite having done good to others, we question God, asking, "Lord, why did You allow this evil to befall me?" Yet, as those who possess the mind of Christ, do we believe that there are many blessings hidden behind that adversity—and that God would never permit evil without a greater good in mind?


-- Twenty-Second Tuesday in Ordinary time - Cycle 2


Monday, August 31, 2026

Aug 31

 மனதில் பதிக்க

நான் பறைசாற்றிய செய்தி ஞானத்தின் கவர்ச்சியான சொற்களில் அமையவில்லை. ஆனால் அது தூய ஆவியின் வல்லமையை எடுத்துக் காட்டுவதாக அமைந்தது. - 1 கொரிந்தியர் 2:4

My message and my proclamation were not with persuasive words of wisdom, but with a demonstration of spirit and power - 1 Corinthians 2:4

                                                          மனதில் சிந்திக்க

நமது இயேசு ஆண்டவர் தூய ஆவியானவரை நமக்காக தந்திருக்கின்றார். எனவே நமது செயல்கள், வார்த்தைகள், சிந்தனைகள், அனைத்தும்   தூய ஆவியானவரின் விருப்பத்தோடும், அவரது வல்லமையோடும் தான் நடைபெறுகிறதா என்பதை அடிக்கடி பரிசீலனை பண்ணுகின்றோமா என்று சிந்திப்போம்.

Our Lord Jesus has given us the Holy Spirit. Therefore, let us reflect on whether we frequently examine whether all our actions, words, and thoughts are taking place in accordance with the will and power of the Holy Spirit.


-- Twenty-Second Monday in Ordinary Time - Cycle 2


Sunday, August 30, 2026

Aug 30

 மனதில் பதிக்க

என்னைப் பின்பற்ற விரும்பும் எவரும் தன்னலம் துறந்து, தம் சிலுவையைத் தூக்கிக்கொண்டு என்னைப் பின்பற்றட்டும். - மத்தேயு  16:24 


Whoever wishes to come after me must deny himself, take up his cross, and follow me. - Matthew 16:24

                                                       மனதில் சிந்திக்க

இயேசுவை பின்பற்றுவது என்பது நம் சொந்த விருப்பங்களைக் கடந்து, அவரின் வழியைத் தேர்ந்தெடுக்கும் தாழ்மையான, பிறருக்காக ஒப்புக்கொடுக்கும்  வாழ்க்கையாகும். நாம் நம்  சிலுவைகளைத் துணிவுடன் சுமக்க வரம் வேண்டியும், அவர் அழைக்கும் பாதையில் தைரியமாக முன்னேறவும் முயல்வோமா?


Following Jesus is a humble life of self-surrender for the sake of others, transcending our own desires to choose His way. Shall we strive to seek the grace to bear our crosses with fortitude and to move forward courageously along the path to which He calls us?


-- Twenty-Second Sunday in ordinary time - Cycle 2


Saturday, August 29, 2026

Aug 29

 மனதில் பதிக்க


பெருமை பாராட்ட விரும்புகிறவர் ஆண்டவரைக் குறித்தே பெருமை பாராட்டட்டும். - 1 கொரிந்தியர் 1:29

Whoever boasts, should boast in the Lord. - 1 Corinthians 1:29


                                                           மனதில் சிந்திக்க

எல்லாப் புகழுக்கும் மாட்சிமைக்கும் உரிய உன்னதவராம் கடவுள், நமது மீட்புக்காகத் தம்மையே தாழ்த்தி மனித உருவெடுத்தார். அவ்வாறிருக்க, நமது மீட்பின் முழுமுதற் காரணமாய் விளங்கும் அவரைப் பற்றிப் பெருமைப் பாராட்டாமல் நம்மால் எவ்வாறு வாழ இயலும்?


God Most High assumed human form for the sake of our salvation, humbling Himself who is worthy of all praise and glory. How then can we live without proclaiming Him, the ultimate author of our salvation?

-- Twenty-First Saturday in Ordinary Time - Cycle 2


Friday, August 28, 2026

Aug 28

 மனதில் பதிக்க

எப்பொழுதும் விழிப்பாய் இருந்து செபியுங்கள். - லூக்கா 21:36

Be vigilant at all times and pray. -  Luke 21:36

                                                          மனதில் சிந்திக்க

எல்லாச் சூழ்நிலையிலும் செபம் இன்றியமையாதது என்பதை இயேசு நமக்குக் காட்டியுள்ளார். அது கடவுளுடனான நம் உறவின் அடித்தளம். நாம் கற்பனை செய்வதை விடச் சிறந்த வழிகளில் அவர் பதிலளிக்கிறார் என்பதை உணர்ந்து, செபத்தின் வழியாக அவரோடு எப்போதும் பேச நம்மால் அர்ப்பணிக்க முடியுமா?


Jesus showed us that prayer is essential in every circumstance. It is our direct link to God and the foundation of our relationship with Him. Can we commit talking to Him through prayer always remembering that He answers us in ways far better than we can imagine?

-- Twenty-First Friday in ordinary time - Cycle 2