Monday, October 13, 2025

Oct 13

 


மனதில் பதிக்க… 


இவர்களுக்கு யோனாவின் அடையாளத்தைத் தவிர வேறு அடையாளம் எதுவும் கொடுக்கப்பட மாட்டாது. - லூக்கா 11:29 


But no sign will be given it, except the sign of Jonah. - Luke 11:29



மனதில் சிந்திக்க…



நாம் ஒவ்வொரு நாளும் தூய ஆவியினால் நிறப்பப்பட்டு இயேசு விட்டு சென்ற அடையாளமாகிய அவரது வார்த்தைகளுக்கு கீழ்படிந்து வாழ முன்வருவோமா?


Shall we be filled with the Holy Spirit every day and live a life in obedience to the words that Jesus left behind?


-- 28th Monday in ordinary time - cycle 1


Sunday, October 12, 2025

Oct 12

 


மனதில் பதிக்க… 


கடவுளைப் போற்றிப் புகழ அன்னியராகிய உம்மைத் தவிர வேறு எவரும் திரும்பிவரக் காணோமே!” என்றார். -  லூக்கா 17:18


Has none but this foreigner returned to give thanks to God? - Luke 17:18


மனதில் சிந்திக்க…



நன்றியுணர்வு என்பது நாம் எவ்வளவு பெற்றுக்கொள்கின்றோம் என்பதல்ல மாறாக சிறு காரியங்களிலும் நாம் எவ்வளவு நிறையுள்ளவர்களாய் இருக்கிறோம் என்பதை எண்பித்து காட்டுகிறது. நம் அன்றாட வாழ்வில் நன்றி உள்ளவர்களாக இருக்கிறோமா ?


Gratitude is not about how much we receive, but rather how much we are grateful for even the little things. Are we grateful in our daily lives?


-- 28th Sunday in Ordinary Time - Cycle 1


Saturday, October 11, 2025

Oct 11

 


மனதில் பதிக்க… 


"இறைவார்த்தையைக் கேட்டு அதைக் கடைப்பிடிப்போர் அதிகம் பேறுபெற்றோர்!". - லூக்கா 11:28


"Blessed rather are those who hear the word of God and keep it!" - Luke 11: 28


மனதில் சிந்திக்க…



இறைவனுடைய வார்த்தையைக் கேட்டு அதை விசுவாசிப்பவர்கள் உண்மையிலேயே பேறுபெற்றவர்கள். நாம் இறைவனைத் தனிப்பட்ட முறையில் அறிந்து, அவருடைய வார்த்தையைக் கேட்டு கீழ்ப்படிவதில் மகிழ்ச்சி காண்கிறோமா?


Those who hear God's word and believe it, are truly blessed. Do we know our God personally and find joy in listening and obeying His word?


-- 27th Saturday in ordinary time - Cycle 1


Friday, October 10, 2025

Oct 10

 


மனதில் பதிக்க… 


வலியவர் ஆயுதம் தாங்கித் தம் அரண்மனையைக் காக்கிறபோது அவருடைய உடைமைகள் பாதுகாப்பாக இருக்கும். லூக்கா 11:21


When a strong man, fully armed, guards his own palace, his goods are in peace. Luke 11: 21


மனதில் சிந்திக்க…



கடவுளும், அவருடைய வார்த்தையும் தான் நமது பாதுகாப்பும், ஆதாரமும் ஆகும். இயேசு, நமது மனம், இதயம் மற்றும் வீட்டின் ஆண்டவரா, சிந்திப்போம்?


God and His Word are the source of our protection and security. Is Jesus the Lord of our mind, heart, and home?


-- 27th Friday in ordinary time - cycle 1


Thursday, October 9, 2025

Oct 09

 


மனதில் பதிக்க… 


விண்ணகத் தந்தை தம்மிடம் கேட்போருக்குத் தூய ஆவியைக் கொடுப்பது எத்துணை உறுதி!. லூக்கா 11:13b


How much more will the heavenly Father give the Holy Spirit to those who ask him! Luke 11: 13b



மனதில் சிந்திக்க…


தம்மைத் தேடிக் கூப்பிடுபவர்களுக்குக் கடவுள் எப்போதும் பதிலளிக்கத் தயாராக இருக்கிறார் என்று இயேசு நமக்குச் சொல்கிறார். நமக்குத் தேவைப்படும்போது நாம் யாரிடம் உதவி கேட்கிறோம்?


Jesus tells us that God is always ready to answer those who seek him and call upon him. When we are in need who do we turn to for help?


