Friday, January 31, 2025

Jan 31

மனதில் பதிக்க…


பெரிய போராட்டத்தையே மன உறுதியோடு ஏற்றுக்கொண்டீர்கள்; எனவே எதிர்நோக்கை இழந்துவிடாதீர்!- எபிரெயர்-10:32


You accepted the great struggle with determination; So don't lose hope! - Hebrews-10:32


மனதில் சிந்திக்க…  


கடவுளின் வாக்குத்தத்தங்களைப் பெறுவதற்கு, நம்முடைய கடினமான நேரங்களையும் நாம் சகித்துக்கொண்டு, கடவுளுடைய  சித்தத்தை தொடர்ந்து செய்ய வேண்டும். கடவுளின் வாக்குறுதிகளில் உறுதியான மற்றும் நிலையான நம்பிக்கை நமக்கு இருக்கிறதா? 


We need to endure and continue to do the will of God even during our difficult times, in order to receive the promises of God. Do we have steadfast and abiding faith in the promises of God?


-- 3rd week ordinary time - Friday - Cycle 1

Thursday, January 30, 2025

Jan 30

 மனதில் பதிக்க…


எந்த அளவையால் அளக்கிறீர்களோ, அதே அளவையால் உங்களுக்கும் அளக்கப்படும். மாற்கு - 4: 24

The measure with which you measure will be measured out to you. Mark - 4: 24



மனதில் சிந்திக்க…  


இயேசு நம்மை ஒளியாகப் பிரகாசிக்கவும், வெளிப்படைத்தன்மையுடன் வாழவும், கூர்ந்து கேட்கவும், தாராளமாகக் கொடுக்கவும் அழைக்கிறார் . இவ்வாறு நடப்பதால் நாம் கடவுளின் மகிமையை பிரதிபலிக்கிறோம். கடவுள் கொடுத்த ஒளியை நாம் பயன்படுத்துகிறோமா? நம்மையும் சுற்றியிருப்பவர்களையும் மாற்ற அவருடைய வார்த்தையை நாம் அனுமதிக்கிறோமா?

Jesus calls us to shine brightly as light, live transparently, listen actively, and give generously by doing so we as children reflect the glory of God. Are we using the light God has given us? Are we allowing His Word to transform us and those around?


-- 3rd week - Thursday - Cycle 1


Wednesday, January 29, 2025

Jan 29

 மனதில் பதிக்க…

 விதைப்பவர் ஒருவர் விதைக்கச் சென்றார் – மாற்கு 4:1

The Parable of the Sower – Mark 4:1



மனதில் சிந்திக்க…  

ஜெபம் மற்றும் மனந்திரும்புதலின் மூலம் நம் இதயங்களை இரக்கம் நிறைந்த மனமாக மாற்ற கடவுள் நம்மை அழைக்கிறார். நாம் உலகத்தின் கவலைகளில்  சிக்கி தவிக்காமல், நல்ல மண்ணைப் போல கடவுளின் வார்த்தை ஏற்றுக்கொள்ளக்கூடியவர்களாக இருக்கலாமா?

God invites us to soften our hearts through prayer and repentance, allowing His Word to enter and transform us. Can we open our hearts to be receptive like the good soil and not allow the cares of this world to choke the Word?

--3rd week Wednesday - cycle 1


Tuesday, January 28, 2025

Jan 28

 மனதில் பதிக்க…

 கடவுளின் திருவுளத்தை நிறைவேற்றுபவரே, என் சகோதரரும் சகோதரியும் தாயும் ஆவார். மாற்கு - 3: 31

Whoever does the will of God is my brother and sister and mother. Mark - 3:31




மனதில் சிந்திக்க…  

புனித தாமஸ் அக்வினாஸ் கடவுளின் ஆன்மீக குடும்பத்தில் இருந்து அவர் மீது மட்டுமே கவனம் செலுத்தினார். கடவுளின் சித்தத்தை பின்பற்றுபவர்கள் அவரது பிள்ளைகள் என்ற அடையாளத்தை ஏற்றுக்கொண்டு அவருடைய அன்பை பிரதிபலிக்கும் உறவுகளை உருவாக்குகிறோமா?

St. Thomas Aquinas focused solely on God, and his devotion was to God's spiritual family. As followers of God's will, do we embrace the identity of God's children and create relationships that reflect His love?


