Friday, February 28, 2025

Feb 28



மனதில் பதிக்க…


கடவுள் இணைத்ததை, மனிதர் பிரிக்காதிருக்கட்டும். மாற்கு 10:9


What therefore God has joined together, let not man separate. Mark 10:9

                               

மனதில் சிந்திக்க…  


இரண்டு மனிதர்களை ஒன்றாக இணைக்கும் வல்லமை இறைவனுக்கு உண்டு. திருமணம் என்பது சடங்குகளைப் பற்றியது அல்ல, மாறாக  ஒரு ஆணும் பெண்ணும் ஒருவருக்கொருவர் மற்றும் கடவுளுடன் செய்யும் உடன்படிக்கை உறவுக்குள் நுழைவதைப் பற்றியது. 


God has the power to make two people one. Marriage is not primarily about a wedding, but about a man and a woman entering into a covenant relationship with each other and with God.


-- 7th week - Friday - Cycle 1


Thursday, February 27, 2025

Feb 27

 


மனதில் பதிக்க…


நீங்கள் உப்பின் தன்மை கொண்டிருங்கள். ஒருவரோடு ஒருவர் அமைதியுடன் வாழுங்கள். மாற்கு9:50


Salt is good, but if it loses its saltiness, how will you make it salty again? Have salt in yourselves, and be at peace with one another . Mark 9:50


                               மனதில் சிந்திக்க…  


இயேசுவின் காலத்தில், தூய்மை, சபதம், பாதுகாத்தல் மற்றும் ஒருவரின் உழைப்பின் மதிப்பு உள்ளிட்ட பல ஆன்மீக உண்மைகள் மற்றும் கலாச்சார தத்துவங்களுக்கு உப்பு ஒரு உருவகமாக இருந்தது. இந்த வசனத்தில், மக்கள் தங்களுக்குள் உப்பின் குணங்களைக் கொண்டிருக்க வேண்டும், ஒருவருக்கொருவர் சமாதானமாக வாழ வேண்டும் என்று இயேசு போதிக்கிறார்.


In Jesus' time, salt was a metaphor for many spiritual truths and cultural philosophies, including purity, vows, preservation, and the worth of one's labor. In this verse, Jesus is teaching that people should have the qualities of salt among themselves and live in peace with each other.


- 7th week - Thursday - Cycle 1


Wednesday, February 26, 2025

Feb 26

 


மனதில் பதிக்க…



நமக்கு எதிராக இராதவர் நம் சார்பாக இருக்கிறார். மாற்கு 9:40


For he that is not against us is for us Mark 9:40


                                                     மனதில் சிந்திக்க…  


கடவுளுடைய ராஜ்யத்திற்காக நல்ல வேலையைச் செய்கிறவர்கள் சோர்வடையக்கூடாது என்று இயேசு விளக்குகிறார்.


Jesus explains that people who do good work for the kingdom of God should not be discouraged.


-- 7th week - Wednesday - Year 1


Tuesday, February 25, 2025

Feb 25

 


மனதில் பதிக்க…



ஒருவர் முதல்வராக இருக்க விரும்பினால் அவர் அனைவரிலும் கடைசியானவராகவும் அனைவருக்கும் தொண்டராகவும் இருக்கட்டும். மாற்கு 9:35


If anyone would be first, he shall be last of all and servant of all. Mark 9:35


                                                       மனதில் சிந்திக்க…  


இந்தப் போதனையானது சாந்தகுணமுள்ளவர்களும் அடக்கமுள்ளவர்களும் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள் என்று கூறும் இயேசுவின் மலைப் பொழிவை எதிரொலிக்கிறது.


This teaching echoes the Beatitudes, which say that the meek and humble are blessed. 


-- 7th week - Tuesday- Cycle 1



Monday, February 24, 2025

Feb 24

 


மனதில் பதிக்க…



நான் நம்புகிறேன். என் நம்பிக்கையின்மை நீங்க உதவும்” மாற்கு 9:24


"I believe; help my unbelief," Mark 9:24


                                                        மனதில் சிந்திக்க…  


மனித நம்பிக்கையுடன் கூடிய போராட்டம், ஒரு சக்திவாய்ந்த பிரதிபலிப்பாகும். அங்கு கடவுளை நம்பும் போது கூட, நாம் இன்னும் சந்தேகத்தை அனுபவிக்கலாம். நமது நிச்சயமற்ற தன்மையைக் கடக்க வலிமையைக் கேட்க வேண்டும். 


