Saturday, May 31, 2025

May 31

 மனதில் பதிக்க 


மரியாவின் வாழ்த்தை எலிசபெத்து கேட்டபொழுது அவர் வயிற்றில் இருந்த குழந்தை மகிழ்ச்சியால் துள்ளிற்று. எலிசபெத்து தூய ஆவியால் முற்றிலும் ஆட்கொள்ளப்பட்டார். - லூக்கா 1:41


When Elizabeth heard Mary’s greeting, the infant leaped in her womb, and Elizabeth, filled with the holy Spirit. - Luke 1:41


மனதில் சிந்திக்க 


மரியாள் தூய ஆவியானவரால் நிரப்பட்டிருந்தார். அவருடைய வார்த்தையினால் எலிசபெத்தும், திருமுழுக்கு யோவானும் தூய ஆவியானவரால் ஆட்கொள்ளப்படுகிறார்கள். நாமும் ஆவியானவர் கற்றுத் தந்த நல்ல வார்த்தைகளை மட்டுமே மற்றவர்களுடன் பயன்படுத்தலாமா?


Mary was filled with the Holy Spirit. Elizabeth and John, the Baptist were filled with the Holy Spirit through her words. Shall we also use kind words taught by the Holy Spirit with others?


-- Easter 6th Saturday - Cycle 1


Friday, May 30, 2025

May 30

 மனதில் பதிக்க 


பவுல் கொரிந்து நகரில் இருந்தபோது, இரவில் ஆண்டவர் பவுலுக்குக் காட்சியில் தோன்றி, “அஞ்சாதே; பேசிக்கொண்டேயிரு; நிறுத்தாதே. ஏனெனில், நான் உன்னோடு இருக்கிறேன். - திருத்தூதர்பணிகள் 18:9 


One night in a vision the Lord said to Paul, “Do not be afraid. Go on speaking, and do not be silent, for I am with you. - Acts of the Apostles 18:9


மனதில் சிந்திக்க 


இறைவனிடமிருந்தே பாவங்களிலிருந்து விடுதலை, அன்பு, சமாதானம், சந்தோஷம், தீர்வு, நீதி, அமைதி, நிறைவு, ஒற்றுமை அனைத்தும் நமக்கு கிடைக்கின்றன. எனவே நாம் எந்த காரியத்தில் ஈடுபட்டாலும்  நமது உள்ளம் இறைவனோடு இணைந்தே இருக்கட்டும்.


It is from God that we receive freedom from sins, love, peace, joy, resolution, justice, tranquility, fulfillment, and unity. Therefore, whatever we do, let our hearts be united with God.


-- Easter 6th Friday - cycle 1


Thursday, May 29, 2025

May 29

 மனதில் பதிக்க 


உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்: நீங்கள் அழுவீர்கள், புலம்புவீர்கள்; அப்போது உலகம் மகிழும். நீங்கள் துயருறுவீர்கள்; ஆனால் உங்கள் துயரம் மகிழ்ச்சியாக மாறும்.” - யோவான் 16:20


Amen, amen, I say to you, you will weep and mourn, while the world rejoices; you will grieve, but your grief will become joy. - John 16:20


மனதில் சிந்திக்க 


நாம் இவ்வுலகில் வாழ்ந்தாலும் விண்ணகத்திற்கு சொந்தமானவர்களே என்பதை இயேசுநாதர் தெளிவாகச் சொல்கின்றார். கிறிஸ்தவ கோட்பாடுகளைப் பின்பற்றி வாழும் போது உலகம் நம்மை எதிர்க்கும். ஆனாலும் நாம் ஆண்டவரோடு இணைந்து வாழ்ந்து விண்ணரசுக்குறியவர்களாக முயற்சிப்போமா?


Jesus clearly states that even though we live in this world, we belong to heaven. The world will oppose us when we live according to Christian principles. But shall we strive to live in union with the Lord and become members of the kingdom of heaven?


-- Easter 6th Thursday - Cycle 1


Wednesday, May 28, 2025

May 28

 மனதில் பதிக்க 


உண்மையை வெளிப்படுத்தும் தூய ஆவியார் வரும்போது அவர் முழு உண்மையை நோக்கி உங்களை வழிநடத்துவார். அவர் தாமாக எதையும் பேசமாட்டார்; தாம் கேட்பதையே பேசுவார்; - யோவான் 16:13


But when he comes, the Spirit of truth, he will guide you to all truth. He will not speak on his own, but he will speak what he hears and will declare to you the things that are coming. - John 16:13


மனதில் சிந்திக்க 


தூய ஆவியானவர் நமக்கு வெளிப்படுத்துவதெல்லாம் கடவுளிடமிருந்து வருவதாகும். எனவே எந்த ஒரு விஷயமாக இருந்தாலும் உடனே ஆம் என்று ஏற்றுக்கொண்டு செயல்படுவது மூவொரு கடவுள் பிதா சுதன் பரிசுத்த ஆவியானவருக்கும் கீழ்படிவதாகும். முயல்வோமா? 


