Thursday, October 31, 2024

Oct 31

                                                     மனதில் பதிக்க…


இறைமக்கள் அனைவருக்காகவும் மன்றாடுங்கள். - எபேசியர் 6:18


With all prayer and supplication, pray at every opportunity in the Spirit. Ephesians 6:18


மனதில் சிந்திக்க…


நாம் பழகும் மனிதரிடத்தில் உள்ள குற்றங்களைப் பாராமல் , அவரைப்பற்றி மற்றவர்களிடம் இல்லாதவை, பொல்லாதவை பேசாமல், அவர்களின் நல்ல குணங்களை மட்டுமே பார்த்து,  தூய ஆவியின் துணை கொண்டு அவர்களுக்காக இறைவனிடம் வேண்டுவோமா? 



Every human being has their own flaws. Whenever we interact with people it is not good to look at their negative aspects and gossip about them to everyone. With the help of the Holy Spirit, shall we look into their good qualities and pray for them?


Wednesday, October 30, 2024

Oct 30

                                                 மனதில் பதிக்க…


"உன் தந்தையையும் தாயையும் மதித்து நட " - எபேசியர் 6: 2


“Honor your father and mother.” Ephesians 6: 2


மனதில் சிந்திக்க…


இன்றைய தலைமுறை தங்கள் பெற்றோரை, தங்களின் துணைவரின் பெற்றோரை சுமையாக கருதுகின்றார்கள்.  மாறாக  அவர்களது முதிய பருவத்தில் அவர்களை பேணிக்காப்பது தங்களின் முதன்மையான கடமையாக உணர வேண்டும். உணர்ந்து செயல்படுவோமா ?


The present generation of our time considers their parents or in-laws as unwanted and burdensome. We should remember that we too will grow old, and we will be treated in the same way we treated our family members. We need to realize it is our primary duty to take care of them. Shall we realize and change?


Tuesday, October 29, 2024

Oct 29

                                        மனதில் பதிக்க : 


 மீண்டும் அவர், ``இறையாட்சியை எதற்கு ஒப்பிடுவேன்? அது புளிப்பு மாவுக்கு ஒப்பாகும். பெண் ஒருவர் அதை எடுத்து மூன்று மரக்கால் மாவில் பிசைந்து வைத்தார். மாவு முழுவதும் புளிப்பேறியது'' என்றார். - லூக்கா 13:20,21 


Again he said, “To what shall I compare the kingdom of God? It is like yeast that a woman took and mixed with three measures of wheat flour until the whole batch of dough was leavened.” - Luke 13:20.21


                                        மனதில் சிந்திக்க:


ஒரு நல்ல செயலை நாம் செய்யும் போது அது நம்மை சுற்றி இருக்கும் அனைவருக்கும் மகிழ்ச்சியை தருகிறது. நல்ல செயல்களை மனமுவந்து செய்து நல்ல தாக்கத்தை நம் குழுமத்தில் உருவாக்குவோமா?


A good deed brings happiness to everyone around us. Shall we spark a positive influence in our community by willingly doing good deeds?  


Monday, October 28, 2024

Oct 28

                                                 மனதில் பதிக்க…


அக்காலத்தில் இயேசு வேண்டுவதற்காக ஒரு மலைக்குப் போனார். அங்குக் கடவுளிடம் வேண்டுதல் செய்வதில் இரவெல்லாம் செலவிட்டார்.  லூக்கா 6:12


In those days he departed to the mountain to pray, and he spent the night in prayer to God. Luke 6:12 



மனதில் சிந்திக்க…


அனுதினமும் ஒருமுறையாவது ஆண்டவரின் பிரசன்னத்தில் அமர்ந்து செபிப்பதற்கு இந்த நற்செய்தி நமக்கு அழைப்புவிடுக்கிறது. ஒரு சில மணித்துளிகள் இறைவனோடு செலவழிப்போமா?


Today's reading invites us to be in the Lord's presence and pray at least once a day. Shall we make a conscious effort to spend at least a few minutes with God?


