Saturday, August 31, 2024

Aug 31

மனதில் பதிக்க…


His master said to him, 'Well done, my good and faithful servant. Since you were faithful in small matters, I will give you great responsibilities. Come, share your master's joy.' Matthew 25:23

அவருடைய தலைவர் அவரிடம், ‘நன்று. நம்பிக்கைக்குரிய நல்ல பணியாளரே, சிறிய பொறுப்புகளில் நம்பிக்கைக்கு உரியவராய் இருந்தீர். எனவே பெரிய பொறுப்புகளில் உம்மை அமர்த்துவேன். உம் தலைவனாகிய என் மகிழ்ச்சியில் நீரும் வந்து பங்கு கொள்ளும்’ என்றார். மத்தேயு 25:23


மனதில் சிந்திக்க…


Are we seeking the help of the Holy Spirit that God has given us or are we blaming circumstances, neglected his companionship, and taken him for granted? Let’s think about it.

கடவுள் நமக்குக் கொடுத்த தூய ஆவியின் உதவியை நாடுகிறோமா அல்லது சூழ்நிலைகளைக் குற்றம் சாட்டி, அவருடைய தோழமையை நாம் புறக்கணித்து, அவரை சாதாரணமாக எடுத்துக் கொண்டோமா? சிந்திப்போம்!


Friday, August 30, 2024

Aug 30

 மனதில் பதிக்க…


The wise took flasks of oil with their lamps. Matt 25: 4

ஞானமுள்ளவர்கள் தங்கள் விளக்குகளோடு தங்கள் பாத்திரங்களில் எண்ணெயையும் கொண்டுபோனார்கள். மத் 25:4



மனதில் சிந்திக்க…


We miss out on what's most important in life. Being unprepared can lead to unnecessary trouble and even disaster! What good is a life-jacket left on the shore when the boat is sinking!

வாழ்க்கையில் மிக முக்கியமானதை நாம் தவறவிடுகிறோம். தயாரில்லாமல் இருப்பது தேவையற்ற பிரச்சனைகளுக்கும் பேரழிவிற்கும் கூட வழிவகுக்கும்! படகு மூழ்கும்போது கரையில் விடப்பட்ட காப்புச்சட்டைக்கு என்ன பயன்!

Thursday, August 29, 2024

Aug 29

 மனதில் பதிக்க…


Blessed are those who are persecuted for the sake of righteousness,for theirs is the Kingdom of heaven. Mt 5:10

நீதியின் பொருட்டுத் துன்புறுத்தப்படுவோர் பேறுபெற்றோர்; ஏனெனில் விண்ணரசு அவர்களுக்குரியது.மத் 5: 10


மனதில் சிந்திக்க…


Will we be able to boldly voice injustice like John the Baptist? Let's Think! Let's Act!

திருமுழுக்கு யோவான் போல அநீதிக்கு தைரியமாய் குரல் கொடுப்போமா? சிந்திப்போம்! செயல் படுவோம் !

Wednesday, August 28, 2024

Aug 28

 மனதில் பதிக்க…


On the outside you appear to people as righteous but on the inside you are full of hypocrisy and wickedness Matt 23: 28

வெளியே மக்களுக்கு நேர்மையாளராய்த் தோற்றமளிக்கிறீர்கள். ஆனால் உள்ளேயோ போலித்தனமும் நெறிகேடும் நிறைந்தவர்களாய் இருக்கிறீர்கள். மத் 23: 28


மனதில் சிந்திக்க…


True beauty and goodness comes from within the hearts and minds. Let us continue to ask Holy Spirit to renew our internal self with God's wisdom and love.

உண்மையான அழகும் நன்மையும் இதயத்திலும் மனதிலும் இருந்து வருகிறது. இறைவனுடைய ஞானத்தினாலும் அன்பினாலும் நம்முடைய அகத்தை புதுப்பிக்க தூய ஆவியானவரை தொடர்ந்து  வேண்டுவோம்.


Tuesday, August 27, 2024

Aug 27

 மனதில் பதிக்க…

Blind Pharisee! First clean the inside of the cup and dish, and then the outside also will be clean. Matt 23: 26

குருடனான பரிசேயனே! பாத்திரங்களின் வெளிப்புறம் சுத்தமாகும்படி அவைகளின் உட்புறத்தை முதலாவது சுத்தமாக்கு. மத் 23: 26


மனதில் சிந்திக்க…

Sometimes we let blind spots to blur our vision of God's Kingdom and His ways. Let us think about our outward practices, and ask God to reveal what is truly important and necessary. Let God's love shapes our minds and transforms our hearts and actions. 