-- 27th Thursday in Ordinary Time - Cycle 1




Wednesday, October 8, 2025

Oct 08

 


மனதில் பதிக்க… 


தந்தையே, உமது பெயர் தூயதெனப் போற்றப் பெறுக! உமது ஆட்சி வருக. - லூக்கா 11:2b


Father, hallowed be your name. Your kingdom come. - Luke 11: 2b



மனதில் சிந்திக்க…


கடவுள் நம்மைத் தம்முடைய சொந்த மகன்களாகவும் மகள்களாகவும் நடத்துகிறார். நம்மை நேசிக்கும் ஒரு தந்தையாக நாம் கடவுளை நம்பிக்கையுடன் அணுகுகிறோமா?


God treats us as his own sons and daughters. Do we approach God confidently as a Father who loves us?


-- 27th Wednesday in ordinary time - cycle 1



Tuesday, October 7, 2025

Oct 07

 


மனதில் பதிக்க… 


மரியா ஆண்டவருடைய காலடி அருகில் அமர்ந்து அவர் சொல்வதைக் கேட்டுக்கொண்டிருந்தார். லூக்கா 10:39b


Mary, sat at the Lord's feet and listened to his teaching. - Luke 10: 39b


மனதில் சிந்திக்க…


பதட்டமும், பலவித சிந்தனைகளும் நம்மை, இறைவனுக்கு நமது கவனத்தைச் செலுத்துவதிலிருந்தும் அவர் சொல்வதைக் கேட்பதிலிருந்தும் தடுக்கின்றன. நமது கவலைகளையும், சிந்தனைகளையும் இறைவனிடம் சமர்ப்பிப்போமா?



Anxiety and preoccupation keep us from listening and from giving the Lord our undivided attention. May we give our concerns and preoccupations to the Lord?


-- 27th Tuesday in ordinary time - cycle 1


Monday, October 6, 2025

Oct 06

 


மனதில் பதிக்க… 


“எனக்கு அடுத்திருப்பவர் யார்?” - லூக்கா 10:29b


"And who is my neighbor?" - Luke 10: 29b



மனதில் சிந்திக்க…


நம் அடுத்திருப்பவர் யார்? துன்பத்தில் வாடுவோர் , தனிமையில் தவிர்ப்போர் யாராக இருந்தாலும்  அவர்களை நம் அடுத்திருப்பவராக கருதி அவர்களுக்கு உதவ முன்வருவோமா ? 


Who are our neighbors? Shall we consider those who are suffering and isolated as our neighbors and come forward to help them, no matter who they are?


-- 27th Monday in ordinary time - Cycle 1


Sunday, October 5, 2025

Oct 05

 


மனதில் பதிக்க… 


“கடுகளவு நம்பிக்கை உங்களுக்கு இருந்தால் நீங்கள் இந்தக் காட்டு அத்தி மரத்தை நோக்கி, ‘நீ வேரோடே பெயர்ந்துபோய்க் கடலில் வேரூன்றி நில்’ எனக் கூறினால் அது உங்களுக்குக்  கீழ்ப்படியும்". - லூக்கா 17:6


"If you had faith as a grain of mustard seed, you could say to this sycamine tree, `Be rooted up, and be planted in the sea,' and it would obey you." - Luke 17:6


மனதில் சிந்திக்க…


நம் சக்திக்கு அப்பாற்பட்ட சவால்களையும் சிரமங்களையும் நாம் அடிக்கடி சந்திக்கிறோம். மனித சக்தியால் சாத்தியமற்றது கடவுளின் சக்தியில் நம்பிக்கை கொண்டவர்களுக்கு சாத்தியம் என்று நம்புவோமா?

We often encounter challenges and difficulties which seem beyond our power to handle. Let us believe that what appears impossible to human power is possible to those who believe in God's power.

-- 27th Sunday in Ordinary Time - Year C


Saturday, October 4, 2025

Oct 04

 


மனதில் பதிக்க… 


நீங்கள் காண்பவற்றைக் காணும் வாய்ப்புப் பெற்றோர்                     பேறுபெற்றோர். - லூக்கா 10:23


Blessed are the eyes that see what you see. - Luke 10:23

மனதில் சிந்திக்க…


தங்களாலும் அற்புதங்கள் செய்ய முடிகிறது என்பதை உணர்ந்த சீடர்கள் போல, நாமும்  பணிவிடை செய்யும்போது  இறைவனை மகிமைப்படுத்தவும் , பிறர் வாழ்வில் அற்புதங்களை செய்யவும் முடியும் என்பதை நினைவில் கொண்டு செயல்படுவோமா?


Like the disciples who realized they were also able to perform miracles, shall we realize that when we serve people, we can glorify God and perform miracles in the lives of others?