Sunday, October 27, 2024

Oct 27

                                                         மனதில் பதிக்க…


பார்வையற்றவர் அவரிடம், “ரபூனி, நான் மீண்டும் பார்வை பெற வேண்டும்” என்றார். - மாற்கு 10:51

The blind man replied to him, “Master, I want to see.” - Mark 10:51



மனதில் சிந்திக்க…


ஒன்றை நாம் பெற வேண்டுமென்றால், நமது இலக்கு தெளிவாக இருக்க வேண்டும்.  நமது எண்ணத்தில், சிந்தனையில், சொல்லில் , செயலில் அந்த இலக்கு வெளிப்பட வேண்டும். நாம் கொண்ட இலக்கில் தெளிவாக இருந்தால், நிச்சயம் பர்த்திமேயுவைப் போல வெற்றிக் கனியை சுவைக்கலாம்.


To achieve what we want, our goals should be clear. Our thoughts, actions and words will manifest our wants. Once we have a set goal thru perseverance, we shall achieve it like Bartimaeus.


Saturday, October 26, 2024

Oct 26

                                                     மனதில் பதிக்க…


" மனம் மாறாவிட்டால் நீங்கள் அனைவரும் அப்படியே அழிவீர்கள்” என்றார்  – லூக்கா 13:5


“But unless you repent you will all perish as they did”- Luke 13:5



மனதில் சிந்திக்க…


இயேசு நல்லதையே போதித்து வாழ்ந்து காட்டியிருந்தாலும் , கடவுளின் உன்னத படைப்பான மனிதனுக்கு நல்லது கெட்டது என தேர்ந்தெடுக்கும் சுதந்திரத்தை அளித்துள்ளார். ஆனால் பாவ வாழ்க்கை வாழ்ந்தால் அழிவே சன்மானம் என்று இயேசு எச்சரிக்கிறார.

நமது திருச்சபை அளித்துள்ள பாவமன்னிப்பு என்னும் அருட்கொடையை பயன்படுத்தி இயேசுவின் பாதையில் தொடர தயாராக உள்ளோமா? சிந்திப்போம்



Though Jesus preached and practiced what's right and just. God gave humans, his marvelous creation, the freedom to choose their path. But Jesus gives us a warning that we will perish if we keep living the sinful way.

Are we ready to use the gift of Catholic Church - the sacrament of reconciliation to mend our ways and turn back to God??


Friday, October 25, 2024

Oct 25

மனதில் பதிக்க…


"வெளிவேடக்காரரே, நிலத்தின் தோற்றத்தையும் வானின் தோற்றத்தையும் ஆய்ந்து பார்க்க அறிந்திருக்கும்போது, இக்காலத்தை நீங்கள் ஆய்ந்து பாராமல் இருப்பது எப்படி?” (லூக்கா 12:56)


“Hypocrites! You know how to interpret the face of the earth and the sky. How is it you do not know how to interpret these times?”- Luke 12:56


மனதில் சிந்திக்க…


நாம் வாழும் இந்த உலகத்தில் மானிடரிடையே நிலவும் அன்பு, சமாதானம் , மனிதத்துவமானது குறைந்துக்கொண்டே வருகிறது. நாடுகள் தங்களின் அதிகாரத்தை காட்ட பொதுமக்களின் உயிரைக்கூட பொருட்படுத்தாமல் போர் தொடுக்கிறார்கள்.  இவை யாவும் கடவுளின் இரண்டாம் வருகையைக்கான அடையாளங்கள். அவரை எதிர்கொள்ள நாம் தயாராக உள்ளோமா ? சிந்திப்போம்


Today the world has become a place where love, peace and humanity are on a decrease among we human. We see nations fighting against nations to prove their supremacy without considering the lives of the common people. 

The world is moving in the direction as Jesus indicates in today's gospel that we could be expecting the God's coming. Time for us to analyze how much we are prepared to face God?

 

Thursday, October 24, 2024

Oct 24

                                             மனதில் பதிக்க…


"மண்ணுலகில் அமைதியை ஏற்படுத்த வந்தேன் என்றா நினைக்கிறீர்கள்? இல்லை, பிளவு உண்டாக்கவே வந்தேன் என உங்களுக்குச் சொல்கிறேன்.” (லூக்கா 12:51)


“Do you suppose that I am here to bring peace on earth? No, I tell you, but rather division”- Luke 12:51


மனதில் சிந்திக்க…


கடவுளின் வார்த்தை கேட்டு அதன்படி நடக்க வேண்டும் எனில் நாம் பல வேறு சவால்களை சந்திக்க நேரிடும் என்று இயேசு வெளிப்படையாக கூறுகிறார்.