கடவுளுடைய அரசு மற்றும் அவருடைய வழிகள் பற்றிய நமது பார்வையை மங்கலாக்க சில சமயங்களில்  அனுமதிக்கிறோம். நம்முடைய வெளிப்புற நடைமுறைகளைப் பற்றி சிந்தித்து, உண்மையிலேயே முக்கியமான மற்றும் அவசியமானதை மட்டும் வெளிப்படுத்தும்படி கடவுளிடம் கேட்போம். அவர் அன்பு, நம் மனதை வடிவமைத்து, நம் இதயங்களையும், நம் செயல்களையும் மாற்றட்டும்.

Monday, August 26, 2024

Aug 26

 மனதில் பதிக்க…


Your endurance and faithfulness in all the persecutions, hardships and sufferings are evidence that God's judgment is just, and as a result you will be counted worthy of the kingdom of God.  2 Thes 1:5

உங்கள் துன்பங்களுக்கிடையே நீங்கள் காட்டிய சகிப்புத்தன்மையையும் இன்னல்களுக்கு இடையே நீங்கள் கொண்டிருந்த மனவுறுதியையும் நம்பிக்கையையும், கடவுளின் தீர்ப்பு நீதியானது என்பதற்கு அறிகுறியாக அமைகின்றன. இவை அனைத்தின் விளைவாக நீங்கள் இறையாட்சிக்குத் தகுதி உள்ளவர்கள் ஆவீர்கள். 2 Thes 1:5

மனதில் சிந்திக்க…


When the Lord Jesus knocks on the door of our heart let us be ready to answer and receive him. Let us not shut the door to The heavenly Kingdom through our stubborn pride or disbelief.

இயேசு நம் இதயக் கதவைத் தட்டும்போது, ​​அவருக்குப் பதில் சொல்லவும், அவரை ஏற்றுக்கொள்ளவும் ஆயத்தமாவோம். நம்முடைய பிடிவாதம், பெருமை மற்றும் நம்பிக்கையின்மையின் மூலம் இறையாட்சிக் கதவை அடைக்காமல் இருப்போம்.


Sunday, August 25, 2024

Aug 25

 மனதில் பதிக்க…


Master to whom shall we go? You have the words of eternal life.  John 6:68

யாரிடம் செல்வோம் இறைவா வாழ்வு தரும் வார்த்தையெல்லாம் உம்மிடம் அன்றோ உள்ளன. யோவான் :6: 68 



மனதில் சிந்திக்க…


Our Lord Jesus has the words of everlasting life. Let us cast aside all our doubts and fears, freely embrace His word and with complete trust and joy surrender all to him. Let our prayers be Thy will be done.

நம் ஆண்டவர் இயேசுவிடம் நித்திய வாழ்வின் வார்த்தைகள் உள்ளன. நம்முடைய சந்தேகங்கள் மற்றும் பயங்கள் அனைத்தையும் ஒதுக்கி வைத்துவிட்டு, சுதந்திரமாக அவருடைய வார்த்தையை ஏற்றுக்கொண்டு, முழுமையான நம்பிக்கையுடனும் மகிழ்ச்சியுடனும் அனைத்தையும் அவரிடம் ஒப்படைப்போம். நம் ஜெபங்கள் உமது சித்தம் நிறைவேறட்டும் என இருப்பதாக. 


Saturday, August 24, 2024

Aug 24

 மனதில் பதிக்க…


“You believe that just because I said I saw you under the fig tree. You are going to see greater things than that" (John 1:50 

“உம்மை அத்திமரத்தின் கீழ்க் கண்டேன் என்று உம்மிடம் சொன்னதாலா நம்புகிறீர்? இதை விடப் பெரியவற்றைக் காண்பீர்” என்றார்." (யோவான் 1: 50)


மனதில் சிந்திக்க…


Like Nathaniel even we at many times find Jesus when there is a wonder/miraculous thing in our life. If we are able to stay united with God even during our challenging times, can we also see greater things in life?


நத்தனியேலைப்போல நாமும் பல நேரங்களில் நமது வாழ்கையில் நடக்கும் அற்புதங்களில் கடவுளின் மகிமையை கண்டுகொள்கிறோம்..

