Saturday, January 31, 2026

Jan 31

 மனதில் பதிக்க


“ஏன் அஞ்சுகிறீர்கள்? உங்களுக்கு இன்னும் நம்பிக்கை இல்லையா?“ - மாற்கு 4:40


“Why are you so afraid? Do you still have no faith?” - Mark 4: 40


மனதில் சிந்திக்க


இயேசு தம் சீடர்களை மட்டுமல்ல, அவருடைய அற்புதங்களைக் கண்டிருந்தும், துன்பமான அல்லது நம்பிக்கையற்ற சூழ்நிலைகளில் அவருடைய திட்டங்களை நம்பத் தவறும் நம்மில் ஒவ்வொருவரையும் கடிந்துகொள்கிறார். கடந்த புயலிலிருந்து நம்மைக் காப்பாற்ற அவருடைய கிருபை போதுமானதாக இருந்தபோது, ​​இந்தப் புயலில் அவர் நம்மைக் கைவிட்டுவிட்டார் என்பது போல நாம் ஏன் இன்னும் நடந்துகொள்கிறோம்?


Jesus isn't just rebuking His disciples, but also each one of us who has witnessed His miracles and yet fails to trust His plans when in a trouble or a hopeless situation. If His grace was enough to carry us through the last storm, why do we still act as if He has abandoned us in this one?


-- Third Saturday in Ordinary time - Cycle 2


Friday, January 30, 2026

Jan 30

    மனதில் பதிக்க


“அது விதைக்கப்பட்டபின் முளைத்தெழுந்து எல்லாச் செடிகளையும்விடப் பெரிதாகி, வானத்துப் பறவைகள் அதன் நிழலில் தங்கக்கூடிய அளவுக்குப் பெருங்கிளைகள் விடும்“ - மாற்கு 4: 32


“Yet when planted, it grows and becomes the largest of all garden plants, with such big branches that the birds can perch in its shade” - Mark 4: 32


மனதில் சிந்திக்க


கடவுள் பெரும்பாலும் தமது மாபெரும் செயல்களை, நாம் விசுவாசத்துடன் செய்யும் மிகச் சிறிய கீழ்ப்படிதல் செயல்கள் மூலமாகவே தொடங்குகிறார். நாம் கீழ்ப்படிதலின் முதல் சிறிய அடியை எடுத்து வைக்கத் தயாராக இருக்கிறோமா? அல்லது கடந்த கால குற்றவுணர்ச்சியின் பாரம் நம்மைத் சிறைப்படுத்தி, தயக்கத்திலேயே வைத்திருக்க அனுமதித்துக் கொண்டிருக்கிறோமா?


God often starts His greatest works through our smallest acts of faithful obedience. Are we ready to take that first small step of obedience or are we allowing the weight of past guilt to shackle us, permitting ourselves to remain held back by hesitation?


-- Third Friday in Ordinary Time - Cycle 2


Thursday, January 29, 2026

Jan 29

 மனதில் பதிக்க


“நீங்கள் எந்த அளவையால் அளக்கிறீர்களோ அதே அளவையால் உங்களுக்கும் அளக்கப்படும்; இன்னும் கூடுதலாகவும் கொடுக்கப்படும்“ - மாற்கு 4: 24


“With the measure you use, it will be measured to you; and even more” - Mark 4: 24


மனதில் சிந்திக்க


வளமான மண்ணில் விதைக்கப்பட்ட விதையைப் போல, நாம் அர்ப்பணிக்கும் நேரத்தையும் திறமையையும் கடவுள் பன்மடங்காகப் பெருக்கி, ஆசீர்வாதங்களின் அறுவடையாக நமக்குத் தருகிறார். பரபரப்பான ஒரு நாளின் அவசரத்தில், நாம் நமது முதல் கனிகளை அவருக்கு அர்ப்பணிக்கிறோமா, அல்லது நமது வாழ்க்கையின் 'நிலுவையில் உள்ள' பட்டியலில் அவரை விட்டுவிடுகிறோமா?