இயேசுவே மெய்யான கடவுள். அவரால் மட்டுமே நமக்கு மீட்பு உண்டு. அந்த இயேசுவோடு இணைந்து அவரின் பிள்ளையாக வாழ அவரைப்போல் நாமும் வாழ்வில் சிலுவைகளை சுமக்க தையாராக உள்ளோமா? சிந்திப்போம்.

Jesus makes it very clear that we need to face lot of challenges if we want to lead a life as children of God and following his preaching.

Jesus is the only true God and only through him we can have eternal salvation. Are we ready to stay united with God and carry the cross like Jesus showed to lead a life pleasing God?


Wednesday, October 23, 2024

Oct 23

மனதில் பதிக்க…


"மிகுதியாகக் கொடுக்கப்பட்டவரிடம் மிகுதியாகவே எதிர்பார்க்கப்படும். மிகுதியாக ஒப்படைக்கப்படுபவரிடம் இன்னும் மிகுதியாகக் கேட்கப்படும்.” (லூக்கா 12:48)


“When someone is given a great deal, a great deal will be demanded of that person; when someone is entrusted with a great deal, of that person even more will be expected.” - Luke 12:48



மனதில் சிந்திக்க…


கடவுள் நம்மை எவ்வளவு மிகுதியாய் ஆசீர்வதித்தாலும் நமது வேண்டுதல் என்றுமே குறைந்தது கிடையாது. ஆனால் கடவுளின் திட்டம் மிகுதியாய் பெறுவோர்  அதிலிருந்து பிறருக்கு பகிர வேண்டும்  என்பதுதான்.


எனவே கடவுளின் திட்டத்தில் நாமும் இணைந்து பிறருக்கு உதவும் மனிதர்களாக இறைவனிடம் மன்றாடுவோமா? 

 

Though God has blessed each one of us with more than our needs, but still our petitions list keeps growing without an end. What we fail to understand is that God gives us more so that we share it with others.


So can we ask God to give us a sharing heart so that we are of help to others fulfilling the plan of God?


Tuesday, October 22, 2024

Oct 22

                                                 மனதில் பதிக்க…


"தலைவர் இரவின் இரண்டாம் காவல் வேளையில் வந்தாலும் மூன்றாம் காவல் வேளையில் வந்தாலும் அவர்கள் விழிப்பாயிருப்பதைக் காண்பாரானால் அவர்கள் பேறு பெற்றவர்கள்.” (லூக்கா 12:38)


“It may be in the second watch that he comes, or in the third, but blessed are those servants if he finds them ready.” - Luke 12:38



மனதில் சிந்திக்க…


பல  விஞ்ஞான  வளர்ச்சிகளை கொண்டு முன்னேறிய இந்த  காலத்திலும் மனிதனால் பிறப்பையும் இறப்பையும் கணிக்க முடியவில்லை. எனவே கடவுள் நம்மை எல்லா நேரங்களிலும் தயாராக இருக்க அழைக்கிறார். நமது திருச்சபை தவக்காலம் & கிறிஸ்துமஸ் என்று வருடத்தில் இரு முறை நம் பாவ வாழ்க்கையை விட்டு நல்வழியில் நடக்க வாய்ப்பை அளிக்கிறது. அதனை பயன்படுத்தி நாமும் எல்லா நேரங்களிலும் விழிப்பாயிருக்க முயல்வோமா? சிந்திப்போம்.

 

In the height of scientific discoveries in world we live, man cannot determine our natural birth and natural death. Professor Niche, a German philosopher said in his writing, “if one is born, he /she is already old enough to die”. So, God is alerting us to be prepared for our death.

Our mother church has established the sacrament of reconciliation and invites us to leave the sinful life a get reconciled with God during the season of Advent and Lent. Shall we make use of the sacrament of reconciliation during these days? Let us be aware of our sinful situation and be ready for meeting our creator? Think about it.