வாழ்க்கையில் வரும் துன்ப வேளையிலும் இயேசுவோடு நாம் இணைந்திருந்து  இன்னும் பெரியவற்றை இயேசு நிகழ்த்துவதை காண்போமா.. சிந்திப்போம்…


Friday, August 23, 2024

Aug 23

 மனதில் பதிக்க…


“You must love your neighbour as yourself" (Matthew 22:39) 

“உன்மீது நீ அன்பு கூர்வது போல உனக்கு அடுத்திருப்பவர்மீதும் அன்பு கூர்வாயாக" (மத்தேயு 22: 39)


மனதில் சிந்திக்க…


Love is the foundation of our Christianity. Jesus not only preached the commandment to love one another but he also practised and showed us how to do it. 

So we the followers of Christ, can we also love our neighbours and make this world the kingdom of God??


அன்பு தான் நம் கிறிஸ்தவத்தின் அடித்தளம்.. அன்புக்காட்ட இயேசு கட்டளையை மட்டும் விடுக்கவில்லை மாறாக அதை வாழ்ந்தும் காட்டினார்..

எனவே கிறிஸ்துவை பின்பற்றும் நாமும் அவரைப்போல் நம் அயலாரை நேசித்து அவரின் இராஜியத்தை இவ்வுலகின் நிலைநாட்டுவோமா.. சிந்திப்போம்…


Thursday, August 22, 2024

Aug 22

 மனதில் பதிக்க…

“For many are invited but not all are chosen." (Matthew 22:14)

“அழைப்புப் பெற்றவர்கள் பலர், ஆனால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களோ சிலர்" (மத்தேயு 22: 14)


மனதில் சிந்திக்க…

Everyone of us born as Christians have been invited by God to know about him. But Jesus gives us a strict warning that it doesn't guarantee us the kingdom of God.
Are we ready to listen to the word of God and follow it in our life to become the Chosen ones of God?


கிறிஸ்துவர்களாய் பிறந்த நாம் ஒவ்வொருவருமே கடவுளின் அழைப்பை பெற்றவர்கள். ஆனால் அதுவே விண்ணரசில் நுழைய தகுதி ஆகிவிடாது என்று இயேசு நமக்கு எச்சரிக்கை விடுக்கிறார்..

கடவுளின் வார்த்தையைக் கேட்டு அதனை நம் வாழ்க்கையில் கடைப்பிடித்து,  நாமும் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் ஆவோமா? சிந்திப்போம்…

 

Wednesday, August 21, 2024

Aug 21

 மனதில் பதிக்க…

“And everyone who has left houses, brothers, sisters, father, mother, children or land for the sake of my name will receive a hundred times as much, and also inherit eternal life." (Matthew 19:29) 

“என் பெயரின் பொருட்டு வீடுகளையோ, சகோதரர்களையோ, சகோதரிகளையோ, தந்தையையோ, தாயையோ, பிள்ளைகளையோ, நில புலங்களையோ விட்டுவிட்ட எவரும் நூறு மடங்காகப் பெறுவர். நிலை வாழ்வையும் உரிமைப் பேறாக அடைவர்." (மத்தேயு 19: 29)


மனதில் சிந்திக்க…

Christian life is focused on sacrifices. We do lot of sacrifices for the mission of God. Jesus makes a promise that every sacrifice be it small or big will not go unrewarded.

Are we ready to do sacrifices whatever we can to do the God’s work to get the reward of eternal life??


கிறிஸ்துவ வாழ்வு தியாகத்தை மைய படுத்தியது. நாம் கடவுளின் பணிக்காக பல்வேறு வகைகளில் தியாகம் செய்கிறோம்.. எத்தகைய தியாகமும் சிரிதோ பெரிதோ அதற்கான கைமாறு நிச்சயம் உண்டு என்று இயேசு வாக்களிக்கிறார்..

நிலை வாழ்வை பெற இயேசுவின் பணிக்காக நம்மால் முயன்ற தியாகத்தை செய்ய தயாராக உள்ளோமா? சிந்திப்போம்…



Tuesday, August 20, 2024

Aug 20

 மனதில் பதிக்க…

“And everyone who has left houses, brothers, sisters, father, mother, children or land for the sake of my name will receive a hundred times as much, and also inherit eternal life." (Matthew 19:29) 

“என் பெயரின் பொருட்டு வீடுகளையோ, சகோதரர்களையோ, சகோதரிகளையோ, தந்தையையோ, தாயையோ, பிள்ளைகளையோ, நில புலங்களையோ விட்டுவிட்ட எவரும் நூறு மடங்காகப் பெறுவர். நிலை வாழ்வையும் உரிமைப் பேறாக அடைவர்." (மத்தேயு 19: 29)


மனதில் சிந்திக்க…

Christian life is focused on sacrifices. We do lot of sacrifices for the mission of God. Jesus makes a promise that every sacrifice be it small or big will not go unrewarded.

