Monday, February 10, 2025

Feb 10

 மனதில் பதிக்க…


இயேசுவைத் தொட்ட அனைவரும் நலமடைந்தனர். மாற்கு 6:56 


Many who touched Jesus were made well. Mark 6:56 

  



மனதில் சிந்திக்க…  


நம்முடைய தேவைகளை நிறைவேற்ற இயேசு எப்போதும் தயாராக இருக்கிறார். நாம் அவரை நம்பிக்கையுடன் அணுகுகிறோமா? 


Jesus is ever ready to meet our needs. Do we approach Him with expectant faith? 


-- 5th week - Monday - Cycle 1


Sunday, February 9, 2025

Feb 09

 மனதில் பதிக்க…

சீமோன் மறுமொழியாக, “ஐயா, இரவு முழுவதும் நாங்கள் பாடுபட்டு உழைத்தும் ஒன்றும் கிடைக்கவில்லை; ஆயினும் உமது சொற்படியே வலைகளைப் போடுகிறேன்” என்றார். லூக்கா 5:5 

And Simon answered, "Master, we toiled all night and took nothing! But at your word I will let down the nets." Luke 5:5 

 


மனதில் சிந்திக்க…  

நாம் ஏமாற்றத்தையும் தோல்வியையும் சந்திக்கும்போது, ​​சீமோனைப் போல, இயேசுவுடைய வார்த்தையைக் கேட்கவும் அவருடைய கட்டளையைப் பெறவும் அவரை அழுத்துகிறோமா? நம்மால் செய்ய முடிந்ததை விட பெரிய காரியங்களை நம்மிடம் கடவுள் எதிர்பார்க்கிறார். 

When we meet disappointment and failure, do we press upon the Lord, like Simon, to hear his word and to receive his command? God expects greater things from us than we can do by ourselves. 

-- 5th week Sunday - Year C


Saturday, February 8, 2025

Feb 08

 மனதில் பதிக்க…

“நன்மை செய்யவும் பகிர்ந்து வாழவும் மறவாதீர்கள். இவ்வகைப் பலிகளே கடவுளுக்கு உகந்தவை.”  - (எபிரேயர் 13:16)

“Keep doing good works and sharing your resources, for these are the kinds of sacrifice that please God” - (Hebrew 13:16)


மனதில் சிந்திக்க…  

கடவுள் தம் பிள்ளைகளான நம் அனைவரையும் எல்லா விதங்களிலும் நிறைவாக ஆசீர்வதிக்கிறார்.. அவர் நம்மிடம் விரும்புவதெல்லாம் பிறருக்கு உதவவும்  தாம் அளித்த ஆசீர்வாதத்தை பிறரோடு பகிர வேண்டும் என்பது தான்.. அவருக்கு உகந்த பாதையில் நடந்து அவரின் ஆசிரோடு வாழ முயல்வோமா?

God showers immense blessings on His children... But all God expects from us is to help others and share His blessings with the needy everyone around us... Can we try to lead a life pleasing God and thereby receive more and more of His blessings to lead a witness life for God.


-- 4th week - Saturday - Cycle 1


Friday, February 7, 2025

Feb 07

 மனதில் பதிக்க…

“ஆண்டவரே எனக்குத் துணை, நான் அஞ்ச மாட்டேன்; மனிதர் எனக்கு எதிராக என்ன செய்ய முடியும்?”  - (எபிரேயர் 13:6)

“With the Lord on my side, I fear nothing: what can human beings do to me?” - (Hebrew 13:6)


மனதில் சிந்திக்க…  

இயேசுவே நம் கடவுள். அவர் நம்மோடு இருக்கையில் நமக்கு எத்தீங்கு வந்தாலும் அதை எதிர்கொள்ளும் ஆற்றலை அளிக்கிறார். ஆனால் நாமோ பல நேரங்களில் அவரை இறுக பற்றிக்கொள்ளாமல் குறுக்கு வழியில் தீர்வு காண நினைக்கிறோம்.