Saying yes to anything that Holy Spirit reveals and acting on it is the way we obey to the Triune God, the Father, the Son, and the Holy Spirit. Shall we try?


-- Easter 6th Wednesday


Tuesday, May 27, 2025

May 27

 மனதில் பதிக்க 


நான் போவதால் நீங்கள் பயனடைவீர்கள். நான் போகாவிட்டால் துணையாளர் உங்களிடம் வரமாட்டார். நான் போனால் அவரை உங்களிடம் அனுப்புவேன். - யோவான் 16:7


But I tell you the truth, it is better for you that I go. For if I do not go, the Advocate will not come to you. But if I go, I will send him to you. - John 16:7


மனதில் சிந்திக்க 


தூய ஆவியானவர் நம்மிடம் இல்லையெனில் நம்மால் ஒரு நன்மையும் செய்ய முடியாது. கடவுளுக்கும் நமக்கும் சரியான உறவு இருக்கின்றதா, நாம் சரியான வழியில் வாழ்கின்றோமா என்பதை அறிந்து கொள்ள உதவி செய்வது தூய ஆவியானவரே என்பதை உணர்ந்து ஆவியானவரை நமக்குள் வரும்படி அழைப்போமா?


Without the Holy Spirit, we cannot do any good. Shall we invite the Spirit to come into us, recognizing that it is the Holy Spirit who helps us know whether we have a right relationship with God and whether we are living the right way?


-- Easter 6th Tuesday - Cycle 1


Monday, May 26, 2025

May 26

 மனதில் பதிக்க 


தந்தையிடமிருந்து நான் உங்களுக்கு அனுப்பப்போகிற துணையாளர் வருவார். அவரே தந்தையிடமிருந்து வந்து உண்மையை வெளிப்படுத்தும் தூய ஆவியார். - யோவான் 15:26



“When the Advocate comes whom, I will send you from the Father, the Spirit of truth that proceeds from the Father, he will testify to me. - John 15:26


மனதில் சிந்திக்க 


பெந்தகோஸ்தே பெருவிழாவை கொண்டாட தயாராகும் நாம் ஒவ்வொருவரும் தூய ஆவியானவரை அழைத்து நமது எல்லா செயல்பாட்டிலும் அவரது துணையோடு செயல்படவும் அவரது வழிநடத்தலோடு வாழவும் முயற்சிப்போம்.


As we prepare to celebrate the Feast of Pentecost, let us each call upon the Holy Spirit and strive to work with His help and live under His guidance in all our activities. 


-- Easter 6th Monday - Cycle 1


Sunday, May 25, 2025

May 25

 மனதில் பதிக்க 


என்மீது அன்பு கொண்டுள்ளவர் நான் சொல்வதைக் கடைப்பிடிப்பார். என் தந்தையும் அவர்மீது அன்பு கொள்வார். - யோவான் 14:23


Jesus answered and said to him, “Whoever loves me will keep my word, and my Father will love him, and we will come to him and make our dwelling with him. - John 14:23


மனதில் சிந்திக்க 


இறைவனை உண்மையாக அன்பு செய்வது என்பது அவரது கட்டளைகளுக்கு பணிந்து நடப்பதே என்பதை நம்  இயேசு ஆண்டவர் தெளிவாகச் சொல்கின்றார். எனவே எல்லாவற்றிலும் இறை வசனம் என்ன சொல்கின்றது என்பதை அறிந்துகொண்டு செயல்படுவோமா?


Our Lord Jesus clearly states that to truly love God is to obey His commandments. Therefore, shall we act on what the Word of God says in all things?


-- Easter 6th Sunday - Year C


Saturday, May 24, 2025

May 24

 மனதில் பதிக்க 


“நான் உங்களை உலகிலிருந்து தேர்ந்தெடுத்துவிட்டேன்” யோவான் 15:19


“I have chosen you out of the world” John 15: 19


மனதில் சிந்திக்க 


துன்புறுத்தப்படுவது பலவீனத்தின் அல்லது தோல்வியின் அடையாளம் அல்ல, மாறாக நாம் கடவுளின் விருப்பத்தின்படி வாழ்கிறோம் என்பதற்கான அறிகுறியாகும். சிலுவையை எடுத்துக்கொண்டு அவரைப் பின்பற்றும் அளவுக்கு நம் விசுவாசம் வலிமையானதா?


Being persecuted is not a sign of weakness or failure, but a sign that we are living according to God's will. Is our faith strong enough to take up the cross and follow Him?