Are we ready to do sacrifices whatever we can to do the God’s work to get the reward of eternal life??


கிறிஸ்துவ வாழ்வு தியாகத்தை மைய படுத்தியது. நாம் கடவுளின் பணிக்காக பல்வேறு வகைகளில் தியாகம் செய்கிறோம்.. எத்தகைய தியாகமும் சிரிதோ பெரிதோ அதற்கான கைமாறு நிச்சயம் உண்டு என்று இயேசு வாக்களிக்கிறார்..

நிலை வாழ்வை பெற இயேசுவின் பணிக்காக நம்மால் முயன்ற தியாகத்தை செய்ய தயாராக உள்ளோமா? சிந்திப்போம்…

Monday, August 19, 2024

Aug 19

 மனதில் பதிக்க 


“நிறைவுள்ளவராக விரும்பினால் நீர் போய், உம் உடைமைகளை விற்று ஏழைகளுக்குக் கொடும். அப்பொழுது விண்ணகத்தில் நீர் செல்வராய் இருப்பீர்." (மத்தேயு 19: 16-22)


"If you wish to be perfect, go and sell your possessions and give the money to the poor, and you will have treasure in heaven" (Matthew 19:16-22)




 மனதில் சிந்திக்க


God created the rich and the poor so that rich could share their wealth and help the poor..


Being rich is not a mistake but getting rich with the blessings of God and not using the wealth to help others doesn't please God..


Are we ready to be generous to share our wealth with the poor and get the treasure in heaven?


கடவுள் ஏழை பணக்காரர் என படைத்ததே அவர்களின் அதிகப்படியான செல்வத்தை எழைகளோடு பகிர்ந்துக்கொள்ளும் மனதை வளர்ப்பதற்காகவே..


பணக்காரர்களாக இருப்பது தவறல்ல மாறாக கடவுளின் ஆசீர்வாதத்தால் பெற்ற செல்வத்தை பிறருக்கு பகிராமல் தமக்கென மட்டுமே வாழ்வதையே இயேசு விரும்புவதில்லை..


நாமும் இவ்வுலகில் பகிர்ந்து வாழ்ந்து வின்னரசில் பணக்காரர்களாய் இருக்க தயாராக உள்ளோமா? சிந்திப்போம்


Aug 18

 மனதில் பதிக்க…


Anyone who does eat my flesh and drink my blood has eternal life, and I shall raise that person up on the last day. John 6:54

எனது சதையை உண்டு என் இரத்தத்தைக் குடிப்பவர் நிலைவாழ்வைக் கொண்டுள்ளார்." யோவான் 6: 54

மனதில் சிந்திக்க…

Going to church everyday and receiving the holy communion doesn't guarantee eternal life. Jesus invites us to lead a true Christian life. 

Are we ready to try attending the holy mass regularly and receive the holy communion with good preparation ? Let us think.

இயேசுவின் உடலை நற்கருணை வழியாக தினமும் உட்கொள்வதால் மட்டுமே நாம் நிலைவாழ்வுக்கு தகுதியுள்ளவர்கள் ஆவதில்லை. அதற்கான உரிய தயாரிப்பு மற்றும் கடவுளுக்கு உகந்த வாழ்க்கையை வாழவே இயேசு நம்மை அழைக்கிறார்.

முடிந்த அளவுக்கு அன்றாட திருபலியில் பங்கேற்று இறைவனின் அழியா உணவை தகுந்த முறையில் அவரின் உடலை உண்ண நாம் தயாராக உள்ளோமா? சிந்திப்போம்.


Saturday, August 17, 2024

Aug 17

மனதில் பதிக்க….

Matthew 11:25

At that time Jesus said in reply, “I give praise to you, Father, Lord of heaven and earth, for although you have hidden these things from the wise and the learned you have revealed them to the childlike.

மத்தேயு 11:25

“தந்தையே விண்ணுக்கும் மண்ணுக்கும் ஆண்டவர் உம்மைப் போற்றுகின்றேன். ஏனெனில் விண்ணரசின் மறைபொருளைக் குழந்தைகளுக்கு வெளிப்படுத்தினீர். 


மனதில் சிந்திக்க….


Just as Jesus gave importance to children, let us give priority to all the children. Shall we be a living role model for them? 

இயேசு ஆண்டவர் குழந்தைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்தது போல் நாமும் நம் கண் முன் உள்ள எல்லா குழந்தைகளுக்கும் முன்னுரிமை தருவோம். அவர்களின் நல்வாழ்வுக்கு வழி காட்ட நாமும் வாழ்ந்து காட்டுவோமா? 