It is a powerful reflection of the human struggle with faith, where even while believing in God, we may still experience doubt and need to ask for strength to overcome our uncertainties; it captures the honest plea of a desperate father seeking help from Jesus.


-- 7th week - Monday - Cycle 1


Sunday, February 23, 2025

Feb 23

 


மனதில் பதிக்க…


உங்கள் தந்தை இரக்கம் உள்ளவராய் இருப்பதுபோல நீங்களும் இரக்கம் உள்ளவர்களாய் இருங்கள். லூகா 6:36


Be merciful, just as your Father is merciful. Luke 6:36


 மனதில் சிந்திக்க…  


உங்கள் தந்தை இரக்கமுள்ளவராய் இருப்பதைப் போல இரக்கமுள்ளவராக இருங்கள்" என்பது மற்றவர்களுடனான நமது தொடர்புகளில் கடவுளின் கருணை மற்றும் இரக்கத்தைப் பின்பற்றுவதற்கான அழைப்பு.மற்றவர்களை நியாயந்தீர்ப்பதைத் தவிர்க்கவும், அதற்குப் பதிலாக மன்னிக்கவும் இது ஒரு நினைவூட்டலாகும்.


Be merciful, just as your Father is merciful," is a call to imitate God's mercy and compassion in our interactions with others. It's also a reminder to avoid judging others and instead to forgive. 


-- 7th week - Sunday - Cycle C


Saturday, February 22, 2025

Feb 22

 


மனதில் பதிக்க…


“நீர் மெசியா, வாழும் கடவுளின் மகன்” - மத்தேயு 16: 17 


“You are the Messiah, the Son of the living God”- Matthew 16:17


 

மனதில் சிந்திக்க…  


"கிறிஸ்து, வாழும் கடவுளின் மகன்" என்ற உண்மையை ஒப்புகொள்வதே நம் வாழ்வில் உள்ள அனைத்து வேதனைகளுக்கும் பதில்.  என்ன நேர்ந்தாலும் நம் நம்பிக்கையை

கைவிடாமல் இருக்கும் துணிச்சல் நம்மிடம் உள்ளதா?


"Christ, the Son of the living God" is an answer to all the torments in our lives, only when we confess this truth and believe in Him. Are we bold enough to profess our faith no matter what lies ahead of us?


-- 6th week - Saturday - Cycle 1


Friday, February 21, 2025

Feb 21

 


மனதில் பதிக்க…


ஒருவர் உலகம் முழுவதையும் தமதாக்கிக் கொண்டாலும் தம் வாழ்வையே இழப்பார் எனில் அவருக்குக் கிடைக்கும் பயன் என்ன? - மாற்கு 8: 35 


For whoever wants to save their life will lose it, but whoever loses their life for me and for the gospel will save it- Mark 8:35


 மனதில் சிந்திக்க…  


நாம் பார்க்கும் அனைத்திற்கும் ஏங்குவதையும், நமது சாதனைகளில் பெருமையையும் மட்டுமே இவ்வுலகம் வழங்குகிறது. நம்முடைய உலக ஆசைகளை நிறைவேற்றுவதில் நாம் ஆர்வமாக உள்ளோமா ? அல்லது நித்திய ராஜ்ஜியத்தைப் பெற நம் கடவுளைப் பிரியப்படுத்த விரும்புகிறோமா?


The world offers only a craving for physical pleasure and everything we see, and pride in our achievements.  Are we keen on fulfilling our worldly desires or working on pleasing our God to gain eternal kingdom?


-- 6th week - Friday - Cycle 1


Thursday, February 20, 2025

Feb 20

 


மனதில் பதிக்க…


நீ கடவுளுக்கு ஏற்றவை பற்றி எண்ணாமல் மனிதருக்கு ஏற்றவை பற்றியே எண்ணுகிறாய்-  மாற்கு 8: 33


You do not have in mind the concerns of God, but merely human concerns.