-- 3rd week Tuesday - Cycle 1


Monday, January 27, 2025

Jan 27

 மனதில் பதிக்க…


பலரின் பாவங்களைப் போக்கும் பொருட்டு, ஒரே முறை தம்மைத்தாமே பலியாகக் கொடுத்த கிறிஸ்து, மீண்டும் ஒரு முறை தோன்றுவார். எபிரெயர்- 9: 15, 24

Christ, who once gave Himself as a sacrifice for the sins of many, will come again. Hebrews - 9: 15, 24




மனதில் சிந்திக்க…  


நாம் மனத்தாழ்மையுடனும், மாற்றத்திற்குத் திறந்தவர்களாகவும் இருந்தால், கடவுளின் கருணையைப் பெற்று மன்னிப்பைக் காணலாம். மனத்தாழ்மைக்கு நம் இதயத்தைத் திறந்து, கடவுள் நம்மை வழிநடத்த எப்படி அனுமதிப்பது என சிந்திப்போமா?

 If we remain humble and open to change, then we can receive the mercy of God and find forgiveness. How can we open our heart to humility and let God guide us?


- 3rd week - Monday - Cycle 1


Sunday, January 26, 2025

Jan 26

 மனதில் பதிக்க…

 நீங்கள் கேட்ட மறைநூல் வாக்கு இன்று நிறைவேறிற்று. லூக்கா 1:1, 4:14

Today this Scripture passage is fulfilled in your hearing. Luke 1:1, 4:14


மனதில் சிந்திக்க…  

இயேசுவின் வார்த்தையை உலகிற்கு கொண்டு செல்வதே நமது நோக்கம். என்ன முக்கியம் என்றால், இறைவனுடைய வார்த்தைக்கு நமது ஒற்றுமையை வெளிப்படுத்துவது. மற்றவர்களை உடலுக்குள் வரவேற்பது, இவை அனைத்தும் கடவுளின் மகிமை மற்றும் புகழுக்காக.நமக்குக் கொடுக்கப்பட்ட பரிசுகளை நாம் முழுமையாகப் பயன்படுத்துகிறோமா?

Together our purpose is to bring the word of Jesus to the world. What is important is that we demonstrate our oneness with the word, welcoming other members into the body, all for the glory and praise of GOD. Are we making full use of the gifts we have been given?


- 3rd Sunday - Year C


Saturday, January 25, 2025

Jan 25

 மனதில் பதிக்க…


என்னோடு இருந்தவர்கள் ஒளியைக் கண்டார்கள்; ஆனால் என்னோடு பேசியவரது குரலைக் கேட்கவில்லை. - திருத்தூதர்பணிகள் 22:9


My companions saw the light but did not hear the voice of the one who spoke to me. Acts 22:9




மனதில் சிந்திக்க…  


புனித பவுல் அடிகளாரின் மனமாற்று விழாவைக் கொண்டாடும் நாம் நம் வாழ்க்கையைக் குறித்த பயத்தினாலும் நமது தேவைக்காகவும் மட்டுமே ஆலயத்திற்குச் செல்லாமல் இறை அன்பினால் செல்வோம்; இறை பிணைப்பால் பணி செய்வோம்; இயேசுவின் குரலுக்கு மட்டும் செவிகொடுத்து வாழ்வோம் .


As we celebrate the feast of the Conversion of Saint Paul, let us not go to Church out of fear for our lives or just for our personal needs, but out of God's love. Let's live our life by listening only to the voice of Jesus.


-- Second week - Cycle 1


Friday, January 24, 2025

Jan 24

 மனதில் பதிக்க…


தம்மோடு இருக்கவும் நற்செய்தியைப் பறைசாற்ற அனுப்பப்படவும் பேய்களை ஓட்ட அதிகாரம் கொண்டிருக்கவும் அவர் பன்னிருவரை நியமித்தார்; - மாற்கு 3:14


He appointed twelve [whom he also named apostles] that they might be with him and he might send them forth to preach and to have authority to drive out demons - Mark 3:14



மனதில் சிந்திக்க…  


இயேசுவின் சீடர்களாகிய நமக்கு அவர் தந்த அதிகாரங்களை சரியாக பயன்படுத்துகின்றோமா? ஆழமாக சிந்தித்து இனியாவது மற்றவர்களின் பிரச்சனைகளுக்காக வருந்தி செபிக்கவும் நற்செய்தியை அறியாதவர்களுக்கு அதைச்சொல்ல சந்தர்ப்பங்களை உருவாக்கவும் முற்படுவதோடு நாமும் தூய ஆவியானவரின் வழியில் நடப்போம். 