-- Easter 5th Saturday - Cycle 1


Friday, May 23, 2025

May 23

 மனதில் பதிக்க 


“நீங்கள் ஒருவர் மற்றவரிடம் அன்பு கொள்ள வேண்டும் என்பதே என் கட்டளை.” யோவான் 15: 17


“This is my command: Love one another”. John 15: 17


மனதில் சிந்திக்க 


இந்த வசனம் சக விசுவாசிகளை நேசிப்பது விருப்பத்திற்குரியது அல்ல, மாறாக சீஷத்துவத்தின் ஒரு முக்கிய அம்சம் என்பதை குறிக்கிறது. நமது இருதயங்கள் அன்பால் நிறைந்திருக்கிறதா அல்லது பகைமை மற்றும் வெறுப்பால் துருப்பிடித்துவிட்டதா?


This verse implies that loving fellow believers is not optional but a crucial aspect of discipleship. Are our hearts filled with love or rusted with enmity and hatred?


-- Easter 5th Friday- Cycle 1


Thursday, May 22, 2025

May 22

 மனதில் பதிக்க 


“என் தந்தை என் மீது அன்பு கொண்டுள்ளது போல நானும் உங்கள்மீது அன்பு கொண்டுள்ளேன். என் அன்பில் நிலைத்திருங்கள்”  யோவான் 15: 10


“As the Father has loved me, so have I loved you. Now remain in my love”  John 15: 10


மனதில் சிந்திக்க 


இயேசு நம்மை அவருடைய எல்லையற்ற அன்பைப் பற்றிய விழிப்புடன் வாழ நாம் இரக்கமுள்ளவர்களாகவும், மற்றவர்களுக்கு சேவை செய்ய விருப்பமுள்ளவர்களாகவும் இருக்க அழைக்கிறார். 


Jesus calls us to remain in His love by being compassionate, and willing to serve others, even when it is difficult.


-- Easter 5th Thursday - Cycle 1


Wednesday, May 21, 2025

May 21

 மனதில் பதிக்க 

“நானே திராட்சைக் கொடி; நீங்கள் அதன் கிளைகள்” யோவான் 15:5 


“I am the vine; you are the branches” - John 15: 5


மனதில் சிந்திக்க 


இயேசு கிறிஸ்து அவருடன் இணைந்திருப்பதன் முக்கியத்துவத்தை நமக்குக் கற்பிக்கிறார், அவரே நமது ஆன்மீக வளர்ச்சியின் ஆதாரம் என்பதை வலியுறுத்துகிறார். ஜெபத்தின் மூலமும், அவருடைய வழிகாட்டுதலைத் தேடுவதன் மூலமும் நாம் அவரில் நிலைத்திருப்போம்.


Jesus teaches us the significance of remaining connected to Him, emphasizing that He is the source of our spiritual growth. Let us abide in Him through prayer, and seeking His guidance in our daily lives.


-- Easter 5th Wednesday. Cycle 1


Tuesday, May 20, 2025

May 20

 மனதில் பதிக்க 


“என் அமைதியையே உங்களுக்கு அளிக்கிறேன் நான் உங்களுக்குத் தரும் அமைதி உலகம் தரும் அமைதி போன்றது அல்ல.”  யோவான் 14: 27


“My peace I give you. I do not give to you as the world gives.”  John 14: 27


மனதில் சிந்திக்க 


உலகம் நமக்கு தற்காலிக திருப்தியையும் உற்சாகத்தையும் தருகிறது. ஆனால் நம் ஆண்டவர் அளிக்கும் அமைதி, மிகப்பெரிய சோதனைகளுக்கு மத்தியிலும் ஆன்மாவிற்கு ஒரு உள்ளார்ந்த இளைப்பாறுதலை அளிக்கிறது. இயேசுவின் மீது நம் கவனத்தை செலுத்துவதன் மூலம் அவருடைய உறுதியான அமைதியைப் பெற நாம் தயாரா?


The world gives us temporary satisfactions and excitement that gratify our passions and pride. But the peace our Lord bestows is an inward calm and rest for the soul even amidst the greatest trials and tribulations. Are we ready to receive His steadfast peace by having our focus fixed on Jesus?


-- Easter 5th Tuesday


Monday, May 19, 2025

May 19

 மனதில் பதிக்க 

“என் கட்டளைகளை ஏற்றுக் கடைப்பிடிப்பவர் என்மீது அன்பு கொண்டுள்ளார். என்மீது அன்பு கொள்பவர்மீது தந்தையும் அன்பு கொள்வார்” - யோவான் 14: 21


“Whoever has my commands and keeps them is the one who loves me. The one who loves me will be loved by my Father, and I too will love them and show myself to them” - John 14: 21


மனதில் சிந்திக்க 


கடவுளுக்குக் கீழ்ப்படிதலே நாம் அவர் மீதுள்ள வைத்துள்ள உண்மையான மற்றும் உயர்ந்த அன்பின் மிகவும் தவறாத சான்றாகும். கடவுள் மீது ஆழமாக வேரூன்றிய விசுவாசம் நமக்கு இருக்கும்போது, ​​அவருடைய கட்டளைகளுக்குக் கீழ்ப்படிவது பாரமானதல்ல. கடவுள் மீதுள்ள நமது உண்மையான அன்பை வெளிபடுத்த நாம் தயாரா?

