மனதில் பதிக்க
"உன்மீது நீ அன்பு கூர்வதுபோல உனக்கு அடுத்திருப்பவர்மீதும் அன்பு கூர்வாயாக" - மத்தேயு 22:39
You shall love your neighbor as yourself. - Matthew 22:39
மனதில் சிந்திக்க
மறைநூல் அறிஞர் இயேசுவிடம் ஒரு கட்டளையைக் கேட்டபோதும், இயேசு இரண்டு கட்டளைகளைக் கொடுத்து, நம்மைப் போலவே பிறரையும் அன்பு செய்ய வேண்டியதன் முக்கியத்துவத்தை உணர்த்தினார். நாம் அனைவருக்கும் கடன்பட்டிருப்பது அன்பை மட்டுமே. இறைவனின் கட்டளைகளைக் கடைப்பிடிக்க உதவும் மிகச்சிறந்த பண்பு அன்பே! இறைவன் தம் தெய்வீக அன்பை நம் இதயங்களில் பொழிந்து, நாம் தொடர்ந்து அவருடைய கட்டளைகளைக் கடைப்பிடிக்க அருள்புரிய வேண்டுவோம்.
Although the scholar asked Jesus for one commandment, Jesus gave him two, emphasizing the importance of loving others as us. We owe everyone nothing but love. Love is the greatest virtue, for it helps us fulfill His commandments. Let us ask God to pour His divine love into our hearts and help us consistently obey Him.
- Sunday of the Thirtieth Week in Ordinary Time - Year A
No comments:
Post a Comment