As disciples of Jesus, are we using the authority He gave us properly? Think deeply and pray for the problems of others and try to create opportunities to tell the gospel to those who do not know it and let us also walk in the way of the Holy Spirit.


-- 2nd week Friday ordinary time Cycle 1


Thursday, January 23, 2025

Jan 23

 மனதில் பதிக்க…


இத்தகைய தலைமைக் குருவே நமக்கு ஏற்றவராகிறார். இவர் தூயவர், கபடற்றவர், மாசற்றவர், பாவிகளிடமிருந்து பிரித்தெடுக்கப்பட்டு, வானங்களுக்கு மேலாக உயர்த்தப்பட்டவர். - எபிரேயர் 7:26


It was fitting that we should have such a high priest: holy, innocent, undefiled, separated from sinners, higher than the heavens. - Hebrews 7:26




மனதில் சிந்திக்க… 


இயேசு ஆண்டவர் தூய குருத்துவ வாழ்வைக் கொண்டிருந்தார். அதேபோல் நாமும் நமக்கு கொடுக்கப்பட்ட பொது குருத்துவத்தை கபடற்ற தூய்மையான வழியில் கடைப்பிடித்து இறைத்தேடலிருப்பவர்களுக்கும் தேவையிலிருப்பவர்களுக்கும் சரியான வழி காட்டுவோம்.


Lord Jesus had a sacred spiritual life. In the same way, shall we practice the public priesthood given to us in a pure way and show the right way to those who are seeking God and those who are in need?


- 2nd week - Thursday - Cycle 1


Wednesday, January 22, 2025

Jan 22

 மனதில் பதிக்க…


"ஓய்வு நாளில் நன்மை செய்வதா, தீமை செய்வதா? உயிரைக் காப்பதா, அழிப்பதா? எது முறை?” என்று அவர் கேட்டார். அவர்களோ பேசாதிருந்தார்கள். மாற்கு 3: 4


Then he said to them, “Is it lawful to do good on the sabbath rather than to do evil, to save life rather than to destroy it?” But they remained silent. Mark 3: 4





மனதில் சிந்திக்க… 


கலாச்சாரம் என்ற பெயரில் நாமும் நல்ல நேரம் பார்த்து செய்ய நினைத்த எத்தனையோ நல்ல காரியங்களை செய்யத் தவறியிருக்கின்றோம். எனவே இயேசுவின் வார்த்தைகளை பின்பற்றும் நாம், இறைவன் நமக்குத் தந்த ஒவ்வொரு நாளையும் ஒவ்வொரு மணித்துளியையும் சிறந்ததாக எண்ணி செயல்படுவோம். 


Waiting for a good time to do good things, which is part of our culture, has resulted in failures. Therefore, we who follow the words of Jesus, should consider any day, any time to be the best one given to us by God and not procrastinate doing good things.


- 2nd week - Wednesday - Cycle 1


Tuesday, January 21, 2025

Jan 21

 மனதில் பதிக்க…


நீங்கள் எதிர்நோக்குவது முழு உறுதி பெறும் பொருட்டு, உங்களுள் ஒவ்வொருவரும் முன்பு காட்டிய அதே ஆர்வத்தையே இறுதிவரை காட்டவேண்டும் என மிகவும் விரும்புகிறோம். - எபிரேயர் 6:11


We earnestly desire each of you to demonstrate the same eagerness for the fulfillment of hope until the end- Hebrews 6: 11



மனதில் சிந்திக்க… 


இறை ஊழியக்காரியங்கள் அல்லது ஆலய வழிபாடுகள் அல்லது பிற நன்மைச் செயல்கள் எதுவானாலும் ஆரம்பத்தில் மிகவும் ஆர்வமுடன் செயல்படுவோம். ஆனால் நாளடைவில் ஆர்வக்குறைபாடு வருவதனால் நமது நம்பிக்கையும் குறைந்து போகின்றது. எனவே நமது எதிர்நோக்கு முழுமைபெற இன்னும் ஆர்வத்தோடு உழைப்போமா?