Friday, August 16, 2024

Aug 16

 மனதில் பதிக்க….

Matthew 19:4

He said in reply, “Have you not read that from the beginning the Creator ‘made them male and female’

மத்தேயு 19: 4.

“படைப்பின் தொடக்கத்திலேயே கடவுள் ஆணும், பெண்ணுமாக அவர்களைப் படைத்தார்”


மனதில் சிந்திக்க….

God is always faithful to His covenant. Through the sacrament of marriage, shall we be a living example of the covenant between God and man. 

இறைவன் தம் உடன்படிக்கையில் என்றென்றும் பிரமாணிக்கமாய் நிலைத்து நிற்கின்றார். ஆகவே திருமணம் இறைவனுக்கு மனிதனுக்கும் உள்ள உறவுக்கு சான்று பகர வேண்டியது அவசியமாகின்றது.

Thursday, August 15, 2024

Aug 15

மனதில் பதிக்க…


Luke: 1:45

Blessed are you who believed that what was spoken to you by the Lord would be fulfilled.

லூக்கா 1: 45.

“ஆண்டவர் உமக்கு சொன்னதை நிறைவேறும் என்று நம்பிய நீர் பேறுபெற்றவர்” என்றார்.



மனதில் சிந்திக்க…

Mary's ascension is a foreshadowing of what will happen to all who believe in God. Like Mother Mary, shall we live with faith and humility in God.

அன்னை மரியாளின் விண்ணேற்பு இறைவனை நம்பும் அத்தனை பேருக்கும் என்ன நிகழும் என்பதற்கான முன்னடையாளமாக இருக்கின்றது. அன்னை மரியாவை போல நாமும் இறைவன் மேல் முழு நம்பிக்கையும்,  தாழ்ச்சியும் கொண்டு வாழ்வோம்.

 

Wednesday, August 14, 2024

Aug 14

 மனதில் பதிக்க…


Matthew: 18:15

“If your brother sins [against you], go and tell him his fault between you and him alone. If he listens to you, you have won over your brother.

மத்தேயு 18:15 .

“  உங்கள் சகோதர சகோதரிகளுள் ஒருவர் உங்களுக்கு எதிராக பாவம் செய்தால் நீங்களும் அவரும் தனித்திருக்கும் போது அவரது குற்றத்தை எடுத்துக் காட்டுங்கள்”.


மனதில் சிந்திக்க…

Genuine relationships are essential for the family and for the church. God calls us to protect our relationships by resolving the conflicts.

குடும்பத்திலும் திரு அவையிலும் புனிதமான உறவுகள் அவசியமானவை என்றும் ஏதேனும் மனத்தாங்கல்கள் இருந்தால் அவற்றை சரி செய்து உறவுகளை பாதுகாக்கவே இறைவன் அழைக்கின்றார், எனவே நாமும் நமது உறவுகளைப் பாதுகாப்போம்.


Tuesday, August 13, 2024

Aug 13

Matthew: 18:3

“Amen, I say to you, unless you turn and become like children,* you will not enter the kingdom of heaven.

மத்தேயு 18:3

“நீங்கள் மனந்திரும்பிச் சிறு பிள்ளைகளைப் போல் ஆகாவிட்டால் விண்ணரசில் புகமாட்டீர்கள் என உறுதியாக உங்களுக்குச் சொல்கின்றேன்”.


மனதில் சிந்திக்க…

God chooses people with humility and humbleness. Shall we seek to live with a mind of a child?


இறைவனின் பார்வையில் தாழ்நிலை நின்றவர் மட்டும் தான் உயர்த்தப் பெறுகின்றனர். எளியவர்  மட்டும்தான் தேர்ந்துக் கொள்ளப் பெறுகின்றனர். எனவே சிறுவர்களைப் போன்ற தாழ்மையுள்ள உள்ளத்தைக் கொண்டு வாழ முற்படுவோமா?


Monday, August 12, 2024

Aug 12

 மனதில் பதிக்க…


God has called you through the Gospel To possess the glory of our Lord Jesus Christ.2 Thes 2:14


“நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் மாட்சியை நீங்கள் அடையும் பொருட்டே நற்செய்தியின் வழியாக அவர் உங்களை அழைத்தார்”.2தெசலோ 2:14


மனதில் சிந்திக்க…

We can enter the heavenly life only after our death. Shall we prepare ourselves in this world by following God's word by obeying its laws and regulations..?