Monday, October 21, 2024

Oct 21

                                                 மனதில் பதிக்க…


“எவ்வகைப் பேராசைக்கும் இடங்கொடாதவாறு எச்சரிக்கையாய் இருங்கள். மிகுதியான உடைமைகளைக் கொண்டிருப்பதால் ஒருவருக்கு வாழ்வு வந்துவிடாது” என்றார் - லூக்கா 12:15


Then Jesus said to them, 'Watch, and be on your guard against avarice of any kind, for life does not consist in possessions, even when someone has more than he needs.' - Luke 12:15


மனதில் சிந்திக்க…


கடவுள் நம் ஒவ்வொருவரையும் மிகுதியாக ஆசீர்வதித்து எந்த குறையுமின்றி நிறைவாக படைத்துள்ளார். ஆனால் நாமோ பல நேரங்களில் பெற்றதை வைத்து மகிழ்ச்சிக் கொள்ளாமல் பேராசை மனம் கொண்டு வாழ்கிறோம். கடவுளால் கொடுக்கப்பட்ட செல்வத்தை நமக்கு மட்டும் செலவிடாமல் பிறருக்கும் பகிர்ந்துக்கொடுக்கும் மனதிற்காக இயேசுவிடம் செபிப்போமா 


God has created each one of us with immense wealth and abundant blessings.. But we fail to be happy & satisfied with what God has given us and lead a life with a greedy mind.

Can we ask God to instill in us the gift of sharing (virtue) with others so that we utilize the immense wealth we received from God becomes meaningful and right use of the wealth. Think about it!


Sunday, October 20, 2024

Oct 20

                                                 மனதில் பதிக்க…


“நான் பெறும் திருமுழுக்கையும் நீங்கள் பெறுவீர்கள். ஆனால் என் வலப்புறத்திலும் இடப்புறத்திலும் அமரும்படி அருளுவது எனது செயல் அல்ல; மாறாக அவ்விடங்கள் யாருக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதோ அவர்களுக்கே அருளப்படும்” என்று கூறினார்.” (மாற்கு 10:39,40)


Jesus said to them, 'The cup that I shall drink you shall drink, and with the baptism with which I shall be baptized you shall be baptized, but as for seats at my right hand or my left, these are not mine to grant; they belong to those to whom they have been allotted.' - Mark 10:39,40


மனதில் சிந்திக்க…


இவ்வுலகில் அனைத்து உயிருக்கும் கடவுளின் திட்டம் உண்டு. அதன் படியே இவ்வுலகில் அனைத்தும் நடக்கிறது. ஆனால் நாமோ பல நேரங்களில் கடவுளின் திட்டத்தை ஏற்க மனமில்லாமல் நமது விண்ணப்பம் நிறைவேறாத நேரங்களில் துவண்டு போகிறோம்..  கடவுளின் திட்டத்தை  செபத்தினால் அறிந்துகொண்டு அதனை ஏற்றுக்கொள்ளும் மனதிற்காக இறைவனிடம் மன்றாடுவோமா


 God has a plan for every living thing in this world. And everything happens as per his plan. But many a times we are reluctant to accept God's plan and get disappointed when our petitions are not answered.

God reveals his plan through prayer, and it is very important for us to spend time with God daily. Are we ready to know God's plan and ask God to give a mind to accept his plan??


Saturday, October 19, 2024

Oct 19

                                                 மனதில் பதிக்க…


இயேசு தம் சீடர்களுக்குக் கூறியது: “நான் உங்களுக்குச் சொல்கிறேன்; மக்கள் முன்னிலையில் என்னை ஏற்றுக்கொள்பவரை மானிட மகனும் கடவுளின் தூதர் முன்னிலையில் ஏற்றுக்கொள்வார். -லூக்கா 12:8


I tell you, everyone who acknowledges me before others the Son of Man will acknowledge before the angels of God. - Luke 12:8


மனதில் சிந்திக்க…


புற இனத்தவரிடையே நாம் பழகும் சந்தர்ப்பங்களிலே எப்படி இருக்கிறீர்கள் என்று மற்றவர்கள் நம்மிடம் கேட்கும்போது "இயேசு ஆண்டவரின் இரக்கத்தினால் நான் நலமாக உள்ளேன் "என்று தைரியமாக சொல்கின்றோமா ? கிறிஸ்துவுக்கு சாட்சியாக வாழ்கின்றோமா சிந்திப்போம் செயல்படுவோம்.