Be it religious services or worship or any other kind-hearted activity, we will be very enthusiastic in the beginning. But eventually our faith also diminishes due to lack of interest. Shall we therefore, work more diligently to fulfill our vision?


-- 2nd week - Tuesday - Cycle 1


Monday, January 20, 2025

Jan 20

 மனதில் பதிக்க…


அவர் தாமே வலுவின்மைக்கு ஆளாகியிருப்பதால், அறியாமையில் இருப்போருக்கும் நெறி தவறி நடப்போருக்கும் பரிவு காட்டக் கூடியவராய் இருக்கிறார் - எபிரேயர்5:2


He is able to deal patiently with the ignorant and erring, for he himself is beset by weakness - Hebrews 5:2




மனதில் சிந்திக்க… 


நம் இயேசு ஆண்டவர் நெறிதவறியவர்களுக்கும் பரிவு காட்டுகிறார் என்று வாசிக்கின்றோம். அப்படியாயின் அவரைப் பின்பற்றும் நாமும் நம் சக மனிதர்கள் எந்த நிலையில் இருந்தாலும் வேறுபாடு காட்டாமல் ஏற்றுக்கொண்டு வாழ முயற்சிப்போமா?


Our Lord Jesus shows mercy even to the unruly. Shall we, who follow Him, try to accept and live with our fellow human beings regardless of their status?


-- 2nd week - Monday- Cycle 1


Sunday, January 19, 2025

Jan 19


மனதில் பதிக்க…

"அவர் உங்களுக்குச் சொல்வதெல்லாம் செய்யுங்கள்” என்றார். - யோவான்2:5


His mother said to the servers, “Do whatever he tells you.” - John 2:5


மனதில் சிந்திக்க… 


நமது அன்னை மரியாள் அன்றும் இன்றும் என்றும் நமக்கு கற்ப்பிப்பது, நம் இயேசு ஆண்டவர் சொல்வதை செய்வதற்கே. நாமும் சற்று சிந்தித்துப் பார்ப்போம். நமது வாழ்க்கையிலும் அன்றாட கடமைகளை இறைவார்த்தையைப் பின்பற்றித் தான் செய்கின்றோமா?


Our Mother Mary always teaches us to do what our Lord Jesus says. Are we following God's word in our life and daily duties? Let's think about it.

--Second Sunday - Cycle C

Saturday, January 18, 2025

Jan 18


மனதில் பதிக்க…


கடவுளுடைய வார்த்தை உயிருள்ளது, ஆற்றல் வாய்ந்தது; எபிரேயர் 4:12


Indeed, the word of God is living and effective, - Hebrews 4:12 


மனதில் சிந்திக்க… 


ஒவ்வொரு முறையும் நற்செய்தியை நாம் வாசிக்கும் போது இறைவன் நமக்கு ஒரு படிப்பினையைத்  தருகின்றார். துன்பத்திலும், வருத்தத்திலும்  இருப்போருக்கு ஆறுதலாக இருப்பதும், சோர்வோடு இருப்பவருக்கு புத்துயிர் ஊட்டுவதும்  இவ்வார்த்தைகள் தான். தினம் நாம் இறைவார்த்தையை வாசித்து, சிந்தித்து, பின்பற்ற மறக்க வேண்டாம். 


Every time when we read the Gospel, God teaches a life lesson. His words comforts those who are in sorrow and revives the tired.  Let's not forget to read, think and follow the Word of God every day.


- First Saturday ordinary time cycle 1

Friday, January 17, 2025

Jan 17

 மனதில் பதிக்க…


அப்போது முடக்குவாதமுற்ற ஒருவரை நால்வர் சுமந்து அவரிடம் கொண்டுவந்தனர். -  மாற்கு 2: 3


They came bringing to him a paralytic carried by four men. Mark 2:3




மனதில் சிந்திக்க… 


நாம் நம்மை சுற்றி உள்ளவர்களுக்காக நம்பிக்கையுடன் செபிக்கும் போது இறைவன் அற்புதங்களை செய்து அதை நிறைவேற்றுவார். முடக்குவாதமுற்றவறைத் தூக்கிக்கொண்டு வந்த அந்த நால்வரின் நம்பிக்கை போல நாமும் கிறிஸ்துவில் அசைக்க முடியாத நம்பிக்கை கொள்வோமா? 