மனிதன் மரணம் எனும் நுழைவாயிலில் நுழைந்தே மறுமையில் பங்கெடுக்க முடியும். எனவே இவ்வுலக வாழ்வில் இறைவார்த்தையை பின்பற்றி அதன் சட்டத்திட்டங்களையும் விதிமுறைகளையும் கடைபிடித்து மறுமையில் இயேசுவோடு வாழ நம்மை தயார் படுத்துவோமா..?

Sunday, August 11, 2024

Aug 11

மனதில் பதிக்க…


John 6:51 : I am the living bread that came down from heaven; whoever eats this bread will live forever; and the bread that I will give is my flesh for the life of the world.

யோவான் 6:51

விண்ணகத்திலிருந்து இறங்கி வந்த வாழ்வு தரும் உணவு நானே இந்த உணவை எவராவது உண்டால் அவர் என்றுமே வாழ்வார் என்கிறார் ஆண்டவர்.


மனதில் சிந்திக்க…

Every day, Jesus gives himself to us in the Eucharist. Today's readings invite us to surrender ourselves to our Lord.

இயேசு தன்னையே உணவாக ஒவ்வொரு நாளும் நற்கருணையில் கொடுத்து 

கொண்டிருக்கிறார்.  நற்கருணை ஆண்டவரை நம் வாழ்வில் எல்லாமாக கொண்டு வாழ இன்றைய வாசகங்கள் நமக்கு அழைப்பு விடுக்கின்றன.

Saturday, August 10, 2024

Aug 10

                         மனதில் பதிக்க…


Jesus said to his disciples: “Amen, amen, I say to you, unless a grain of wheat falls to the ground and dies, it remains just a grain of wheat; but if it dies, it produces much fruit. John 12:24

இயேசு தம் சீடர்களுக்குக் கூறியது: “கோதுமை மணி மண்ணில் விழுந்து மடியாவிட்டால் அது அப்படியே இருக்கும். அது மடிந்தால்தான் மிகுந்த விளைச்சலை அளிக்கும் என உறுதியாகஉங்களுக்குச் சொல்கிறேன்.” யோவான் 12:24


                மனதில் சிந்திக்க…

When we give of ourselves to God, be it time, talent, or treasure, what we give is multiplied and becomes a source of abundance shortly after.

நாம் நம்மிடம் உள்ளதை ( அது நேரம், திறமை அல்லது செல்வம் எதுவாக இருந்தாலும்) கடவுளுக்கு கொடுக்கும் போது, அது பன்மடங்கு அதிகரித்து, நமக்கே ஆசீர்வாதமாக திரும்பி வரும்.

.


Friday, August 9, 2024

Aug 09

 மனதில் பதிக்க…

Jesus said to his disciples, What profit would there be for one to gain the whole world and forfeit his life? Matthew 16:26

இயேசு தம் சீடரைப் பார்த்து, “மனிதர் உலகம் முழுவதையும் ஆதாயமாக்கிக் கொண்டாலும் தம் வாழ்வையே இழப்பாரெனில் அவருக்குக் கிடைக்கும் பயன் என்ன?” மத்தேயு 16:26


மனதில் சிந்திக்க…

It doesn’t matter if we are rich or poor, Jesus will repay us only when we feed the hungry, shelter the homeless, cloth the naked, visit the sick and imprisoned, and bury the dead.

நாம் செல்வமுடையவரா இல்லாதவரா என்பது முக்கியமல்ல, பசியுள்ளவர்களுக்கு உணவளிக்கும் போது,  வீடற்றவர்களுக்கு அடைக்கலம் கொடுக்கும் போது,  ஆடையில்லாமல் இருப்பவர்களை உடுத்தும் போது,  நோயாளிகள் மற்றும் சிறையில் உள்ளவர்களை பார்க்கும் போது, இறந்தவர்களை அடக்கம் செய்யும் போது மட்டுமே இயேசு நம்மை இறுதி நாட்களில் நினைவு கூறுவார்.

Thursday, August 8, 2024

Aug 08

 மனதில் பதிக்க…

Jesus turned and said to Peter, "Get behind me, Satan! You are an obstacle to me. You are thinking not as God does, but as human beings do." Matthew 16:23

ஆனால் இயேசு பேதுருவைத் திரும்பிப் பார்த்து, “என் கண்முன் நில்லாதே சாத்தானே, நீ எனக்குத் தடையாய் இருக்கிறாய்; ஏனெனில் நீ கடவுளுக்கு ஏற்றவை பற்றி எண்ணாமல் மனிதருக்கு ஏற்றவை பற்றியே எண்ணுகிறாய்” என்றார். மத்தேயு 16:23 


மனதில் சிந்திக்க…

Satan causes fear and confusion about our future. We shall trust that God only can help us overcome the fear and confusion and face the future with courage and confidence.