Like a seed cast into fertile soil, God multiplies our humble investment of time and talent into a harvest of blessings. In the rush of a demanding day, are we offering Him our first fruits, or are we leaving Him on the 'pending' list of our lives?


-- Third Thursday in ordinary time - Cycle 2


Wednesday, January 28, 2026

Jan 28

 மனதில் பதிக்க


“நல்ல நிலத்தில் விதைக்கப்பட்ட விதைகளுக்கு ஒப்பானவர்கள் இறைவார்த்தையைக் கேட்டு அதை ஏற்றுக்கொண்டு பயன் அளிப்பார்கள்“ - மாற்கு 4: 20


“Others, like seed sown on good soil, hear the word, accept it, and produce a crop” - Mark 4: 20


மனதில் சிந்திக்க


விதைப்பவர் உவமையில், இயேசு நல்ல நிலத்தை, ஆண்டவரின் வார்த்தையைக் கேட்டு, அதன்படி தீவிரமாக வாழும் இருதயங்களுக்கு ஒப்பிடுகிறார். நாம் ஆண்டவரின் வார்த்தையை மேலோட்டமாகக் கேட்டுவிட்டு கடந்து போகிறோமா, அல்லது கவனச்சிதறல்களை நீக்கி, அது நமக்குள் ஆழமாக வேரூன்றி கனிதர அனுமதிக்கிறோமா?


In this parable of sower, Jesus compares the good soil to hearts that hear the word of God and actively live it out. Are we merely listeners who let God’s Word sit on the surface or are we ready to dig deep and clear away the distractions so that His truth can finally take root and produce a miracle in each one of us.


-- Third Wednesday in Ordinary time - Cycle 2



Tuesday, January 27, 2026

Jan 27

 மனதில் பதிக்க


“கடவுளின் திருவுளத்தை நிறைவேற்றுபவரே என் சகோதரரும் சகோதரியும் தாயும் ஆவார்“ - மாற்கு 3: 35


“Whoever does God’s will is my brother and sister and mother” - Mark 3: 35


மனதில் சிந்திக்க


இயேசுவின் சித்தத்திற்குக் கீழ்ப்படிந்து, அவருடைய வார்த்தையின்படி செயல்படுவதன் மூலம், அவருடைய குடும்பத்தில் ஒரு பகுதியாக இருக்கும்படி அவர் நம்மை அழைக்கிறார். நாம் இன்னும் அவருடைய வழியை விட்டுவிட்டு நம்முடைய சொந்த வழியையே தேர்ந்தெடுக்கிறோமா, அல்லது கிறிஸ்துவின் சகோதரர்களாகவோ சகோதரிகளாகவோ அழைக்கப்படுவதற்காக நம்மை அவருக்கு அர்ப்பணிக்கிறோமா?


Jesus invites us to be a part of His family by living in obedience to His will and acting on His word. Are we still choosing our own way over His, or are we surrendering ourselves to Him to be called brothers or sisters of Christ?


-- Third Tuesday in Ordinary Time - Cycle 2


Monday, January 26, 2026

Jan 26

 மனதில் பதிக்க


“தூய ஆவியாரைப் பழித்து உரைப்பவர் எவரும் எக்காலத்திலும் மன்னிப்புப் பெறார்“ - மாற்கு 3: 29


“Whoever blasphemes against the Holy Spirit will never be forgiven” - Mark 3: 29


மனதில் சிந்திக்க


நாம் மருந்தை மறுத்தால், குணமடைய முடியாது. அதேபோல், நம்மை மனந்திரும்புதலுக்கு வழிநடத்தும் பரிசுத்த ஆவியானவரை நாம் மறுத்தால், நமக்கு மன்னிப்பு கிடைக்காது. நாம் உண்மையாகவே பரிசுத்த ஆவியை நாடுகிறோமா, அல்லது அதற்கு எதிராக நாம் கட்டியெழுப்பிய தடைகளை நியாயப்படுத்த காரணங்களைத் தேடுகிறோமா?