- Mark 8: 33



 மனதில் சிந்திக்க…  


கடவுளையும் அவருடைய ஞானத்தையும் விட நம்மையும் நம் சொந்த ஞானத்தையும் பெரிதாக நம்புகிறோம். நம் படைப்பாளரை விட நமக்கு எல்லாம் நன்றாக தெரியும் என்று முடிவு செய்கிறோம். நாம் நம் இதயங்களைக் தாழ்த்தி, எல்லாவற்றிலும் கடவுளை முன்னிலை படுத்த தயாரா?


We trust ourselves and our own wisdom more than God and His wisdom. We decide that we know better than the One who created us. Are we ready to commit ourselves to trusting God and believing Him above all?


-- 6th week - Thursday - Cycle 1


Wednesday, February 19, 2025

Feb 19

 


மனதில் பதிக்க…


அவர் நலமடைந்து முழுப் பார்வை பெற்று அனைத்தையும் தெளிவாகக் கண்டார்- மாற்கு 8: 25


His sight was restored, and he saw everything clearly- Mark 8:25



 மனதில் சிந்திக்க…  


நாம் அனைவரும் கத்தோலிக்க விசுவாசத்தில் குறைவாகப் பிறந்தவர்கள். நம் அவ்விசுவாச கண்களைத் திறக்கக்கூடியவர் இயேசு மட்டுமே. கிறிஸ்துவின் சித்தத்திற்கு நம் வாழ்க்கையை முழுமையாக ஒப்படைப்பதன் மூலம் நமது அவ்விசுவாச கண்களை மீட்டெடுக்க நாம் தயாரா?


We are all born spiritually blind and Jesus is the only healer who can open our blind eyes. Are we ready to restore our blindness by surrendering our lives completely to the will of Christ?


-- 6th week - Tuesday - Cycle 1


Tuesday, February 18, 2025

Feb 18

 


மனதில் பதிக்க…


இன்னுமா உணராமலும் புரிந்துகொள்ளாமலும் இருக்கிறீர்கள்? உங்கள் உள்ளம் மழுங்கியா போயிற்று? மாற்கு 8 :17


Don't you know or understand yet? Are your minds so dull? Mark 8:17



 மனதில் சிந்திக்க…  


இயேசுஆயிரக்கணக்கானவர்களுக்கு உணவளிப்பதைக் கண்ட பிறகும், சீடர்கள் விசுவாசமின்மையை வெளிப்படுத்தினர். நமது சொந்த கவலைகளை முன்வைத்து, கிறிஸ்துவின் மீதான நம்பிக்கையை உடைக்க அனுமதிக்கிறோமா?


The disciples exhibited a lack of spiritual insight even after they had witnessed Jesus feeding thousands with a handful of loaves and fish. Are we allowing our physical concerns to overshadow spiritual truths and diluting our faith towards Christ?


-- 6th week - Tuesday - Cycle 1


Monday, February 17, 2025

Feb 17

 


மனதில் பதிக்க…


இந்தத் தலைமுறையினர் அடையாளம் கேட்பதேன்? மாற்கு 8 :12


Why does this generation ask for a sign?  Mark 8: 12



 மனதில் சிந்திக்க…  


பரிசேயர்களுக்கு ஒரு அடையாளத்தைக் கொடுக்க இயேசு மறுத்துவிட்டார், ஏனென்றால் கடவுள் ஏற்கனவே அவர்களின் வாழ்க்கையில் செயல்படுகிறார் என்பதை அறியாதவர்களாக இருந்தனர். நமது அன்றாட வாழ்வில் கடவுளின் அன்பின் அடையாளங்கள் செயல்படுவதைக் காணத் தவறியதை நாம் அறிந்திருக்கிறோமா?


Jesus refused to give the Pharisees a sign as they were ignorant to the fact that God was already working in their lives. Are we aware of our own blindness and failures to see the signs of God's love operating in our everyday lives?