சாத்தான், நமது எதிர்காலத்தைப் பற்றிய பயத்தையும் குழப்பத்தையும் ஏற்படுத்துகிறான். கடவுளால் மட்டுமே நமது பயத்தையும் குழப்பத்தையும் போக்க முடியும் என்ற நம்பிக்கையுடன் எதிர்காலத்தை நோக்கி மனவுறுதியுடன் பயணிப்போம்.


Wednesday, August 7, 2024

Aug 07

 மனதில் பதிக்க…


Then Jesus said to her in reply, “O woman, great is your faith! Let it be done for you as you wish.” Matthew 15:28


இயேசு மறுமொழியாக, “அம்மா, உமது நம்பிக்கை பெரிது. நீர் விரும்பியவாறே உமக்கு நிகழட்டும்”என்று அவரிடம் கூறினார். மத்தேயு 15:28



மனதில் சிந்திக்க…


Like that Canaanite woman, we need to trust in God’s ability, humble ourselves before his almighty, and pray with perseverance, and God will always answer our prayers according to his holy will.


அந்த கானானியப் பெண்ணைப் போலவே, நாமும் கடவுளால் முடியும் என்று நம்பிக்கை வைத்து, எல்லாம் வல்ல நம் ஆண்டவருக்கு முன்பாக நம்மைத் தாழ்த்தி, விடாது ஜெபிக்கும் போது, ஆண்டவர் எப்போதும் அவருடைய திருவுளப்படி நம்முடைய ஜெபங்களுக்குப் பதிலளிப்பார்.


Tuesday, August 6, 2024

Aug 06

மனதில் பதிக்க…


Then a cloud came, casting a shadow over them; from the cloud came a voice, “This is my beloved Son. Listen to him.” Mark 9:7


அப்போது ஒரு மேகம் வந்து அவர்கள் மேல் நிழலிட அந்த மேகத்தினின்று, “என் அன்பார்ந்த மைந்தர் இவரே; இவருக்குச் செவிசாயுங்கள்” என்று ஒரு குரல் ஒலித்தது. மாற்கு 9:7


மனதில் சிந்திக்க…


To face hard times in our life without fear and confusion, we need to listen to our Lord Jesus in every way, in addition to acknowledging the divinity of our Lord Jesus Christ.


நம் வாழ்வில் கடினமான நேரங்களை பயம் மற்றும் குழப்பம் இல்லாமல் எதிர்கொள்ள, நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் தெய்வீகத்தன்மையை ஒப்புக்கொள்வதுடன், எல்லா வகையிலும் நாம் அவருக்கு செவிசாய்த்து வாழ வேண்டும்.

Monday, August 5, 2024

Aug 05

 மனதில் பதிக்க…


Jesus said to them, "There is no need for them to go away; give them some food yourselves." Matthew 14:16


இயேசு அவர்களிடம், “அவர்கள் செல்ல வேண்டியதில்லை; நீங்களே அவர்களுக்கு உணவு கொடுங்கள்” என்றார். மத்தேயு 14:16


மனதில் சிந்திக்க…


We are called to share the spiritual gifts that we received with others so that they do not go anywhere. Despite their weakness, apostles were able to share the God’s word that they received, by an act of obedience to God. Therefore, we can seek help from God through prayers and obedience to eliminate our weaknesses and share the living word of God.


நாம் பெற்ற இறைவார்த்தை என்னும் அருட்கொடையை பிறருடன் பகிர்ந்து கொள்ள நாம் அழைக்கப்படுகிறோம், இதனால் அவர்கள் வேறு எங்கும் செல்ல வேண்டியதில்லை. பலவீனமாக இருந்தபோதிலும், அப்போஸ்தலர்கள் கீழ்ப்படிதலின் மூலம் அவர்கள் பெற்ற இறைவார்த்தையை பகிர்ந்து கொள்ள முடிந்தது. எனவே, நமது பலவீனங்களை நீக்கி, ஆண்டவரின் உயிருள்ள வார்த்தையைப் பகிர்ந்து கொள்ள ஜெபங்கள் மற்றும் கீழ்ப்படிதல் மூலம் நாம் ஆண்டவருடைய உதவியை பெறுவோம்.


Sunday, August 4, 2024

Aug 04

 மனதில் பதிக்க….