 

Obedience to God is the most infallible evidence of sincere and supreme love for Him. Obeying His commands is not burdensome when we have a deeply rooted faith in Him. Are we ready to show our true love for God?


-- Easter 5th Monday - Cycle 1


Sunday, May 18, 2025

May 18

 மனதில் பதிக்க 


  “நீங்கள் ஒருவர் மற்றவருக்குச் செலுத்தும் அன்பிலிருந்து நீங்கள் என் சீடர்கள் என்பதை எல்லாரும் அறிந்துகொள்வர்”  - ( யோவான் 13:35)


“It is by your love for one another, that everyone will recognize you as my disciples." -  John 13:35


மனதில் சிந்திக்க 


கடவுள் நம் அனைவரையுமே பெரியவர் சிறியவர், ஏழை பணக்காரர், நண்பர் பகைவர் போன்ற எந்த பாகுபாடுமின்றி அளவில்லாமல் அன்பு செய்கிறார்.. இயேசு கிறிஸ்துவும் அதையே கற்பித்தது மட்டுமில்லாமல் தம் வாழ்க்கை வழியாக வாழ்ந்தும் காட்டினார்.

கிறிஸ்துவை பின்பற்றும் நாமும் அவரை போலவே அனைவருக்கும் எந்த பாகுபாடின்றி அன்பை செலுத்தி அவரின் சீடராக வாழ முயற்சி செய்வோமா? சிந்திப்போம்

 

God shows his abundant love on every one of us be it rich - poor or Good - bad. Our Lord Jesus Christ also not just preached this but also practiced it in His life. We the followers of Christ, can we also try to love everyone without any differences and lead a life as a disciple of Jesus.


- Easter 5th week - Sunday - Year C





Saturday, May 17, 2025

May 17

 மனதில் பதிக்க 


 “நான் செய்யும் செயல்களை என்னிடம் நம்பிக்கை கொள்பவரும் செய்வார்; ஏன், அவற்றைவிடப் பெரியவற்றையும் செய்வார்”  - ( யோவான் 14: 12)

Amen, amen, I say to you, whoever believes in me will do the works that I do, and will do greater ones than these, because I am going to the Father. - John 14: 12


 மனதில் சிந்திக்க


கடவுள் நம் அனைவர் வாழ்க்கையிலும் தினம் தினம் பல்வேறு நன்மைகளை செய்து கொண்டிருக்கிறார்.   கடவுளின் கைகளில் நம்மையே ஒப்புவித்து அவரோடு நம்பிக்கையில் திளைத்திருந்தால் இன்னும் அதிகமாக புதுமைகளை செய்ய காத்திருக்கிறார்.

கடவுளிடம் நம்பிக்கையை வளர்த்துக் கொண்டு அவர் வழியாக பல வல்ல செயல்களை நம் வாழ்க்கையில் பெற முயற்சி செய்வோமா? 


-- Easter 4th Saturday - Cycle 1

Friday, May 16, 2025

May 16

 மனதில் பதிக்க


 “நீங்கள் உள்ளம் கலங்க வேண்டாம். கடவுளிடம் நம்பிக்கை கொள்ளுங்கள்.”  - ( யோவான் 14:1)


“Do not let your hearts be troubled. You have faith* in God; have faith also in me. John 14:1


மனதில் சிந்திக்க

மனித வாழ்க்கையில் இன்பங்களும் துன்பங்களும் இருப்பது இயல்பு. ஆனால் நாமோ பிரச்சனைகள் வரும் போது கடவுள் மீது நம்பிக்கை இல்லாமல் மனம் தளர்ந்து விடுகிறோம். 

இன்பம் துன்பம் எல்லாம் கடவுளின் திட்டத்தின் படியே நடக்கிறது என்று முழுவதுமாய் கடவுள் மீது நம்பிக்கை வளர்த்து அவரோடு ஒன்றிணைந்து வாழ முயற்சி செய்வோமா? சிந்திப்போம்


Joy and sorrow are common in our human life. But during trouble times we get depressed coz of lack of faith in God. Can we try to build complete faith in God and accept the plan of God be it good or bad and lead a united life with God? 