 

When any non-Catholic / non-Christian inquiries about our well-being, do we respond with courage and joy, “I am fine and doing good with Divine mercy and His blessings”? Can we be a witness to his love though our daily life especially with our gentle approach?  Think about it?


Friday, October 18, 2024

Oct 18

                                                    மனதில் பதிக்க…


புறப்பட்டுப் போங்கள்; ஓநாய்களிடையே ஆட்டுக் குட்டிகளை அனுப்புவதுபோல் உங்களை நான் அனுப்புகிறேன் .நீங்கள் எந்த வீட்டுக்குள் சென்றாலும், ‘இந்த வீட்டுக்கு அமைதி உண்டாகுக!’ என முதலில் கூறுங்கள். - லூக்கா 10:3,5 


Go on your way; behold, I am sending you like lambs among wolves. Into whatever house you enter, first say, ‘Peace to this household.’- Luke 10:3,5


மனதில் சிந்திக்க…


கிறிஸ்தவர்களாகிய நம் ஒவ்வொருவருக்கும் இருக்கின்ற கடமை மறைபரப்புப் பணிசெய்வது  ஆகும்.நம் இல்லத்தில் இப்பணியை, வேத நூலை வாசித்து, புரிந்து, நம் குழந்தைகளுக்கு கற்று கொடுப்பதன் மூலமாக நிறை நிறைவேற்றலாம். மறைபரப்புப் பணியிலே துன்பங்களும் எதிர்ப்புகளும் வரும் போது அமைதியான மனநிலையோடு தொடர்ந்து அவரது ஊழியத்தை உறுதியுடன் எடுத்துச் செல்கின்றோமா என்று சிந்தித்து செயல்படுவோம். 


As Catholics, we are given a mission to spread the good news of God. At home, we can achieve this mission by reading and understanding the Bible and teaching it our children. Whenever challenges are faced, let us be calm and persevere in doing the missionary work.


Thursday, October 17, 2024

Oct 17

                                 மனதில் பதிக்க…


நாம் தூயோராகவும், மாசற்றோராகவும் தம் திருமுன் விளங்கும்படி, உலகம் தோன்றுவதற்கு முன்பே கடவுள் நம்மைக் கிறிஸ்து வழியாகத் தேர்ந்தெடுத்தார். எபேசியர் 1:4


Even as he chose us in him before the foundation of the world, that we should be holy and blameless before him in love Ephesians 1: 4


மனதில் சிந்திக்க…


மேற்கண்ட இறைவசனம் நாம் இறைவன் முன்னிலேயிலே எவ்வளவு தூயவராக இருக்க வேண்டும் என்பதை கற்றுத்தருகிறது. கிறிஸ்து வழியாக மாத்திரமே நாம் முழுமையான தூய்மை பெற முடியும் என்பது உறுதியாகிறது. எனவே நமது அனுதின பயணமும் கிறிஸ்துவின் வழியில் தான் இருக்கிறதா என்று சிந்திப்போம் செயல்படுவோம்.


The above verse teaches us how pure we should be before God. It is certain that we can get complete purity only through Christ. Therefore, let us think and act if our daily journey is in the way of Christ.


Wednesday, October 16, 2024

Oct 16

                                                    மனதில் பதிக்க…


"ஐயோ! பரிசேயரே உங்களுக்குக் கேடு! நீங்கள் புதினா, கறியிலை மற்றும் கீரைச் செடிவகைகள் எல்லாவற்றிலும் பத்திலொரு பங்கைக் காணிக்கையாகப் படைக்கிறீர்கள். ஆனால் நீதியையும் கடவுளின் அன்பையும் பொருட்படுத்துவதில்லை. இவற்றைத்தான் கடைப்பிடித்திருக்க வேண்டும் ". லூக்கா 11:42


Woe to you Pharisees! You pay tithes of mint and of rue and of every garden herb, but you pay no attention to judgment and to love for God. These you should have done, without overlooking the others. Luke 11: 42


மனதில் சிந்திக்க…


நமது வாழ்க்கையில் எவற்றுக்கு அதிகமான முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்பதை இயேசு ஆண்டவர் கற்பிக்கிறார்.எனவே எல்லாவற்றையும் விட இறைவனின் கட்டளைகளை கடைப்பிடிபதில் பொறுப்புடன் இருக்கின்றோமா என்று சிந்திப்போம் செயல்படுவோம்.


