Tuesday, December 30, 2025

Dec 30

 

 மனதில் பதிக்க

 குழந்தையும் வளர்ந்து வலிமை பெற்று ஞானத்தால் நிறைந்து கடவுளுக்கு  உகந்ததாய் இருந்தது - லூக்கா 2-40

And as the child grew to maturity, he was filled with wisdom; and God's favor was with him. - Luke 2:40

 

மனதில் சிந்திக்க


இயேசு கடவுளின் மகன் என்றாலும், கீழ்ப்படிதலையும் பணிவையும் கற்றுக்கொண்டார். எனினும் முழுமையாக தெய்வீகமானவர், தம்முடைய தந்தையின் சித்தத்தை நிறைவேற்றுபவர். நாமும் நம்மை கடவுளின் சித்தத்திற்கு முழுமையாக ஒப்புக்கொடுப்போமா?

 

Jesus, although the son of God learned obedience and submission, yet fully divine, doing the will of His Father. Shall we also surrender us to the will of God?


-- The Sixth Day in the Octave of Christmas



 


Monday, December 29, 2025

Dec 29

 

மனதில் பதிக்க

 

ஏனெனில், மக்கள் அனைவரும் காணுமாறு, நீர் ஏற்பாடு செய்துள்ளஉமது மீட்பை என் கண்கள் கண்டுகொண்டன. - லூக்கா 2-30:31

 

For my eyes have seen the salvation which you have made ready in the sight of the nations. - Luke 2-30:31

 

மனதில் சிந்திக்க

 

சிமியோனைப் போலவே, இயேசுவை அனைவருக்கும் கடவுள் வாக்குறுதியளித்த "இரட்சிப்பாக" காணவும், அவரை கடவுளின் திட்டத்தின் நிறைவேற்றமாக அங்கீகரிக்கவும் அழைக்கப்படுகிறோம். நாமும் கடவுளின் வாக்குறுதிகளுக்காக பொறுமையுடன் காத்திருப்போமா?

 

Like Simeon, we are called to see Jesus as God's promised "Salvation" for all, recognizing Him as the fulfillment of God's plan. Shall we also wait on the Lord with patience for His promises?


-- The Fifth Day in the Octave of Christmas

 


Sunday, December 28, 2025

Dec 28

 

மனதில் பதிக்க… 


ஆண்டவருடைய தூதர் யோசேப்புக்குக் கனவில் தோன்றி, “நீர் எழுந்து குழந்தையையும் அதன் தாயையும் கூட்டிக் கொண்டு எகிப்துக்குத் தப்பி ஓடிச் செல்லும். -  மத்தேயு 2:13

 

An angel of the Lord appeared to Joseph in a dream. “Get up,” he said, “take the child and his mother and escape to Egypt. - Matthew 2:13


மனதில் சிந்திக்க

 

யோசேப்பு மற்றும் மரியாள் ஆகியோரின் விசுவாசம், நமக்குக்  கடினமான சூழ்நிலைகளிலும்  கடவுளை நம்புவதன் வல்லமையை வெளிப்படுத்துகிறது. நாமும் கடவுளை முழுமையாக நம்புவோமா?

 

The faith of Joseph and Mary shows us the power of trusting God even in times of difficult situation. Shall we also place our full trust in God at all times?


-- Holy Family Feast day

 


Saturday, December 27, 2025

Dec 27

 

 மனதில் பதிக்க… 


பின்னர், கல்லறைக்கு முதலில் வந்து சேர்ந்த மற்றச் சீடரும் உள்ளே சென்றார், கண்டார், நம்பினார். - யோவான் 20: 8

 

Then the other disciple, who reached the tomb first, also went in, and he saw and believed. -  John 20: 8

 

மனதில் சிந்திக்க…


பரிசுத்த ஆவியின் வரத்தின் மூலம், இயேசுவையும், அவருடைய உயிர்த்தெழுதலின் வல்லமையையும் அறிவதற்கு நாம்'விசுவாசக் கண்களை' பெறுகிறோம். உயிரோடிருக்கும் இயேசு கிறிஸ்துவைச் சந்தித்து, அவரை தனிப்பட்ட முறையில் அறிந்துகொள்வோமா?

 

Through the gift of the Holy Spirit, the Lord gives us "eyes of faith" to know Him and the power of His resurrection. Shall we encounter the living Jesus Christ and know Him personally?


-- The Second Day in the Octave of Christmas

 

Friday, December 26, 2025

Dec 26

 

மனதில் பதிக்க… 


என் பெயரின் பொருட்டு உங்களை எல்லாரும் வெறுப்பர். இறுதி வரை மன உறுதியுடன் இருப்போரே மீட்கப்படுவர். மத்தேயு 10:22

 

You will be hated by all for my name's sake. But he who endures to the end will be saved. Matthew 10:22

 

மனதில் சிந்திக்க…


இயேசு, பாவத்தின் அடிமைத்தனத்திலிருந்து நம்மை மீட்க மனித உருவில் வந்தார். இது நம் வேதனைகள் மத்தியிலும் நாம் சந்தோஷமாக இருக்க ஒரு பெரிய காரணத்தைத் தருகிறது. நம் வாழ்வில் வரும் கஷ்டங்களை நாம் பொறுமையுடன் ஏற்றுக்கொண்டு, தொடர்ந்து மகிழ்ச்சியுடன் இருப்போமா?

 

Lord Jesus came in the flesh to ransom us from slavery to sin. This gives us a great cause for rejoicing even in the midst of our pain. May we accept the hardships that comes our way patiently and continue to rejoice joyfully?