-- Easter 4th Friday - cycle 1


Thursday, May 15, 2025

May 15

 மனதில் பதிக்க


 “பணியாளர் தலைவரைவிடப் பெரியவர் அல்ல; தூது அனுப்பப் பட்டவரும் அவரை அனுப்பியவரைவிடப் பெரியவர் அல்ல”  - ( யோவான் 13: 16)


Amen, amen, I say to you, no slave is greater than his master nor any messenger greater than the one who sent him. - John 13:16


மனதில் சிந்திக்க


கிறிஸ்துவர்களாகிய நம் அனைவரையுமே கடவுள் தம் பணியை தொடர அழைத்திருக்கிறார். ஆனால் நாமோ அவரின் ஆசி வழியாக கிடைத்த செல்வம் பதவியை பிறருக்கு உதவிட பயன்படுத்தாமல் கடவுளை விட உயர்ந்தவர் என்று மமதையோடு வாழ்கிறோம்.


இயேசு கிறிஸ்துவின் பிள்ளையாகிய நாம் அவரின் திட்டத்திற்காக நம்மையே ஒப்புவித்து அவரின் பணியை மண்ணில் தொடர முயல்வோமா? 


Every one of us Christians have been called to continue the mission of God.  And as per His plan He blesses us with wealth and power so that we could use that to serve others, but we lead a boasting life considering ourselves greater than God.

Can we the children of God dedicate ourselves for the plan of God and continue His mission in this world?

-- Easter 4th Thursday - Cycle 1


Wednesday, May 14, 2025

May 14

 மனதில் பதிக்க


 “நான் உங்களிடம் அன்பு கொண்டிருப்பது போல நீங்களும் ஒருவர் மற்றவரிடம் அன்புகொண்டிருக்க வேண்டும் என்பதே என் கட்டளை.”  - ( யோவான் 15: 17)


This I command you: love one another. John 15:17


மனதில் சிந்திக்க


கடவுள் தாம் படைத்த அனைத்து உயிரினத்தையும் அளவுக்கு அதிகமாக அன்பு செய்கிறார். கடவுள் அருளும் அன்பையும் ஆசீரையும் நம் வழியாக பிறருக்கு பகிரவே இயேசு நமக்கு கட்டளையாக அருளுகிறார். 

கடவுளின் அன்பை பிறருக்கு பகிர்ந்தளித்து அவரின் இறையாட்சியை மண்ணில் மலர முயல்வோமா?


-- Easter 4th Wednesday - Cycle 1

Tuesday, May 13, 2025

May 13

 மனதில் பதிக்க


 “ஆனால் நீங்கள் நம்பாமல் இருக்கிறீர்கள். ஏனெனில் நீங்கள் என் மந்தையைச் சேர்ந்தவர்கள் அல்ல. என் ஆடுகள் எனது குரலுக்குச் செவிசாய்க்கின்றன.”  - ( யோவா 10: 26,27)


But you do not believe, because you are not among my sheep. My sheep hear my voice; I know them, and they follow me. - John 10: 26,27



மனதில் சிந்திக்க


நம் கிறிஸ்துவம் இயேசு கிறிஸ்துவின் மீது கொண்டுள்ள நம்பிக்கையில் தான் கட்டப்பட்டுள்ளது.  கிறிஸ்துவர்களாய் இருந்துக்கொண்டு உலக சக்திகளின்  மேல் நம்பிக்கை கொண்டால் நாம் கடவுளின் பிள்ளை என்ற உரிமையை இழந்துவிடுகின்றோம். 

நல்ல ஆயனாகிய நம் இயேசு கிறிஸ்துவின் மீது நம்பிக்கையை வளர்த்துக்கொண்டு அவரின் மந்தையாக வாழ முயல்வோமா?


Faith on our Lord Jesus Christ is the foundation of Christianity. But many times, we remain name's sake Christians and believe the worldly powers and lose the right to be called the children of God. So, shall we build our faith in Jesus Christ, the only true shepherd and try to lead a life as His flock?

-- Easter 4th Tuesday - cycle 1


Monday, May 12, 2025

May 12

 மனதில் பதிக்க


 “கிறிஸ்துவின்மீது நம்பிக்கை கொண்டபோது நமக்கு அருளப்பட்ட அதே கொடையைக் கடவுள் அவர்களுக்கும் கொடுத்தார் என்றால் கடவுளைத் தடுக்க நான் யார்?”  - ( தி தூ பணி 11: 17)


If then God gave them the same gift he gave to us when we came to believe in the Lord Jesus Christ, who was I to be able to hinder God?” - Acts 11:17


மனதில் சிந்திக்க


கிறிஸ்துவராய் பிறந்ததால் மட்டுமே நாம் கடவுளின் பிள்ளை என்ற உரிமையை பெறுவதில்லை. அவரின் மீது நம்பிக்கை கொண்டு அவரோடு இணைந்து வாழ்வதால் தான் தூய ஆவியின் கொடைகளை அவர் நமக்கு ஆசீராய் அருளுகின்றார். 

