Tuesday, August 19, 2025

Aug 19

 



மனதில் பதிக்க… 


 “ என் பெயரின் பொருட்டு வீடுகளையோ, சகோதரர்களையோ, சகோதரிகளையோ, தந்தையையோ, தாயையோ, பிள்ளைகளையோ, நில புலங்களையோ விட்டுவிட்ட எவரும் நூறு மடங்காகப் பெறுவர். நிலை வாழ்வையும் உரிமைப் பேறாக அடைவர்.”  - மத்தேயு 19:29


“And everyone who has left houses, brothers, sisters, father, mother, children or land for the sake of my name will receive a hundred times as much and also inherit eternal life.”- Matthew - 19:29


மனதில் சிந்திக்க… 


கிறிஸ்துவராக பிறந்த நம் ஒவ்வொருவருக்குமே கடவுளின் பணியை தொடர கடமை உள்ளது.. அவருடைய பணியில் நம்மை ஈடுப்படுத்திக்கொண்டு நிலை வாழ்வை பெற முயல்வோமா?


As baptized Christians, we have the duty to spread the word of God in this world. Can we try to involve ourselves in the mission of God and make ourselves eligible to inherit the eternal life?


-- 20th Tuesday in ordinary time - Cycle 1


Monday, August 18, 2025

Aug 18

 



மனதில் பதிக்க… 


 “நிறைவுள்ளவராக விரும்பினால் நீர் போய், உம் உடைமைகளை விற்று ஏழைகளுக்குக் கொடும். அப்பொழுது விண்ணகத்தில் நீர் செல்வராய் இருப்பீர்.”  - மத்தேயு 19:20


Jesus said to him, “If you wish to be perfect, go, sell what you have and give to the poor, and you will have treasure in heaven. - Matthew - 19:20


மனதில் சிந்திக்க… 


கடவுள் நம் ஒவ்வொருவரையும் அவர் அவர் தேவைக்கேற்ப ஆசீர்வதிக்கிறார். நமக்கு கடவுளின் ஆசீர் வழியாக கிடைத்த செல்வதை இல்லாதவர்க்கு பகிர்ந்து அளித்து அவரின் இறையாட்சிக்கு தகுதியாக்கிக் கொள்ள முயல்வோமா?


God blesses each one of us as per our needs. Are we ready to share the wealth received as blessings from God to those who are in need and make ourselves eligible for the kingdom of God?


-- 20th Monday in Ordinary time


Sunday, August 17, 2025

Aug 17

 


மனதில் பதிக்க… 


 “நம்மைச் சூழ்ந்து நிற்க எந்தச் சுமையையும், நம்மைப் பற்றிக்கொண்டிருக்கும் எந்தப் பாவத்தையும் உதறித் தள்ளிவிட்டு, நமக்குக் குறிப்பிட்டுள்ள பந்தயத்தில் மன உறுதியோடு ஓடுவோமாக.”  - ( எபிரேயர் 12:1,2)


 “Throw off everything that weighs us down and the sin that clings so closely, and with perseverance keep running in the race which lies ahead of us. Let us keep our eyes fixed on Jesus.” - (Hebrews 12:1,2)


மனதில் சிந்திக்க… 


இந்த உலகத்தில் நல்லது கெட்டது நன்மை தீமை என்று அனைத்தையும் படைத்த நம் கடவுள் நமக்கு தேர்ந்தெடுக்கும் உரிமையை கொடுத்துள்ளார். நாம் பாவ வழியில் செல்ல நேர்ந்தாலும் நம்மை புறம் தள்ளி விடாமல் மனம் திருந்தி கடவுளிடம் வந்தால் நம்மை அரவணைக்க ஆவலோடு இருக்கிறார். இன்றைய மாய உலகில் நிலையில்லா காரியங்களில் கவனம் சிதறி விடாமல் உண்மையான தேவனை பற்றி வாழ முயல்வோமா?