-- The First Day in the Octave of Christmas

 


Thursday, December 25, 2025

Dec 25

 

 

மனதில் பதிக்க… 


இடையர்கள் தாங்கள் கேட்டவை, கண்டவை அனைத்தையும் குறித்துக் கடவுளைப் போற்றிப் புகழ்ந்து பாடிக்கொண்டே திரும்பிச் சென்றார்கள். அவர்களுக்குச் சொல்லப்பட்டவாறு எல்லாம் நிகழ்ந்திருந்தது. லூக்கா 2: 20

 

And the shepherds returned, glorifying and praising God for all they had heard and seen, as it had been told them. Luke 2: 20

 

மனதில் சிந்திக்க…


மேய்ப்பர்களே நற்செய்தியை முதலில் அறிவித்தவர்கள். தெய்வீகத் தூண்டுதலால் தாங்கள் அறிந்துகொண்ட இரகசியங்களை தங்களால் முடிந்த அனைவரிடமும் அவர்கள் கூறினார்கள். நம்முடைய செயல்களின் மூலம் நாமும் திருச்சபையில் ஆன்மீக மேய்ப்பர்களாகத் திகழ்வோமாக.

 

The shepherds are the first proclaimers of the Gospel. They told whomever they could about the mysteries that they had come to know by divine influence. Shall we be the spiritual shepherds in the church through our actions?


-- Nativity of our Lord

 

Wednesday, December 24, 2025

Dec 24

 

மனதில் பதிக்க… 


நம் கடவுளின் பரிவுள்ளத்தாலும் இரக்கத்தாலும் விண்ணிலிருந்து விடியல் நம்மைத் தேடிவருகிறது.  -  லூக்கா 1: 78-79

 

Because of the tender mercy of our Gods by which the daybreak from on high will visit us - Luke 1: 78

 

மனதில் சிந்திக்க…


இயேசு நம் மீது கிருபையும் இரக்கமும் உள்ளவராக இருக்கிறார் என்று நாம் விசுவசிப்போம். நாம் பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்டு, நம்மைச் சுற்றியுள்ளவர்களுக்கு நற்செய்தியின் மகிழ்ச்சியைப் பற்றி சாட்சி பகர்வோமா?

 

Let us believe that Lord Jesus, has been gracious and merciful towards us. May we be filled with Holy Spirit and bear witness for joy of the Gospel to those around us?


-- Fourth Wednesday in Advent

 


Tuesday, December 23, 2025

Dec 23

 

மனதில் பதிக்க… 


லேவியின் புதல்வரைத் தூய்மையாக்கிப் பொன், வெள்ளியைப்போல் அவர்களைப் புடமிடுவார். அவர்களும் ஆண்டவருக்கு ஏற்புடைய காணிக்கை கொண்டு வருவார்கள். - மலாக்கி 3:3

 

He will sit as a refiner and purifier of silver, and he will purify the sons of Levi and refine them like gold and silver, till they present right offerings to the LORD. - Malachi 3:3


மனதில் சிந்திக்க…


நம் வாழ்நாள் முழுவதும் தம் மகிழ்ச்சியால் நம்மை நிரப்பவே இறைவன், தன் முகத்தை நம்மில் காணும் வறை நம்மை தூய்மையாக்குகிறார். நாம் அவருடைய வாக்குறுதிகளை விசுவசித்து, அவருடைய வார்த்தைகளுக்கு கீழ்ப்படிந்து, நன்றி செலுத்தி, நம்முடைய வாழ்க்கையை அவருக்கு அர்ப்பணிப்போமா?

 

To fill us with the joy all the days of our lives, God refines us until we are pure enough to see His own face on us. Shall we offer our life to God by giving Him thanks, believe His promises and obey His words.


-- Fourth Tuesday in Advent

 


Monday, December 22, 2025

Dec 22

 

மனதில் பதிக்க… 


பசித்தோரை நலன்களால் நிரப்பியுள்ளார். லூக்கா 1: 53

 

He has filled the hungry with good things. Luke 1: 53

 

மனதில் சிந்திக்க…


இயேசு பிறப்பிற்கு வழிவகுத்த நிகழ்வுகளை சிந்திக்கும்போது, பழைய ஏற்பாட்டின் அனைத்து தீர்க்கதரிசனங்களும், வாக்குறுதிகளும், ஜெபங்களும் நிறைவேற்றப்படுவதைக் காண்கிறோம். நாம் இறைவன் மீது தாகம் கொண்டால், ஏமாற்றமடைய மாட்டோம் என்று நம்புவோமா?

 

As we think of the events leading to the birth of our Savior, we see all the prophecies, promises and prayers of the Old Testament being fulfilled. Shall we believe that if we hunger for the Lord, we will not be disappointed?


-- Fourth Monday in Advent

 


Sunday, December 21, 2025

Dec 21

 

மனதில் பதிக்க… 

அவருடைய தாய் மரியாவுக்கும் யோசேப்புக்கும் திருமண ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தது. அவர்கள் கூடி வாழும் முன் மரியா கருவுற்றிருந்தது தெரிய வந்தது. அவர் தூய ஆவியால் கருவுற்றிருந்தார். - மத்தேயு 1:18b

 

When his mother Mary had been betrothed to Joseph, before they came together, she was found to be with child of the Holy Spirit. - Matthew 1:18b


மனதில் சிந்திக்க…


இறைவன் தம்முடைய வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றுவார் என்ற நம்பிக்கையுடன் வாழ நாம் அழைக்கப்பட்டிருக்கிறோம். எல்லா நேரங்களிலும் , குறிப்பாக துன்பமான சூழ்நிலைகளை நாம் எதிர்கொள்ளும்போதும், இறைவனுடைய வாக்குறுதிகளைப் பற்றிக்கொள்வோமா?

 

We are called to believe that God will fulfill all His promises. Do we hold on to the promises of God at all times, especially when we are faced with uncertainty or adversity?


-- Fourth Sunday of Advent