Jesus teaches us, what should be given more importance in our lives. Therefore, above everything else, let's think and act if we are responsible in keeping the Lord's commandments.


Tuesday, October 15, 2024

Oct 15

                                                     மனதில் பதிக்க…


அறிவிலிகளே, வெளிப்புறத்தை உண்டாக்கியவரே உட்புறத்தையும் உண்டாக்கினார் அல்லவா! உட்புறத்தில் உள்ளவற்றைத் தர்மமாகக் கொடுங்கள். அப்பொழுது உங்களுக்கு அனைத்தும் தூய்மையாயிருக்கும். லூக்கா 11: 40-41.


You foolish people! Did not the one who made the outside make the inside also? But now as for what is inside you—be generous to the poor, and everything will be clean for you. Lk 11: 40-41


மனதில் சிந்திக்க…


மற்றவர்கள் முன் என்னை ஒரு திறமைசாலியாக மிகவும் நல்லவராக அல்லது அழகானவராக காட்டிக்கொண்டு நமது சிந்தனைகளும் வார்த்தைகளும் செயலும் தீயதாய் அடுத்திருப்பவரை காயப்படுத்துவதாய் இருந்தால் என்ன பயன் ?எனவே நம்முள்ளிருந்து வருகின்ற வார்த்தைகள் நடத்தைகள் மற்றவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கிறதா என்று சிந்திப்போம் செயல்படுவோம்.


What does one gain, when one has selfishness and boasting about his talent, has evil mind with evil thoughts and hurting others? Rather our talent and our comforting words should bring joy and peace. Think about it.


Monday, October 14, 2024

Oct 14

                                                 மனதில் பதிக்க…


யோனா நினிவே மக்களுக்கு அடையாளமாய் இருந்ததைப் போன்று மானிட மகனும் இந்தத் தலைமுறையினருக்கு அடையாளமாய் இருப்பார். லூக்கா 11:30


Just as Jonah became a sign to the Ninevites, so will the Son of Man be to this generation. - Luke 11:30 


மனதில் சிந்திக்க…


தொடக்க காலத்திலிருந்தே கடவுள் மனிதர்களை வழிநடத்தி வருகிறார் எனினும் மக்கள் பாவத்திலேயே வீழ்ந்து போகின்றனர். நமது மேல் மகா இரக்கமும் கிருபையும் கொண்ட கடவுள் தம் ஓரே பேரான மகனையே மீட்பின் அடையாளமாக கொடுத்தார். அந்த நன்றியை நமது உள்ளத்தின் ஆழத்தில் உணர்ந்தவர்களாக நாம் செய்கின்ற எல்லா சொல்லும் செயலும் சிந்தனையும் இறைவனுக்கு மகிமையை தருகிறதா என்று சிந்திப்போம் செயல்படுவோம். 


God has been guiding us from the beginning. Still, we sway away from God and keep falling into sins. Inspite of that, our generous and loving God gave His only son to redeem us. Shall we realize the greatness of God and our actions glorify Him? Think about it. 


Sunday, October 13, 2024

Oct 13

                                                 மனதில் பதிக்க…


கடவுளுடைய வார்த்தை உயிருள்ளது, ஆற்றல் வாய்ந்தது; இரு பக்கமும் வெட்டக்கூடிய எந்த வாளினும் கூர்மையானது; ஆன்மாவையும் ஆவியையும் பிரிக்கும் அளவுக்குக் குத்தி ஊடுருவுகிறது; எலும்பு மூட்டையும் மச்சையையும் அவ்வாறே ஊடுருவுகிறது; உள்ளத்தின் சிந்தனைகளையும் நோக்கங்களையும் சீர்தூக்கிப் பார்க்கிறது.     எபிரேயர்4:12

Indeed, the word of God is living and effective, sharper than any two-edged sword, penetrating even between soul and spirit, joints and marrow, and able to discern reflections and thoughts of the heart. - Hebrews 4:12