Our God has created everything in this world be it good or bad, right or wrong and He has given us the freedom to make the choice. And even if we happen to fall into sinful ways, our God is eagerly awaiting to embrace us if we repent for our sins and turn back to Him. In today's world filled with unrealistic pleasures and happiness, can we try to focus on the only true God and lead a life united with Him.


-- 20th Sunday in ordinary time - Year C


Saturday, August 16, 2025

Aug 16

 



மனதில் பதிக்க… 


ஆண்டவரைக் கைவிட்டு வேற்றுத் தெய்வங்களை வணங்குவது எங்களிடத்தே அறவே நிகழாதிருப்பதாக!- யோசுவா24:16


 “Far be it from us to forsake the LORD to serve other gods. - Joshua 24:16



மனதில் சிந்திக்க… 


நம்மில் அநேகர் பணமும், பொருளாதார வசதியும் நம் வாழ்வை உயர்த்திவிடும் என்று நம்புகின்றோம். அதனால் அதுவே நமக்கு இன்னொரு கடவுளாகவும் மாறிவிடுகின்றன. அதை தவிர்த்து  நம்மை படைத்து பண்படுத்திய இறைவனை மட்டுமே நம்பி, அவருக்கு மட்டுமே ஆராதனை செலுத்துவோமா?


Many of us believe that money and financial comfort will elevate our lives. Therefore, it becomes another god for us. Should we instead trust only in the Lord who created and nurtured us and worship Him alone?


--19th Saturday in Ordinary Time. - Cycle 1






Friday, August 15, 2025

Aug 15



மனதில் பதிக்க… 


அவருக்கு அஞ்சி நடப்போருக்குத் தலைமுறை தலைமுறையாய் அவர் இரக்கம் காட்டி வருகிறார். - லூக்கா 1:50


His mercy is from age to age to those who fear him. - Luke 1:50 


மனதில் சிந்திக்க… 


இறைவனுடைய இரக்கம் அளவற்றது , மகத்துவம் வாய்ந்தது. அதை நாம் பெற நம்மையே தயாரிக்க வேண்டும். அன்னை மரியாளைப் பின்பற்றும் நாமும் அவரைப்போல  பாவத்திலிருந்து விலகியிருப்போம். இறைவனின் மாட்சிமையில் பங்குபெற, நம்மையே புனித வாழ்வுக்கு ஆயத்தப்படுத்தி இறை இரக்கத்தை பெறுவோம்.


God's mercy is boundless and Magnificence. We must prepare ourselves to receive it. We, who follow Mother Mary, should stay away from sins like her. Shall we prepare ourselves for a holy life and receive divine mercy to enter the kingdom of God.


- Assumption of Mother Mary





Thursday, August 14, 2025

Aug 14

 



மனதில் பதிக்க… 


உங்களுள் ஒவ்வொருவரும் தம் சகோதரர் சகோதரிகளை மனமார மன்னிக்காவிட்டால் விண்ணுலகில் இருக்கும் என் தந்தையும் உங்களை மன்னிக்க மாட்டார்." - மத்தேயு 18:35


So will my heavenly Father do to you, unless each of you forgives his brother from his heart.” - Matthews 18:35


மனதில் சிந்திக்க… 


மன்னிப்பு வழியாக நம் கசப்பு உணர்வுகளைத் தூக்கி எறிகின்ற பொழது கடவுள் நம்  வழியாக செயல்பட ஆரம்பிக்கின்றார் என்பதை மனதில் கொண்டு யாராக இருந்தாலும் எதுவாக இருந்தாலும் மன்னித்து மறப்போம்.


When we forgive others, God begins His works through us. No matter who or for what, shall we forgive and forget all the bitter feelings against others?