நாமும் இதனை உணர்ந்து கடவுள் மேல் அளவில்லா நம்பிக்கையோடு வாழ முயல்வோமா?


Being born as Christians doesn't make us the children of God. Only when we believe in God and lead our life united with Him, God blesses and rewards with the gifts of the Holy spirit. 

So, can we realize this and try to build immense faith in God?


- Easter 4th Monday - Cycle 1


Sunday, May 11, 2025

May 11

 மனதில் பதிக்க


 “உலகம் முழுவதும் என் மீட்பை அடைவதற்கு நான் உன்னை வேற்றினத்தார்க்கு ஒளியாக ஏற்படுத்துவேன்’ என்று ஆண்டவர் எங்களுக்குக் கட்டளையிட்டுள்ளார்”” - ( தி தூ பணி 13: 14, 43-52)


மனதில் சிந்திக்க


கிறிஸ்துவை பின்பற்றும் நம் அனைவருக்குமே கடவுளின் மீட்பு உண்டு. ஆனால் நாமோ பல நேரங்களில் அவரின் அழைப்பை புறம் தள்ளிவிட்டு உலக காரியங்களின் பின் நடக்கிறோம்.

இயேசு கிறிஸ்துவே மெய்யான ஒளி. அவர் வார்த்தையை கேட்டு அதன் படி  நடந்து அவரின் மீட்பை உறுதி படுத்த முயற்சிப்போமா? சிந்திப்போம்


-- Easter 4th Sunday - Year C



Saturday, May 10, 2025

May 10

 மனதில் பதிக்க


“ஆண்டவரே நாங்கள் யாரிடம் போவோம்? நிலைவாழ்வு அளிக்கும் வார்த்தைகள் உம்மிடம்தானே உள்ளன”. யோவான் 6:68


“Lord, to whom shall we go? You have the words of eternal life." John 6:68


மனதில் சிந்திக்க

இதைப் பற்றி சிந்திக்கும்போது, சந்தேகம் அல்லது கஷ்டமான தருணங்களில் நாம் எங்கு திரும்புகிறோம் என்பதைப் பரிசீலிக்க வேண்டிய சவால் நமக்கு உள்ளது. தற்காலிக தீர்வுகள், பொருள் செல்வம், மனித ஞானம், அல்லது கணமே நீடிக்கும் இன்பங்களில் தீர்வுகளைத் தேடுகிறோமா, அல்லது பேதுருவைப் போல, கிறிஸ்துவில் நம்மைப் பதித்து, அவருடைய வார்த்தைகள் மட்டுமே நித்திய ஜீவனின் வாக்குறுதியைத் தாங்கியுள்ளன என்று நம்புகிறோமா?


Reflecting on this, we are challenged to consider where we turn in moments of doubt or difficulty. Do we seek solutions in temporary fixes, material wealth, human wisdom, or fleeting pleasures or do we, like Peter, anchor ourselves in Christ, trusting that His words alone hold the promise of eternal life.


-- Easter 3rd Saturday - Cycle 1

Friday, May 9, 2025

May 09

 மனதில் பதிக்க


“இவ்வுணவை உண்போர் என்றும் வாழ்வர்”. யோவான் 6:58


“Whoever eats this bread will live forever.” John 6:58


மனதில் சிந்திக்க


இந்த வசனம், இஸ்ரவேலர்களை தற்காலிகமாகப் பராமரித்து, நித்திய ஜீவனை வழங்காத மன்னாவைப் போலன்றி, இயேசுவே நித்திய ஜீவனின் உண்மையான ஆதாரம் என்ற கருத்தை வலுப்படுத்துகிறது. நித்திய ஜீவனின் வாக்குறுதி உடல் அழியாமையைப் பற்றியது மட்டுமல்ல, கடவுளின் நித்திய ஜீவனில் பங்கேற்பதைப் பற்றியது. அப்பத்தைப் பெற நாம் என்ன செய்யப் போகிறோம்?


This verse reinforces the idea that Jesus is the true source of eternal life, unlike the manna that sustained the Israelites temporarily but didn't grant eternal life. The promise of eternal life is not just about physical immortality but about participating in God's eternal life. What are we going to do receive the bread?