Jesus said to them, “I am the bread of life; whoever comes to me will never hunger, and whoever believes in me will never thirst.” John 6:35

இயேசு அவர்களிடம், “வாழ்வு தரும் உணவு நானே. என்னிடம் வருபவருக்குப் பசியே இராது; என்னிடம் நம்பிக்கை கொண்டிருப்பவருக்கு என்றுமே தாகம் இராது” என்றார்.  யோவான் 6:35 

மனதில் சிந்திக்க….

We need to renounce worldly desires, renew our spiritual life, have unconditional faith in God, and follow Jesus’ teachings to endure eternal life.

நாம் உலக ஆசைகளைத் துறந்து, ஆன்மீக வாழ்வைப் புதுபித்து, ஆண்டவர் மீது நிபந்தனையற்ற விசுவாசம் கொண்டு, இயேசு கிறிஸ்துவின் போதனைகளை கடைபிடித்து, நிலையான பேரின்ப வாழ்வை அடைவோம்.

Saturday, August 3, 2024

Aug 03

 மனதில் பதிக்க…

Herod said to his attendants "“This is John the Baptist; he has risen from the dead! That is why miraculous powers are at work in him.”

ஏரோது, தன் ஊழியரிடம், “இவர் திருமுழுக்கு யோவான்தான். இறந்த யோவானைக் கடவுள் உயிர்பெற்றெழச் செய்தார். இதனால்தான் இந்த வல்ல செயல்களை இவர் செய்கிறார்” என்று கூறினான்.


மனதில் சிந்திக்க…

Herod, felt regret and fear over John the Baptist’s beheading. This is reminding us to surrender our minds and hearts to our Lord and ask for His mercy to penetrate into our hearts that will bring peace to us.Righteouness and Truthfullness will always lead to fear and destruction of the bad people. 

 

ஏரோது, ஜான் பாப்டிஸ்ட் தலை துண்டிக்கப்பட்டதற்கு வருத்தமும் பயமும் அடைந்தார். இது நம் மனதையும் இதயத்தையும் இறைவனிடம் ஒப்படைக்க நினைவூட்டுகிறது. அவருடைய கருணை நம் இதயங்களில் ஊடுருவி, அமைதி தருமாறு வேண்டுவோம்.நேர்மையும், உண்மையும்  எந்த தீய சக்தியையும் அச்சுறுத்தி  கொண்டு இருக்கும். அதனால் தான் ஏரோது அச்சமடைந்தான் . நம் வாழ்வில் நேர்மையும் உண்மையும் இருந்தால் தர்மம் தலை தூக்கும்.

Friday, August 2, 2024

Aug 02

 

மனதில் பதிக்க...
Jesus said to them, 'A prophet is not without honor except in his native place and in his own house'. Mt 13:57
இயேசு அவர்களிடம், “தம் சொந்த ஊரிலும் வீட்டிலும் தவிர மற்றெங்கும் இறைவாக்கினர் மதிப்புப் பெறுவர்” என்றார். மத் 13:57
 
மனதில் சிந்திக்க...
Our mission is to recognize God's presence in everyone we meet everyday. We strive to see Him more clearly by over looking others' faults and weaknesses. That is how we celebrate His greatness. 
 
நாம் தினமும் சந்திக்கும் ஒவ்வொருவரிடமும் கடவுளின் பிரசன்னத்தை காண்பதை நோக்கமாக கொண்டுள்ளோம். மற்றவர்களின் தவறுகள் மற்றும் பலவீனங்களைக் கடந்து, அவர்களை தெளிவாகக் காண முயல்வதன் மூலம் கடவுளின் மகத்துவத்தை உணர்கிறோம்.

Thursday, August 1, 2024

Aug 01

 மனதில் பதிக்க...

Like clay in the hand of the potter, so are you in my hand, house of Israel (Jer 18:6)

 குயவன் கையிலுள்ள களிமண்ணைப் போல இஸ்ரயேல் வீட்டாரே, நீங்கள் என் கையில் இருக்கின்றீர்கள் (எரே 18:6)


மனதில் சிந்திக்க...

As the potter shapes up the vessels, God is shaping us every day. This is so encouraging. All we have to do is to let Him shape us. 

குயவன் மண்கலசத்தை வடிவமைகப்பது போல, கடவுள் ஒவ்வொரு நாளும் நம்மை வடிவமைக்கிறார் என்பதை அறிவது மிகவும் ஊக்கமளிக்கிறது. நாம் செய்ய வேண்டியது எல்லாம் அவர் நம்மை வடிவமைக்க அனுமதிப்பது மட்டும்.