-- 19th Thursday of ordinary time - Cycle 1




Wednesday, August 13, 2025

Aug 13

 



மனதில் பதிக்க… 


உங்கள் சகோதரர் சகோதரிகளுள் ஒருவர் உங்களுக்கு எதிராகப் பாவம் செய்தால் நீங்களும் அவரும் தனித்திருக்கும்போது அவரது குற்றத்தை எடுத்துக்காட்டுங்கள்.- மத்தேயு 18:15


If your brother sins against you, go and tell him his fault between you and him alone. If he listens to you, you have won over your brother. - Matthew 18:15


மனதில் சிந்திக்க… 


உரையாடல் ஒரு உளவியல் வலிமை மிக்க அணுகுமுறை. நமது குடும்பத்தில் அல்லது சமுதாயத்தில் ஓருவர் மற்றுமொருவரிடம் கருத்து வேறுபாடு ஏற்பட்டால் உடனே கலந்து பேசி தீர்த்துக் கொள்ளவே இறைவன் பணிக்கின்றார்.  எனவே நாமும் அதை கடைபிடித்து வாழ்வோமா?


Dialogue is a psychologically powerful approach. God commands us to resolve any disagreements in our family or society by talking to each other. Shall we also resolve our conflicts using conversations?


-- 19th Wednesday in ordinary time - Cycle 1




Tuesday, August 12, 2025

Aug 12

 



மனதில் பதிக்க… 


இந்தச் சிறு பிள்ளையைப்போலத் தம்மைத் தாழ்த்திக்கொள்பவரே விண்ணரசில் மிகப் பெரியவர். - மத்தேயு 18:4


Whoever humbles himself like this child is the greatest in the kingdom of heaven. - Matthew 18:4


மனதில் சிந்திக்க… 


சிறு பிள்ளைகள் கள்ளம் கபடற்றவர்கள். உண்மையை எடுத்துரைப்பவர்கள்.  அதே போன்ற தூய்மையான, தாழ்மையான உள்ளம் நமக்கு எப்போதும் இருக்க வேண்டும் என்று நம் இயேசு ஆண்டவர் எடுத்துறைக்கின்றார். தூய உள்ளத்தோடும் , தாழ்மையான மனநிலையோடும் வாழ்வோமா? 


Little children are innocent and sincere. They tell the truth. Our Lord Jesus teaches us that we should always have a pure and meek heart. Shall we live with a pure heart and a humble mind?


-- 19th Tuesday of ordinary time - cycle 1




Monday, August 11, 2025

Aug 11

 



மனதில் பதிக்க… 


உங்கள் கடவுளாகிய ஆண்டவருக்கே அஞ்சுங்கள்; அவருக்கே பணி புரிந்து அவரைப் பற்றிக்கொள்ளுங்கள். - இணைச்சட்டம் 10:20


The LORD, your God, shall you fear, and him shall you serve; to him hold fast and by his name shall you swear. - Deuteronomy 10:20



மனதில் சிந்திக்க… 


இறைவனுடைய உரிமைப் பேறு பெற்ற பிள்ளைகளாகிய நாம், ஆண்டவருக்கு  பணிந்து ஊழியம் செய்வதே முறையானதும் தகுதியானதுமாகும். இவ்வுலகில் தாழ்ச்சியுடன் அவரை இறுக பற்றிக் கொண்டு பணிந்து வாழ முழு முயற்சி எடுப்போமா...


As God's children, it is right and proper for us to serve and obey the Lord. Shall we make every effort to live humbly and obediently in this world, clinging to Him?


-- 19th Monday in ordinary time - Cycle 1




Sunday, August 10, 2025

Aug 10

 



மனதில் பதிக்க… 


அங்கே திருடன் நெருங்குவதில்லை; பூச்சியும் அரிப்பது இல்லை. உங்கள் செல்வம் எங்கு உள்ளதோ அங்கே உங்கள் உள்ளமும் இருக்கும். - லூக்கா 12:33


Provide money bags for yourselves that do not wear out, an inexhaustible treasure in heaven that no thief can reach nor moth destroy. For where your treasure is, there also will your heart be. - Luke 12:33


மனதில் சிந்திக்க… 


இம்மண்ணுலகில் வாழும் போது விண்ணகத்திக்காக நாம் சேர்த்து வைக்கும் செல்வம் ஒருநாளும் வீணாகிப்போகாது. அது நமக்கு பல மடங்காக பயன் அளிக்கும். எனவே நமது உள்ளம் விண்ணகச் செல்வத்தை நோக்கியதாக இருக்க முயற்சி எடுப்போமா?