- Easter - 3rd Friday - Cycle 1

Thursday, May 8, 2025

May 08

 மனதில் பதிக்க


“விண்ணகத்திலிருந்து இறங்கி வந்த வாழ்வு தரும் உணவு நானே”.  யோவான் 6:50


Jesus says, "This is the bread that comes down from heaven, so that one may eat of it and not die." John 6:50


மனதில் சிந்திக்க


இது வெறும் உடல் தேவைகளுக்காக மட்டுமல்ல, ஆன்மீக நிறைவு மற்றும் நித்திய ஜீவனுக்காகவும் இயேசுவிடம் வருவதற்கான அழைப்பு. அவரை நம்புபவர்கள் உண்மையான ஊட்டச்சத்தைக் கண்டடைவார்கள், ஒருபோதும் அழிய மாட்டார்கள் என்ற நம்பிக்கை மற்றும் வாக்குறுதியின் செய்தி இது.


This is a call to come to Jesus, not just for physical needs, but for spiritual fulfillment and eternal life. It's a message of hope and promise that those who believe in Him will find true nourishment and never perish.


-- Easter 3rd Thursday - cycle 1

Wednesday, May 7, 2025

May 07

 மனதில் பதிக்க


மகனைக் கண்டு அவரிடம் நம்பிக்கை கொள்ளும் அனைவரும் நிலைவாழ்வு பெறவேண்டும் என்பதே என் தந்தையின் திருவுளம். யோவான். 6:40


For it is my Father's will that all who see his Son and believe in him should have eternal life. I will raise them up at the last day. John 6:40



மனதில் சிந்திக்க


இந்த வசனம், இயேசுவின் மீதுள்ள விசுவாசம் மூலம் அனைவருக்கும் மீட்பு வழங்க வேண்டும் என்ற கடவுளின் விருப்பத்தை வலியுறுத்துகிறது. இது விசுவாசத்தின் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டுவதோடு, நித்திய வாழ்வு மற்றும் உயிர்த்தெழுதல் என்ற வாக்குறுதியை முன்னிலைப்படுத்துகிறது.


This verse highlights God's desire for universal salvation through faith in Jesus. It emphasizes the importance of belief and highlights the promise of eternal life and resurrection.


-- Easter - 3rd Wednesday - cycle 1

Tuesday, May 6, 2025

May 06

 மனதில் பதிக்க


இயேசு அவர்களிடம்,“வாழ்வு தரும் உணவு நானே. என்னிடம் வருபவருக்குப் பசியே இராதுஎன்னிடம் நம்பிக்கை கொண்டிருப்பவருக்கு என்றுமே தாகம் இராது; என்றார். யோவான் 6:35


Then Jesus declared, 'I am the bread of life. Whoever comes to me will never go hungry, and whoever believes in me will never be thirsty.' John 6:35


மனதில் சிந்திக்க


இயேசு, அன்றாட வாழ்வில் பயன்படுத்தப்படும் உணவுப்பொருளான ரொட்டியை, ஆன்மீக ஊட்டத்தையும் வாழ்வையும் அளிக்கும் மூலமாக தம்மை வெளிப்படுத்த உருவகமாகப் பயன்படுத்துகிறார். இயேசு பசி மற்றும் தாகம் போன்ற உடல் தேவைகளை மீறி முழுமையான திருப்தியை அளிக்கிறார் என்பதை நாம் உண்மையாக உணர்கிறோமா?


Jesus uses the everyday image of bread, a symbol of sustenance, to express His role as the source of spiritual nourishment and life. Do we truly realize that Jesus brings a complete satisfaction that surpasses physical needs that is both hunger and thirst?


-- Easter 3rd Tuesday - cycle 1

Monday, May 5, 2025

May 05

மனதில் பதிக்க 


அழிந்து போகும் உணவுக்காக அல்ல; நிலைவாழ்வு தரும் அழியாத உணவுக்காகவே உழையுங்கள். யோவான் 6:27


Do not work for the food that perishes, but for the food that endures to eternal life, John 6:27


மனதில் சிந்திக்க


இயேசு உடலின் தற்காலிக தேவைகளின் திருப்தியை ஆவிக்குரிய தேவைகளின் நித்திய திருப்தியுடன் ஒப்பிடுகிறார். நாம் இவ்வுலக செல்வங்களின் இலக்குகளை நம்பியோ அல்லது அவற்றை நோக்கி ஓடியோ செல்கிறோமா?


Jesus is contrasting the temporary satisfaction of physical needs with the eternal satisfaction of spiritual needs. Are we relying on or running towards materialistic goals?