இயேசு மெய்யான தேவன் என்று முழுவதுமாக விசுவாசித்து எத்தனை துன்பம் வந்தாலும் கடவுளோடு  சேர்ந்து வெற்றிகொள்ள முயற்சிப்போமா?

Jesus Christ is our God Almighty. With Him, we get the power to face any problems. But many times, we fail to bound together with Him and instead choose an easy/shortcut to resolve the problems. 

Let’s try to completely trust God and stay united with Him always to achieve greater things in life.

--4th week - Friday - Cycle 1


Thursday, February 6, 2025

Feb 06

 மனதில் பதிக்க…

“புதியதோர் உடன்படிக்கையின் இணைப்பாளராகிய இயேசுவின் முன்னிலையிலும் நிற்கிறீர்கள். ஆபேலின் இரத்தத்தைப் போலன்றிச் சிறந்த முறையில் குரலெழுப்பும் இயேசுவின் இரத்தத்தினால் தெளிக்கப்பட்டிருக்கிறீர்கள்.” -  (எபிரேயர் 12:24)

“And to Jesus, the mediator of a new covenant, and to purifying blood which pleads more insistently than Abel's.” - (Hebrew 12:24)


மனதில் சிந்திக்க…  

நம்மை படைத்த கடவுள் நாம் அனைவருக்குமே நம் பாதையை தேர்ந்தெடுக்கும் உரிமையை கொடுத்திருக்கிறார்..   நாம் எந்த நிலையில் இருந்தாலும் நம்மை அழைக்க கடவுள் தயாராக இருக்கிறார். இயேசு கிறிஸ்துவே நமது மீட்பர். அவராலே நமக்கு நிலை வாழ்வு உண்டு என்பதை உணர்ந்து அவருக்கு உகந்த வாழ்வை வாழ முயற்சிப்போமா?

Our creator the Almighty God has given us the freedom to choose our path in life.. And He’s ready to accept us however we maybe.. Jesus Christ is our redeemer.. Can we accept Him and lead a life as per His preaching to earn the promised rewards of eternal life?

--4th week Thursday - Cycle 1


Wednesday, February 5, 2025

Feb 05

 மனதில் பதிக்க…

 “ஆண்டவர் தாம் யாரிடம் அன்பு கொண்டிருக்கிறாரோ அவர்களையே கண்டிக்கிறார்”  - (எபிரேயர் 12:6)

“For the Lord trains those he loves and chastises every son he accepts.” (Hebrew 12:6)


மனதில் சிந்திக்க…  

கடவுள் நம் ஒவ்வொருவர் மீதும் அளவுக்கு அடங்கா அன்பு கொண்டிருக்கிறார். ஆனால் நமக்கு துன்பம் வரும் வேளையில் கடவுளின் அன்பை கேள்வி கேட்கிறோம்.

ஆண்டவர் நம் சக்திக்கு ஏற்பவே துன்பம் அளிப்பார், நம்மை என்றும் கைவிட மாட்டார் என்பதை அறிந்து அவரோடு என்றும் இணைந்து வாழ முயற்சிப்போமா?

God loves each one of us abundantly. But when we come across problems in life, we question God’s love

Let’s understand that God gives us problems only as per our might and more importantly he never forsakes us, and so can we try to lead a life united with God?


-- 4th week - Wednesday - Cycle 1


Tuesday, February 4, 2025

Feb 04

 மனதில் பதிக்க…

 “அஞ்சாதீர், நம்பிக்கையை மட்டும் விடாதீர்” என்று இயேசு கூறினார்.”  - (மாற்கு 5:36)

“But Jesus overheard what they said and he said to the president of the synagogue, 'Do not be afraid; only have faith.”(Mark 5:36)


மனதில் சிந்திக்க…  

கடவுள் நம் ஒவ்வொருவரையும் அவர் உள்ளங்கையில் வைத்து காத்து வருகிறார். ஆனால் நாமோ சிறு துன்பம் வந்தாலும் அவரின் மீது நம்பிக்கை இல்லாமல் விலகி சென்று விடுகிறோம்.