 

The treasures that we accumulate for heaven while living on this earth will never be wasted. It will benefit us in multiple ways. So, shall we make an effort to keep our hearts focused on heavenly treasures?


-- 19th Sunday in ordinary time - Year C



Saturday, August 9, 2025

Aug 09

 



மனதில் பதிக்க… 


உங்களுக்கு கடுகளவு நம்பிக்கை இருந்தால் நீங்கள் இம்மலையைப் பார்த்து `இங்கிருந்து பெயர்ந்து அங்குப் போ' எனக் கூறினால், அது பெயர்ந்து போகும். - மத்தேயு 17: 20


If you have faith as small as a mustard seed, you can say to this mountain, ‘Move from here to there,’ and it will move - Matthew 17: 20


மனதில் சிந்திக்க… 


விசுவாசம் எவ்வாறு நம்மை சக்தியற்றவர்களாக உணர்விலிருந்து ஆன்மீக ரீதியில் வலிமையானவர்களாக மாற்றும் என்பதை இயேசு வலியுறுத்துகிறார். நமது விசுவாசம் ஆழமாக வேரூன்றும்போது, சவால்கள் மற்றும் சோதனைகளை நாம் வென்று கடவுளின் மகிமையை அனுபவிக்க முடியும். நமது வாழ்க்கையில் மலைகளையே நகர்த்தும் அளவுக்கு நம் விசுவாசம் வலிமையானதா?


Jesus emphasizes how faith can make us move from feeling powerless to becoming spiritually strong. When our faith is deep-rooted, we can overcome the challenges, trials, and temptations and experience God’s glory. Is our faith strong enough to move our life’s mountains?


-- 18th Saturday in Ordinary time - Cycle 1


Friday, August 8, 2025

Aug 08

 



மனதில் பதிக்க… 


“மனிதர் உலகம் முழுவதையும் ஆதாயமாக்கிக் கொண்டாலும் தம் வாழ்வையே இழப்பாரெனில் அவருக்குக் கிடைக்கும் பயன் என்ன?” - மத்தேயு 16: 26


"What good will it be for someone to gain the whole world, yet forfeit their soul?" - Matthew 16:26


மனதில் சிந்திக்க… 


புனித பிரான்சிஸ் சேவியரை கணிசமாகத் தொட்டு, கடவுளுக்கு அர்ப்பணிப்பு என்ற அவரது தீவிரமான முடிவைப் பாதித்த இந்த வசனம், உலகம் வழங்கும் அனைத்து செல்வங்கள், அதிகாரம் மற்றும் இன்பங்களைச் சேகரித்து, நமது நித்திய விதியை இழப்பது பயனற்ற ஆதாயமாகும் என்பதை நமக்கு நினைவூட்டுகிறது.


The verse that significantly touched Saint Francis Xavier and influenced his radical decision to commit to God, reminds us that it would be a futile gain to accumulate all the riches, power, and pleasures the world offers, but forfeit our eternal destiny.