-- 26th Saturday in Ordinary Time - Cycle 1


Friday, October 3, 2025

Oct 03

 


மனதில் பதிக்க… 


உங்களுக்குச் செவிசாய்ப்பவர் எனக்குச் செவிசாய்க்கிறார். -

  லூக்கா 10:16 


Whoever listens to you listens to me. - Luke 10:16

மனதில் சிந்திக்க…


நாம் ஒவ்வொருவரும் இவ்வுலகில் இறைவனின் தூதராக இருந்து, அவருடைய பிரசன்னத்தை மற்றவர்களுக்கு வெளிப்படுத்த அழைப்பைப் பெற்றுள்ளோம். நாம் தகுதி இல்லாதவர்களாக இருப்பினும் நம்மை அவர் தேர்ந்து எடுத்துள்ளார். அவரின் நம்பிக்கையை நிறைவேற்றுவோமா? 


We have each received the extraordinary calling to be the Lord’s ambassador in our world, to reveal his presence to others. He has chosen us even though we are unworthy. Shall we fulfill His expectations?

-- 26th Friday in Ordinary time Cycle 1


Thursday, October 2, 2025

Oct 02

 


மனதில் பதிக்க… 


இவர்களுடைய வான தூதர்கள் என் விண்ணகத் தந்தையின் திருமுன் எப்பொழுதும் இருக்கின்றார்கள். - மத்தேயு 18:10

I say to you that their angels in heaven always look upon the face of my heavenly Father. - Matthew 18:10


மனதில் சிந்திக்க…


காவல் தூதர்களின் விழாவான இன்று, நமக்கு இறைவன் தந்த காவல் தூதருக்காக நன்றி கூறி, தினந்தோறும் நம்மை பாதுகாக்க, வழிநடத்த, நம்மோடு பயணிக்க , மனசாட்சி படி வாழவும் துணைபுரிய மன்றாடுவோமா? 

Today, as we celebrate Feast of the Guardian Angels, shall we give thanks for the guardian angels God has given us and pray to them for our protection, guidance, journey with us, and help us to live according to our conscience?

-- 26th Thursday in ordinary time - cycle 1


Wednesday, October 1, 2025

Oct 01

 


மனதில் பதிக்க… 


கிறிஸ்துவை ஆதாயமாக்கிக்கொள்ள எல்லாவற்றையும் குப்பையாகக் கருதுகிறேன். - பிலிப்பியர் 3:8

I consider all things so much rubbish that I may gain Christ and be found in him. - Philippians 3:8

மனதில் சிந்திக்க…


உலகின் மாயைகளுக்கு நாம் அடிமைகள் ஆகாமல், குழந்தை தெரசாவைப் போல கிறிஸ்துவைப் இறுகப் பற்றிக்கொண்டு மக்களுக்கு பணிவிடை புரிவதை நம் தலையாய கடமையாக கொள்வோமா? 


Let us not become slaves to all the petty happiness in this world, but rather, be like St. Teresa of child Jesus by holding Christ close to us and serve our fellow people.


-- 26th Wednesday in Ordinary time - Cycle 1


Tuesday, September 30, 2025

Sep 30

 


மனதில் பதிக்க… 


கடவுள் நம்மோடு இருக்கின்றார். -  செக் 8: 23

God is with us. - Zec 8:23

மனதில் சிந்திக்க…


ஆண்டவர் நம்மோடு இருக்கிறார் என்கின்ற எண்ணம் தான், எல்லாச் சூழ்நிலைகளிலும் நாம் நம்பிக்கையோடு, எதையும் பற்றி கவலை கொள்ளாமல்  மகிழ்ச்சியாக வாழ்வதற்கு உதவியாக இருக்கிறது. நற்கருணையில் பிரசன்னமாகி இருக்கும் நம் ஆண்டவரை உணர்ந்து கொள்வோமா? 


The thought that the Lord is with us helps us to live with confidence and joy in all situations, without worrying about anything. Shall we recognize our Lord, who is present in the Eucharist?

--26th Tuesday in Ordinary Time - Cycle 1


Monday, September 29, 2025

Sep 29

 


மனதில் பதிக்க… 


நம் சகோதரர் சகோதரிகள் மீது குற்றம் சுமத்தியவன், நம் கடவுள் திருமுன் அல்லும் பகலும் அவர்கள் மீது குற்றம் சாட்டியவன் வெளியே தள்ளப்பட்டான். - திருவெளிப்பாடு 12:10

For the accuser of our brothers is cast out, who accuses them before our God day and night. - Revelation 12:10

மனதில் சிந்திக்க…


இன்று அதிதூதர்களின் விழா. தீமையிலிருந்து காப்பாற்றும் மிக்கேல், மங்கள வார்த்தை சொல்லும் கபிரியேல், நலம் நல்கும் இரபேல் ஆகிய இவர்கள் என்றும் நம் உடனிருக்கிறார்கள் என்பதை உணர்ந்து பிறருக்கு சுகம் கொடுப்பவர்களாகவும், சுமைதாங்கிளாகவும், ஆறுதலளிப்பவர்களாகவும் இருக்க இவர்களின் துணையை நாடுவோமா?