மனதில் சிந்திக்க…


திரு விவிலியத்தில் உள்ள கடவுளின் ஒவ்வொரு வார்த்தையும் எப்படி உயிர் பெறுகிறது என்றால் நாம் அந்த வார்த்தைகளை முழுமையாக நம்பி ஏற்று அதன்படி வாழும்போது அவ்வார்த்தை உண்மையிலேயே கிருபை செய்கிறது கூர்மையடைகிறது நமது சிந்தனைகளை சீராக வைக்க உதவுகிறது கடவுளின் பார்வையில் நமது சிந்தனைகள் எப்போதும் இருக்கிறது என்பதை மறவாமல் இருப்போமா சிந்திப்போம் செயல்படுவோம் 


The Word of God becomes true if we believe and follow it. Word of God gives Grace and sharpen our thoughts. Shall we always remember that God knows all of inner thoughts and act accordingly? Think about it.


Saturday, October 12, 2024

Oct 12

                                                     மனதில் பதிக்க…


இறைவார்த்தையைக் கேட்டு அதைக் கடைப்பிடிப்போர் இன்னும் அதிகம் பேறுபெற்றோர். - லூக் 11: 28


Blessed are those who hear the word of God and keep it! Lk 11: 28



மனதில் சிந்திக்க…


நாம் இறைவனின் பிரசன்னத்தில், அவர் நம்மீது கொண்டுள்ள மிகுந்த அன்பை அவருடைய வார்த்தைகளின் மூலம் அறிந்து வாழ முயற்சிப்போம்.


Let us try to live in the presence of our Lord, in the knowledge of His great love for us through His words.


Friday, October 11, 2024

Oct 11

                                         மனதில் பதிக்க…


என்னோடு இராதவர் எனக்கு எதிராக இருக்கிறார்; என்னோடு இணைந்து மக்களைக் கூட்டிச் சேர்க்காதவர் அவர்களைச் சிதறடிக்கிறார். லூக் 11: 23


He who is not with me is against me, and he who does not gather with me scatters all. Lk 11:23



மனதில் சிந்திக்க…


நாம் அவருக்கு ஆதரவாக அல்லது எதிராக மட்டுமே இருக்கமுடியும் என்பதை இயேசு தெளிவுபடுத்துகிறார். இரண்டு எதிரெதிர் அரசர்களுக்கு நாம் சேவை செய்ய முடியாது. கடவுளின் அரசு, ஒளி மற்றும் சத்தியம் கொண்டது. இருளின் அரசு அவருடைய சத்தியத்தையும் நீதியையும் எதிர்க்கிறது. நாம் எந்த பக்கம் சேர்ந்தவர்கள்? சிந்திபோம் செயல் படுவோம்.


Jesus makes it clear that we are either for Him or against Him. We cannot serve two opposing kingdoms. God's kingdom is the one with light and truth, while the kingdom of darkness opposes His truth and justice. Which side do we belong to? Let us think about it and act.


Thursday, October 10, 2024

Oct 10

                                                     மனதில் பதிக்க…


 இயேசு சீடர்களை நோக்கிக் கூறியது: “எனினும் அவர் விடாப்பிடியாய்க் கதவைத் தட்டிக்கொண்டே இருந்தால் அவர் தம் நண்பர் என்பதற்காக எழுந்து கொடுக்காவிட்டாலும், அவரது தொல்லையின் பொருட்டாவது எழுந்து அவருக்குத் தேவையானதைக் கொடுப்பார் என நான் உங்களுக்குச் சொல்கிறேன்.”லூக்கா 11:8


Jesus said to his disciples, “I tell you, if he does not get up to give him the loaves because of their friendship, he will get up to give him whatever he needs because of his persistence.” Luke 11:8



மனதில் சிந்திக்க…



நம்முடைய ஜெபங்களின் மூலம் நம்முடைய விசுவாசத்தை அதிகரிக்க கடவுளின் உதவியை நாம் விடாமுயற்சியுடன் கேட்போமா? இதன் மூலம் நாம் அவரைச் சார்ந்திருப்பதையும் அவர் நம்மை எவ்வளவு அன்பு செய்கிறார் என்பதையும் உணர முடியும்.  சிந்திப்போம்!


Shall we ask for God’s help persistently to increase our faith through our prayers so that we can see our real dependence on him and realize how much he loves us. Let’s think about it!