-- 6th week Monday- cycle 1


Sunday, February 16, 2025

Feb 16

 


மனதில் பதிக்க…


ஏழைகளே, நீங்கள் பேறுபெற்றோர்; ஏனெனில் இறையாட்சி உங்களுக்கு உரியதே.  லூக்கா 6: 20 


Blessed are you who are poor, for yours is the kingdom of God.  Luke 6: 20



 மனதில் சிந்திக்க…  


இயேசு, அவருடைய அழைப்புக்கு தங்களை ஒப்படைத்து, அவரைப் பின்பற்றுபவர்களுக்கு ஆசீர்வாதங்களை வாக்களிக்கிறார். நாம் நம்மைத் தாழ்த்திக் கொள்ளவும், அவருடைய கிருபையின்றி நம்முடைய செயல்கள் வலுவற்றது என்பதை அங்கீகரிக்கவும் தயாரா?


Jesus promises blessings to those who surrender themselves to His call and follow Him with all their hearts. Are we ready to humble ourselves and recognize that our best is nothing and our greatest claim to fame is valueless without His grace?


-- 6th week Sunday - Cycle C



 


Saturday, February 15, 2025

Feb 15

 


மனதில் பதிக்க…


அவர்கள் வயிறார உண்டார்கள்; மீதியாய் இருந்த துண்டுகளை ஏழு கூடைகள் நிறைய எடுத்தார்கள். மாற்கு 8:8


And they ate and were satisfied; and they took up the broken pieces left over seven baskets full. Mark 8:8



 மனதில் சிந்திக்க…  


இயேசு தம்முடைய வார்த்தையினாலும், அப்பத்தினாலும் நமக்கு ஊட்டமளிக்கிறார். கடவுள் நமக்கு அபரிமிதமாகக் கொடுக்கும்போது - நம் தகுதிக்கு  அதிகமாகவும், நம் தேவைக்கு அதிகமாகவும் கொடுக்கிறார், அதனால் நம்மிடம் மற்றவரிடம் பகிர எப்போதும் ஏதாவது இருக்கும்.


Jesus nourishes us with His word and with His bread. When God gives, He gives abundantly - more than we deserve and more than we need, so we may always have something to share with others.


-- 5th week - Saturday - Cycle 1

Friday, February 14, 2025

Feb 14

 


மனதில் பதிக்க…


காது கேளாதோர் கேட்கவும், பேச்சற்றோர் பேசவும், ஆண்டவர் செய்கிறார். மாற்கு 7:37


He makes the deaf hear and the mute speak. Mark 7:37



 மனதில் சிந்திக்க…  


இறைவன் நம் ஒவ்வொருவரையும் கருணையோடு நடத்துகிறார், மேலும் நாம் ஒருவரையொருவர் அவ்வாறே நடத்துமாறு அவர் அழைக்கிறார். நமக்குள் குடியிருக்கும் பரிசுத்த ஆவியானவர், இயேசு நேசிப்பதைப் போல நாமும் நேசிக்க உதவுகிறார்.


The Lord treats each of us with kindness and he calls us to treat one another in like manner. The Holy Spirit who dwells within us enables us to love as Jesus loves.


-- 5th week - Friday - Cycle 1



 


Thursday, February 13, 2025

Feb 13

 


மனதில் பதிக்க…


அப்பொழுது இயேசு அவரிடம், “நீர் இப்படிச் சொன்னதால் போகலாம்; பேய் உம் மகளை விட்டு நீங்கிற்று” என்றார். மாற்கு 7:29


And he said to her, "For this saying you may go your way; the demon has left your daughter." Mark 7:29


 மனதில் சிந்திக்க…  


தம்மை தேடுபவர்களுக்கு இறைவன் கருணை காட்டுகிறார். இறைவனின் கருணையை நாம் ஒருபோதும்  சந்தேகிக்காமல், அவர் நம்மை எல்லாத் தீமைகளிலிருந்தும் விடுவிப்பார் என்பதில் நம் நம்பிக்கையை அதிகப்படுத்துவோம்.


The Lord shows mercy to those who seek Him. Let us never doubt Lord's mercy and increase our faith in Him delivering us from all evil and harm.


-- 5th week - Thursday - Cycle 1