- Easter 3rd Monday - Cycle 1

Sunday, May 4, 2025

May 04

 மனதில் பதிக்க 


யோவானின் மகன் சீமோனே, நீ என்மீது அன்பு செலுத்துகிறாயா?” என்று கேட்டார். அவர் இயேசுவிடம், “ஆம் ஆண்டவரே, எனக்கு உம்மிடம் அன்பு உண்டு என உமக்குத் தெரியுமே!” என்றார். இயேசு அவரிடம், “என் ஆடுகளை மேய்” என்றார்.யோவான் 21:15


Jesus, after a miraculous catch of fish, addresses Simon Peter, asking him, "Simon, son of John, do you love me more than these?" Peter replies, "Yes, Lord, you know that I love you," and Jesus then instructs him to "Feed my lambs." John 21:15



மனதில் சிந்திக்க 


இது இயேசுவின் மீதான அன்பு நமது விசுவாசத்தின் அடித்தளமாக இருப்பதைக் கற்பிக்கிறது. வார்த்தைகளில் மட்டுமல்ல, மற்றவர்களிடம்  நாம் எவ்வாறு அக்கறை கொள்கிறோம் என்றும்  கிறிஸ்துவுக்கு முன்னுரிமை அளித்து, நமது குறைபாடுகள் இருந்தபோதிலும் அவருடைய கிருபையை நம்பி மீட்டெடுக்கவும், அந்த அன்பின் வெளிப்பாடாக நாம் மற்றவர்களுக்கு சேவை செய்யவும் அழைப்பு விடுக்கிறது. சிந்திப்போமா ?


This teaches that love for Jesus is the cornerstone of our faith, proven not just in words but in how we care for others. It’s a call to prioritize Christ and embrace His mission, trusting in His grace to restore and empower us despite our shortcomings. Are we actively serving others as an expression of that love?


-- 3rd Sunday of Easter



Saturday, May 3, 2025

May 03

 மனதில் பதிக்க 


இவ்வளவு காலம் நான் உங்களோடு இருந்தும் நீ என்னை அறிந்து கொள்ளவில்லையா? யோவான் 14: 9 


Have I been with you so long, and yet you do not know me? John 14: 9 



மனதில் சிந்திக்க 


கடவுள் எப்போதும் நம் அருகிலேயே இருக்கிறார். எல்லா நேரங்களிலும், குறிப்பாக சோதனைகள் மற்றும் வேதனைகள் தருணங்களில், அவர் நம்மைக் கண்காணித்து வருகிறார். அவருடைய வலிமையையும் உதவியையும் நாம்  நம்பியிருக்கிறோமா? 


Our Lord is always present and is close-by. He keeps watch over us at all times, and especially in our moments of temptation and difficulty. Do we rely on the Lord for His strength and help? 


-- 2nd week of Easter - Saturday.



Friday, May 2, 2025

May 02

 மனதில் பதிக்க 


இயேசு அப்பங்களை எடுத்து, கடவுளுக்கு நன்றி செலுத்தி, அமர்ந்திருந்தோருக்குக் கொடுத்தார். அவ்வாறே மீன்களையும் பகிர்ந்தளித்தார். அவர்களுக்கு வேண்டிய மட்டும் கிடைத்தது. யோவான் 6: 11 


Jesus then took the loaves, and when he had given thanks, he distributed them to those who were seated; so also the fish, as much as they wanted. John 6: 11 


மனதில் சிந்திக்க 


இந்த பூமியில் உள்ள எதுவும் உண்மையிலேயே நாம் கடவுள் மேல் கொண்டுள்ள ஆழ்ந்த ஏக்கத்தையும் பசியையும் பூர்த்தி செய்ய முடியுமா? அவர்தான் நாம் அனுபவிக்கும் ஆழ்ந்த பசியைப் பூர்த்தி செய்யக்கூடிய விண்ணகத்தின் உண்மையான உணவு. "உயிருள்ள உணவுக்காக" நாம் பசியுடன் இருக்கிறோமா? 


Can anything on this earth truly satisfy the deepest longing and hunger we experience for God? He is the true bread of heaven that can satisfy the deepest hunger we experience. Do we hunger for the "bread of life"? 


-- Second Sunday of Easter - Friday


Thursday, May 1, 2025

May 01

                                                 மனதில் பதிக்க 


இந்த மகனிடம் நம்புக்கை கொள்வோர் நிலை வாழ்வைப் பெருவர். நம்புக்கை கொள்ளாதோர் வாழ்வைக் காணமாட்டார், மாறாக கடவுளின் சினம் அவர்கள் மேல் வந்து சேரும்.  யோவான் 3:36 


He who believes in the Son has eternal life; he who does not obey the Son shall not see life, but the wrath of God rests upon him. John 3:36 


மனதில் சிந்திக்க 


விசுவாசம் நம் மனதையும் இதயத்தையும் மனப்பூர்வமாகத் திறந்து, கடவுளுடைய உண்மையான வார்த்தைக்கு, செவிமடுக்க வைக்கிறது. நாம் கடவுளுடைய வார்த்தையை நம்பி, நம் வாழ்வை அதைச் சார்ந்து நடத்துகிறோமா? 


Faith opens our minds and hearts to listen to God's word of truth and to obey it willingly. Do we believe God's word and live our life depended on it? 


-- Second week of Lent - Thursday