Wednesday, October 9, 2024

Oct 09

                                            மனதில் பதிக்க…

 

இயேசு அவர்களிடம், “எங்களுக்கு எதிராகக் குற்றம் செய்வோர் அனைவரையும் நாங்கள் மன்னிப்பதால் எங்கள் பாவங்களையும் மன்னியும்” லுக்கா 11:4

He said to them, "When you pray, say: Father, hallowed be your name, your Kingdom come. Give us each day our daily bread and forgive us our sins for we ourselves forgive everyone in debt to us” Luke 11:4

 

                                    மனதில் சிந்திக்க…


இறைவனின் வார்த்தையை நன்றாக புரிந்துகொண்டு, நமது ஆழ்மனதிலிருந்து ஜெபித்தாலன்றி, நமக்கு எதிராக குற்றம் செய்வோர்களை மன்னிக்க முடியாது. ஆகவே நாம் முதலில் இறைவனின் மன்னிப்பை தினமும் வேண்டி நமக்கு எதிராக குற்றம் செய்வோரை மன்னிக்க முயற்சிப்போமா? சிந்தித்து செயல்படுவோமா?



Unless we pray from the depth of our hearts, fully comprehending and applying the word of God in our daily life,  we can’t forgive anyone who is against us. Let us acknowledge and experience His forgiveness in our failures, so that we can forgive others as God is doing in our daily life. Think about it.

Tuesday, October 8, 2024

Oct 08

                                             மனதில் பதிக்க…


ஆண்டவர் அவரைப் பார்த்து, “மார்த்தா, மார்த்தா! நீ பலவற்றைப் பற்றிக் கவலைப்பட்டுக் கலங்குகிறாய். ஆனால் தேவையானது ஒன்றே. மரியாவோ நல்ல பங்கைத் தேர்ந்தெடுத்துக் கொண்டாள்; அது அவளிடமிருந்து எடுக்கப்படாது” என்றார். லுக்கா 10:41, 42

The Lord said to her in reply, “Martha, Martha, you are anxious and worried about many things. There is need of only one thing. Mary has chosen the better part, and it will not be taken from her.” Luke 10:41, 42

 


மனதில் சிந்திக்க…


Though our days will be filled with many necessary duties such as cooking, cleaning, working, and caring for others, shall we not forget for which we were made and adore our glorious God everyday?

நமது நாட்கள் சமைப்பது, சுத்தம் செய்வது, வேலை, மற்றும் பிறரைப் பராமரிப்பது போன்ற பல அத்தியாவசியக் கடமைகளால் நிரப்பப்பட்டிருந்தாலும், நாம் எதற்காகப் படைக்கப்பட்டோம் என்பதை மறவாமல், நம் ஆண்டவரை தினமும் ஆராதிப்போமா?


Monday, October 7, 2024

Oct 07

                            செபமாலை மாதா திருவிழா                                             


                            மனதில் பதிக்க…


பின்னர் மரியா, “நான் ஆண்டவரின் அடிமை; உம்சொற்படியே எனக்கு நிகழட்டும்” என்றார். - லூக்கா 1:38


Mary said, “Behold, I am the handmaid of the Lord. May it be done to me according to your word.” - Luke 1:38


மனதில் சிந்திக்க…


செபமாலை என்பது வல்லமையுள்ள ஓர் ஆன்மீக ஆயுதம். "செபமாலையின் செபங்கள்  நம்மைக் கடவுளோடு இணைக்கும் ஒரு சங்கிலி". செபமாலையைச் செபித்து, அன்னை மரியாவோடு இணைந்து நாம் கடவுளை மகிமைப்படுத்துகின்றபோது, அளவில்லா நன்மைகளை நாம் நிச்சயம் பெற்றுக்கொள்ள முடியும்.அன்னையின் உதவியை மன்றாடியவர்கள் யாரும் கைவிடப்பட மாட்டார்கள். அந்த அன்னையிடம் நம் முழுமையான நம்பிக்கை வைப்போம். அவரிடத்தில் நம்மை ஒப்புக்கொடுப்போம்.

Rosary is a powerful spiritual weapon. "Rosary is a chain of prayers that connects us to God". When we pray the rosary and glorify God together with Mother Mary, we can surely receive what we ask her. She never abandons us. Let's surrender us to her and seek her to be our intercessor.