அந்த சிறுமியின் தந்தை போல நாமும் என்ன நேர்ந்தாலும் இயேசுவின் மீது நம்பிக்கை மட்டும் குறையாமல் வாழ முயற்சிப்போமா?

God holds each one of us in his palm and keeps us safe & protects us at all times. But even when we face little problems in life, our faith becomes a question mark, and we move away from God.

Like the girl’s father, whatever be the situation, can we try to hold on to God and lead a trustful life united with God?

-- 4th week - Tuesday - Cycle 1


Monday, February 3, 2025

Feb 03

 மனதில் பதிக்க…

 “நம்பிக்கையினாலேயே இவர்கள் அரசுகளை வென்றார்கள்; நேர்மையாகச் செயல்பட்டார்கள்; கடவுள் வாக்களித்தவற்றைப் பெற்றார்கள்”  - (எபிரேயர் 11:33)

These were men who through faith conquered kingdoms, did what was upright and earned the God’s promises. (Hebrews 11:33)


மனதில் சிந்திக்க…  

கிறிஸ்துவர்களாகிய நாம் அனைவருமே இயேசுவின் மீது நம்பிக்கை  கொண்டு வாழ தேர்ந்துக்கொள்ளப் பட்டவர்கள். ஆனால் பல நேரங்களில் வாழ்வில் பிரச்சனைகளால் சோதிக்க படும் போது கடவுளின் திட்டத்தை ஏற்க மனமில்லாமல் நம்பிக்கை இழக்கிறோம்.

அன்றைய இறைவாக்கினர்கள் போல நாமும் கடவுளின் மீது அளவில்லா நம்பிக்கை கொண்டு அவரின் ஆசீரை நிறைவாக பெற முயற்சிப்போமா?

We Christians have been chosen to lead a life based on our faith on Christ Jesus. But many times due to various challenges and problems we fail to accept God's plan and lose faith in him. Like the prophets in today's reading, can we also try to build immense faith in God and receive his abundant blessings?

-- 4th week - Monday - Cycle C


Sunday, February 2, 2025

Feb 02

 மனதில் பதிக்க…


நீங்கள் தேடுகின்ற தலைவர் திடீரெனத் தம் கோவிலுக்கு வருவார் மலாக்கி – 3:1


The leader you are looking for will suddenly come to his Temple Malachi – 3:1


மனதில் சிந்திக்க…  


ஜெபம், தியானம் அல்லது சுய-பிரதிபலிப்பு, குணமடைதல் மற்றும் நல்லிணக்கத்திற்கான இடத்தை உருவாக்குதல் மூலம், நம் இதயத்தைத் கடவுளின் பிரசன்னத்திற்காக தயார்படுத்துவதற்கான வழியாகும். நமது சொந்த பயணத்தில் நாம் என்ன முயற்சி எடுக்க வேண்டும் என்று நினைக்கிறோம்?


Through prayer, meditation, or self-reflection, creating space for healing and reconciliation is a beautiful way to prepare our heart for God’s presence. What steps do we feel we need to take in our own journey?


-- 4th week ordinary time - Sunday - Year C

Saturday, February 1, 2025

Feb 01

  மனதில் பதிக்க…


காற்றும் கடலும் இவருக்குக் கீழ்ப்படிகின்றனவே! இவர் யாரோ? மாற்கு- 4:35


Who is this, that even the wind and the sea obey Him? Mark - 4:35


மனதில் சிந்திக்க…  


நாம் வாழ்க்கையில் புயல்களை சந்திக்கும் போது, கடவுள் நம்மை கைவிட்டு விட்டார்  என்று நினைக்காமல், அவருடைய சக்தியையும் பிரசன்னத்தையும் நாம் அனுபவிக்கும் வாய்ப்புகளாக  கருதவேண்டும். குழப்பங்கள்  நம்மைத் தாக்கும் போதும், நாம் அவரை முழுமையாக  நம்புகிறோமா?


When we face storms in life it does not mean that God has abandoned us, they are opportunities for us to experience His power and presence. Do we trust him no matter what, even when confusion tempts us?

-- 3rd Week - ordinary time - Saturday - Cycle 1