-- 18th Friday in ordinary time - Cycle 1


Thursday, August 7, 2025

Aug 07

 



மனதில் பதிக்க… 


“நீ கடவுளுக்கு ஏற்றவை பற்றி எண்ணாமல் மனிதருக்கு ஏற்றவை பற்றியே எண்ணுகிறாய்” - மத்தேயு 16: 23


"You do not have in mind the concerns of God, but merely human concerns."- Matthew 16:23


மனதில் சிந்திக்க… 


கிறிஸ்து, தம்மைப் பின்பற்றுபவர்கள் உலகில் உள்ள அனைத்தையும் விட்டுக்கொடுக்கவும், தேவைக்கேற்ப கஷ்டங்களையும் துன்புறுத்தல்களையும் ஏற்றுக்கொள்ளவும் தயாராக இருக்க வேண்டும் என்று நினைவூட்டுகிறார். நாம் கடவுளின் நித்திய திட்டத்தில் கவனம் செலுத்துகிறோமா அல்லது தற்காலிக, பூமிக்குரிய கவலைகள் மற்றும் சுய பாதுகாப்பில் கவனம் செலுத்துகிறோமா?



Christ reminds that those who follow Him must be willing to give up everything in the world, and to take on hardship and persecution, as needed. Are we focused on God's eternal plan or on temporary, earthly concerns and self-preservation?


-- 18th Thursday in Ordinary Time - Cycle 1


Wednesday, August 6, 2025

Aug 06

 



மனதில் பதிக்க… 


“இவரே என் மைந்தர்; நான் தேர்ந்து கொண்டவர் இவரே. இவருக்குச் செவிசாயுங்கள்” -  லூக்கா 9:35


"This is my Son, my Chosen One; listen to him!"- Luke 9:35


மனதில் சிந்திக்க… 


கடவுள் நம்மை அவருடைய மகிமையை கண்டுபிடித்து உலகிற்குச் சென்று அதை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள அழைக்கிறார். நமது நல்ல அதிர்ஷ்டத்தில் மகிழ்ச்சியடைவதற்குப் பதிலாக, அவருடைய நல்ல கிருபையில் மகிழ்ச்சியடைய கடவுள் நம்மை அழைக்கிறார். நம்முடைய ஆசிர்வாதத்தை பகிர்ந்து, அவருடைய மகிமையை அறிவிக்க தயாரா?


God calls us to find His glory and go into the world and share it with others. Instead of delighting in our good fortune, God invites us to delight in His good grace. Are we ready to share what we are blessed with, to proclaim His glory?


-- Feast of the Transfiguration of the Lord


Tuesday, August 5, 2025

Aug 05

 



மனதில் பதிக்க… 


“பார்வையற்ற ஒருவர் பார்வையற்ற வேறொருவரை வழிநடத்தினால் இருவரும் குழியில் விழுவர்” மத்தேயு 15:14


“If the blind lead the blind, both will fall into a pit” Matthew 15:14


மனதில் சிந்திக்க… 


இன்று பல ஆன்மீகத் தலைவர்கள் மற்றும் தனிப்பட்ட விசுவாசிகள் அமல்படுத்த முயற்சிக்கும் எழுதப்படாத விதிகள் அல்லது வேதத்திற்கு முரணான மரபுகளை குருட்டுத்தனமாகப் பின்பற்றுவதை விட, கடவுளுடைய வார்த்தையைப் பற்றிய வலுவான புரிதலை வளர்த்துக் கொள்ள, இயேசு நம்மை ஊக்குவிக்கிறார்.


Jesus encourages us to develop a strong understanding of God's Word, rather than blindly following unwritten rules or traditions contradicting scripture, that many spiritual leaders, and individual believers try to enforce today.


-- 18th Tuesday of Ordinary time - Cycle 1


Monday, August 4, 2025

Aug 04

 



மனதில் பதிக்க… 


" துணிவோடிருங்கள் ; நான்தான், அஞ்சாதீர்கள்”. - மத்தேயு 14:27


“Take courage! It is I. Don’t be afraid.”- Matthew 14:27


மனதில் சிந்திக்க… 


சவாலான காலங்களில் இயேசுவில் விசுவாசம் வைப்பதன் முக்கியத்துவத்தையும், சந்தேகம் மற்றும் பயத்தின் விளைவுகளையும் இந்த வசனம் வலியுறுத்துகிறது. கடினமான சூழ்நிலைகளை எதிர்கொள்ளும்போது கூட, இயேசுவின் மீது கவனம் செலுத்தவும், அவருடைய வல்லமையில் நம்பிக்கை வைக்கவும் இது நம்மை ஊக்குவிக்கிறது.