When we pray for our neighbors, our prayers are being heard and will be fulfilled. Shall we have faith in Christ like those four who carried the paralytic?


- First Week - Friday- Cycle 1


Thursday, January 16, 2025

Jan 16

 மனதில் பதிக்க…


இயேசு அவர்மீது பரிவு கொண்டு தமது கையை நீட்டி அவரைத் தொட்டு அவரிடம், “நான் விரும்புகிறேன், உமது நோய் நீங்குக!” என்றார். மாற்கு 1:41


Moved with pity, he stretched out his hand, touched him, and said to him, “I do will it. Be made clean.” Mark 1:41




மனதில் சிந்திக்க… 


சமூகத்திற்கு அஞ்சாதவர் இயேசு கிறிஸ்து. செய்வது சரியென்றால், எதற்கும் அஞ்சாமல், எவருக்கும் பயப்படாமல் துணிவோடு செயல்பட வேண்டும் என்பதுதான் இயேசு நமக்குத் தரும் செய்தி. அதனை நமது உள்ளத்தில் ஏற்று நடப்போம்.


Jesus Christ is not afraid of others. Jesus' message to us is that if we do the right thing, we should act boldly without fearing anything or anyone. Let's accept it in our hearts and act accordingly.


- Ordinary time - first Week - Thursday- Cycle 1


Wednesday, January 15, 2025

Jan 15

 மனதில் பதிக்க…


இவ்வாறு தாமே சோதனைக்கு உள்ளாகித் துன்பப்பட்டதனால் சோதிக்கப்படுவோருக்கு உதவி செய்ய அவர் வல்லவர். - எபிரேயர் 2 :18


Because he himself was tested through what he suffered, he is able to help those who are being tested. - Hebrews 2: 18




மனதில் சிந்திக்க… 


மனிதனான கிறிஸ்துவால் நம் பலவீனங்களை புரிந்து கொள்ள முடியும். நம் சோதனைகளில் கிறிஸ்துவை பலமாக பற்றிக்கொண்டு அந்த துன்பச் சூழலில் இருந்து வெளிவருவோமா?  


As Christ lived a human life, He can understand our weaknesses. shall we hold on to Christ tight in our trials and sufferings and emerge victorious from our challenges?


- Wednesday of the First Week in Ordinary Time - Cyle 1

Tuesday, January 14, 2025

Jan 14

 மனதில் பதிக்க…


“வாயை மூடு; இவரை விட்டு வெளியே போ” என்று இயேசு அதனை அதட்டினார் - மாற்கு 1:25


Jesus rebuked him and said, “Quiet! Come out of him!” - Mark 1:25




மனதில் சிந்திக்க… 


இயேசுவும், தீய சக்தியும் ஒரே இடத்தில் இருக்க முடியாது. நம் மனதிற்குள் இயேசுவை நிறைத்து தீய செயல்களையும், தீய பழக்க வழக்கங்களையும்  வெளியேற்றுவோமா?


Jesus and the power of evil cannot coexist. Shall we fill our hearts with Jesus and cast out evil deeds and habits?


- Tuesday of the First Week in Ordinary Time - Cycle 1

Monday, January 13, 2025

Jan 13

 மனதில் பதிக்க…


“காலம் நிறைவேறிவிட்டது. இறையாட்சி நெருங்கி வந்துவிட்டது; மனம் மாறி நற்செய்தியை நம்புங்கள்” மாற்கு 1: 15


The kingdom of God is at hand. Repent, and believe in the gospel.” Mark 1:15



மனதில் சிந்திக்க… 


தினமும் விவிலியத்தை மட்டும் வாசித்துவிட்டு மனம் மாறாமல் நம் வாழ்வை அதே வழியில் தொடர்ந்தால் நமக்கு வரும் பயன் என்ன? 


What is the benefit to us if we just read the Bible every day and continue our lives in the same way without changing our minds and the way we live?


- Monday of the First Week in Ordinary Time - cycle 1