Saturday, October 3, 2026

Oct 03

 மனதில் பதிக்க

“எனக்குத் துன்பம் விளைந்தது என் நன்மைக்காகவே; அதனால், உம் விதிமுறைகளை நான் கற்றுக்கொண்டேன்”-  தி பா 119:71

“It was good for me that I had to suffer, the better to learn your judgements.” - Psalms 119:71

                                                                                மனதில் சிந்திக்க

வாழ்க்கையில் இன்பமும் துன்பமும் மாறி மாறி வருகின்றன. இன்பமான தருணங்களை இறைவனின் ஆசீர்வாதமாக ஏற்றுக்கொள்ளும் நாம், சோதனைகளும் துன்பங்களும் வரும்போது இறைவன் மீது நம்பிக்கை இழந்து துவண்டு போகிறோம். நம் வாழ்வில் நிகழும் அனைத்துமே கடவுளின் திட்டத்தின் படி நம் நன்மைக்கே என்ற முழுமையான நம்பிக்கையுடன் வாழ முயல்வோமா?

Life is filled with both joys and sorrows. We readily consider the joyful moments to be blessings from God, but when we face trials and difficulties, we often lose our trust in Him and become discouraged. God has a plan for every one of us, and can we accept even problems/challenges are for our good and lead a life united with God.

-- Twenty-Sixth Saturday in Ordinary time - Cycle 2


Friday, October 2, 2026

Oct 02

 மனதில் பதிக்க

“நான் அமர்வதையும் எழுவதையும் நீர் அறிந்திருக்கின்றீர்; என் நினைவுகளை எல்லாம் தொலையிலிருந்தே உய்த்துணர்கின்றீர்.”- தி ப 139:2

“You know when I sit, when I rise, you understand my thoughts from afar.”. - Psalms 139:2

                                                                                       மனதில் சிந்திக்க

நம்மைப் படைத்தது முதல் இந்நாள் வரையிலும், நம் செயல்களை மட்டுமல்லாமல் நம் எண்ணங்களையும் அறிந்திருக்கும் இறைவன், நம் ஒவ்வொருவருக்கும் ஒரு அழகான திட்டத்தை வைத்துள்ளார். அவருடைய திட்டத்தில் முழுமையான நம்பிக்கை கொண்டு, அவருடைய வழிகாட்டுதலின்படி இயேசுவின் பிள்ளைகளாக வாழ நாம் முயற்சிப்போமா?


From the moment He created us until this very day, God knows not only our actions but also our every thought. He has a plan for each one of us. Let us place our complete trust in His plan and strive to live as faithful children of Jesus, following His guidance. Let us reflect on this.

-- Twenty-Sixth Friday in Ordinary time - Cycle 2


Thursday, October 1, 2026

Oct 01

மனதில் பதிக்க

“ஆண்டவரே, நான் மன்றாடும்போது என் குரலைக் கேட்டருளும்; என்மீது இரக்கங்கொண்டு எனக்குப் பதிலளித்தருளும்?”-  தி. ப 27:7

“Yahweh, hear my voice as I cry, pity me, answer me!”. - Psalms 27:7

                                                                           மனதில் சிந்திக்க

நாம் கடவுளின் பிள்ளைகள் என்ற உரிமையில், பல நேரங்களில் அவர்மீது அச்சமின்றி பாவங்களில் விழுந்துவிடுகிறோம். நம் அன்பு ஆண்டவர் என்றும் நமக்குத் துணையாக இருந்து, நம்மைக் கைவிடமாட்டார். நாம் எத்தனை பாவங்கள் செய்திருந்தாலும், மனம் திருந்தி அவரிடம் திரும்பும்போது நம்மை மன்னித்து அன்புடன் ஏற்றுக்கொள்வார் என்ற நம்பிக்கையுடன், இறைவனின் பிள்ளைகளாக அவருக்கு உகந்த வாழ்க்கையை வாழ முயல்வோமா? சிந்திப்போம்?

As children of God, we sometimes take His love and presence for granted and, without fear of Lord, fall into sin. Yet our loving Lord never abandon us though we commit sins and keeps us closer to Him. With faith in His unfailing love and mercy, shall we strive to live as true children of God, seeking to lead a life pleasing to Him? Let us reflect.

-- Twenty - Sixth Thursday in Ordinary time - Cycle 2