This verse emphasizes the importance of faith in Jesus during challenging times, the power of Jesus's presence to calm storms, and the consequences of doubt and fear. It encourages us to keep our focus on Jesus and trust in His power, even when facing difficult circumstances. 


-- 18th Monday in Ordinary Time - Cycle 1


Sunday, August 3, 2025

Aug 03

 



மனதில் பதிக்க… 


“மிகுதியான உடைமைகளைக் கொண்டிருப்பதால் ஒருவருக்கு வாழ்வு வந்துவிடாது” -  லூக்கா 12:15


“For life does not consist in possessions, even when someone has more than he needs.” -  Luke 12:15


மனதில் சிந்திக்க… 


கடவுள் நம் அனைவரையும் நிறைவாக ஆசீர்வதித்துள்ளார்.. ஆனால் நாமோ கடவுள் கொடுத்த செல்வத்தால் மன நிறைவு அடையாமல்  இன்னும் மிகுதியான செல்வம் சேர்க்க பேராசையில் வாழ்கிறோம்.. கடவுளின் ஆசீரால் பெற்ற செல்வதை பிறருக்கு பகிர்ந்து அளித்து கடவுளின் பிள்ளையாக வாழ முயல்வோமா? சிந்திப்போம்.


God has blessed every one of us abundantly. But we don't get satisfied with what God has given us and keep running behind accumulating wealth and lead a greedy life. Can we try to share the wealth received through God's blessings and lead a life as a child of God.


-- 18th Sunday of Ordinary time - Cycle 1




Saturday, August 2, 2025

Aug 02

 



மனதில் பதிக்க… 


ஏரோது அவரைக் கொலை செய்ய விரும்பினான்; ஆயினும் மக்கள் கூட்டத்தினர் அவரை ஓர் இறைவாக்கினர் எனக் கருதியதால் அவர்களுக்கு அஞ்சினான். மத்தேயு 14:5


And though he wanted to put him to death, he feared the people, because they held him to be a prophet. Matthew 14:5


மனதில் சிந்திக்க… 


நாம் எப்போதாவது குற்ற உணர்ச்சியை உணர்ந்திருக்கிறோமா? ஏரோதுவைப் போலல்லாமல், கடவுளின் இரக்கத்தை நம்பி, அவருடைய பரிசுத்த வழியைத் தேர்ந்தெடுத்து, இயேசு கிறிஸ்துவின் மீதான நமது விசுவாசத்தை பலவீனப்படுத்தும் எதையும் நிராகரிப்போமாக.


Have we ever felt a guilt conscience? Unlike Herod, let us rely on God's grace to choose His way of holiness and reject whatever would weaken our faith and loyalty to Jesus Christ.


-- 17th Saturday in Ordinary time - Cycle 1


Friday, August 1, 2025

Aug 01

 



மனதில் பதிக்க… 


தம் சொந்த ஊரிலும் வீட்டிலும் தவிர மற்றெங்கும் இறைவாக்கினர் மதிப்புப் பெறுவர். மத்தேயு 13:57


A prophet is not without honor except in his own country and in his own house. Matthew 13:57



மனதில் சிந்திக்க… 


நமக்குக் காட்டப்பட்ட அதே தயவு மற்றும் கருணையுடன் நாம் அடுத்தவரை நடத்துகிறோமா? நம் இதயங்களை அவருடைய கருணை மற்றும் இரக்கத்தால் நிரப்பும்படி கடவுளிடம் கேட்ப்போம்.


Do we treat our neighbor with the same favor and kindness that has been shown to us? Let us think and ask God to flood our hearts with His mercy and compassion.


-- 17th Friday in Ordinary Time - Cycle 1