Today is the feast of the Archangels. May we realize that, Michael, who protects us from evil, Gabriel, who speaks good words, and Raphael, who gives good things, are always with us and work towards bringing happiness, support and comfort to others?

--26th Monday in Ordinary Time - Cycle 1


Sunday, September 28, 2025

Sep 28

 


மனதில் பதிக்க… 


  ஆபிரகாம், ‘அவர்கள் மோசேக்கும் இறைவாக்கினருக்கும் செவிசாய்க்காவிட்டால், இறந்த ஒருவர் உயிர்த்தெழுந்து அவர்களிடம் போனாலும் நம்பமாட்டார்கள்” என்றார். - லூக்கா 16:31


Then Abraham said, ‘If they will not listen to Moses and the prophets, neither will they be persuaded if someone should rise from the dead.’ - Luke 16:31

மனதில் சிந்திக்க…


நாம் எவ்வளவோ முயற்சி செய்தாலும் இறைவனின் இரக்கத்தால் அன்றி யாரையும் மனமாற்ற முடியாது. நன்மை , தீமைகளை பகுத்தறிய, மற்றும் மனமாற்றத்தை தர இறை அருளை வேண்டுவோமா? 


No matter how hard we try, we cannot change anyone's mind except by the mercy of God. Shall we ask God for the grace to discern between good and evil and to change minds?

-- 26th Sunday in Ordinary time - Year C


Saturday, September 27, 2025

Sep 27

 


மனதில் பதிக்க… 


        “அதைச் சுற்றிலும் நானே நெருப்புச் சுவராய் அமைவேன்; அதனுள் உறையும் மாட்சியாய்  விளங்குவேன்’, என்கிறார் ஆண்டவர்.” -  செக்கரியா 2:9

       “I will be for her an encircling wall of fire, says the LORD, and I will be the glory in her midst.” - Zechariah 2:9


மனதில் சிந்திக்க…


அன்று இஸ்ரேலை காத்தது போல, நம் இறைவன் நம்மை எல்லா வேளைகளிலும், எல்லா தீமையின் நின்றும் இரத்த கோட்டையால் காத்து வருகிறார். நாமும் அவரை பற்றிக்கொண்டு அவரின் பிள்ளையாக வாழ முயல்வோமா? சிந்திப்போம்.


Like Israel, God has been protecting each one of us and He shields us from all problems and dangers with His Blood. Are we ready to hold on to Him always and be His Children?

-- 25th Saturday in ordinary time - Cycle 1


Friday, September 26, 2025

Sep 26

 


மனதில் பதிக்க… 


        “பேதுரு மறுமொழியாக, “நீர் கடவுளின் மெசியா” என்று

உரைத்தார்” -  லூக்கா 9:20


       “Peter said in reply, “The Christ of God.” - Luke 9:20


மனதில் சிந்திக்க…


பேதுரு இயேசுவின் அருகிலிருந்து , அவரின் போதனைகளை கேட்டு மற்றும் இயேசுவின் ஏராளமான புதுமைகளை நேரில் கண்டு, இயேசுவை இறை மகன் என கண்டுகொண்டார். அவ்வாரே இறைவார்த்தையை கேட்டு அவரின் எண்ணிலடங்கா ஆசீர்வாதத்தால் பலனடைந்த பிறகும், இயேசுவே ஏற்றுக்கொள்கிறோமா? சிந்திப்போம்


Peter after being with Jesus and hearing His preaching and witnessing the innumerable miracles performed by Jesus, rightly identified Jesus as the Son of God. After listening to His Gospel so many times and getting benefitted from His blessings, are we ready to accept Jesus as our true God?

--25th Friday in Ordinary Time - Cycle 1


Thursday, September 25, 2025

Sep 25

 


மனதில் பதிக்க… 


        “இவரைப் பற்றி இவ்வாறெல்லாம் கேள்விப்படுகிறேனே!” என்று சொல்லி இயேசுவைக் காண  

          வாய்ப்புத் தேடிக்கொண்டிருந்தான்” -  லூக்கா 9:9

       “Who then is this about whom I hear such things?” And he kept trying to see him.” - Luke 9:9


மனதில் சிந்திக்க…


இயேசு கிறிஸ்துவால் தினம் தினம் பல்வேறு வகைகளிலும் பலன் அடையும் நாம் , அவரை பற்றி அறிந்து கொள்ளவும் , அவரின் வார்த்தையை பின்பற்றி அவரின் பிள்ளையாகவும் வாழ முயற்சி  எடுக்கிறோமா? சிந்திப்போம்?


With God, working so many wonders in of our lives, every day and every moment, are we ready to know more about Him and follow His preaching to lead a life as His children?

-- 25th Thursday in Ordinary Time - Cycle 1