If we refuse medicine, we cannot be cured. Likewise if we deny the Holy Spirit, who brings us to repentance, we will not be forgiven. Are we truly seeking His spirit, or merely looking for reasons to justify the walls we have built against it?


-- Third Monday in ordinary time - Cycle 2


Sunday, January 25, 2026

Jan 25

 

மனதில் பதிக்க

 

என் பின்னே வாருங்கள்; நான் உங்களை மனிதரைப் பிடிப்பவர் ஆக்குவேன்“ - மத்தேயு 4: 19

“Come, follow me, I will send you out to fish for people” - Matthew 4: 19

 

மனதில் சிந்திக்க


இயேசுவைப் பின்பற்றுவதற்காக, பேதுருவும் அந்திரேயாவும் தங்கள் வலைகளை, அதாவது தங்கள் பாதுகாப்பு மற்றும் அடையாளத்தின் ஆதாரத்தை விட்டுச் செல்ல வேண்டியிருந்தது. நம்முடைய சுய விருப்பங்களையும் பழைய சுபாவங்களையும் துறக்க வேண்டியிருந்தாலும், அவர் அமைத்த புனிதமான பாதையில் பயணிக்க 'ஆம்' என்று சொல்ல நாம் தயாராக இருக்கிறோமா?

 

To follow Jesus, Peter and Andrew had to leave their nets, their source of security and identity. Are we ready to say "Yes" to the path He has set, even if it means leaving ourselves behind?

-- Third Sunday in Ordinary Time - Year A

 

Saturday, January 24, 2026

Jan 24

 

மனதில் பதிக்க

 

போர் முனையில் வீரர் எங்ஙனம் வீழ்ந்துபட்டனர்? - 2 சாமுவேல்  1: 1- 25

 How can the warriors have fallen! - 2 Samuel 1: 25

 

மனதில் சிந்திக்க


இயேசு தன்னைச் சிலுவையில் அறைந்தவர்களை கண்டிக்கவில்லை; அவர்களுக்காகவே மரித்தார். ஒரு உண்மையான சீடராக இருப்பது என்பது வெறும் ஜெபிப்பது, திருப்பலியில் கலந்துகொள்வது அல்லது வேதாகமம் அறிந்திருப்பது மட்டுமல்ல, அவரைப்போல ஒரு இருதயத்தைக் கொண்டிருப்பதே ஆகும். நம்மைத் துன்புறுத்தியவர்கள் மீது கூட இரக்கம் காட்டக்கூடிய திறன் நம் இருதயத்திற்கு இருக்கிறதா?

 

Jesus did not condemn those who crucified Him; He died for them. To be a true disciple is not merely to pray, attend mass, or know scripture, but to have a heart like His. Is our heart capable of compassion even toward those who have hurt us?


-- Second Saturday in Ordinary Time - Cycle 2

 


Friday, January 23, 2026

Jan 23

 

மனதில் பதிக்க

 

கடவுளே! எனக்கு இரங்கும், எனக்கு இரங்கும். - திருப்பாடல்கள்: 57: 1

Have mercy on me, God, have mercy. - Psalm 57:2

 

மனதில் சிந்திக்க
  

நாம் சோர்வாக, வழிதெரியாமல், அல்லது பயத்தால் சூழப்பட்டிருக்கும் நேரங்களிலும்கூட, கடவுள் நம்மைக் காண்கிறார் , நம்மைப் பெயர் சொல்லி அழைத்து , நமக்கு ஒரு நோக்கம் உண்டு என்பதை நினைவூட்டுகிறார். நாம் அவருடைய மீட்பு சக்தியில் நம்பிக்கை வைத்து, எல்லாவற்றுக்கும் மேலாக அவரின் மகிமையைப் புகழ்ந்து துதிப்போமா?

 

Even when we feel low, lost, or surrounded by fear, God sees us, calls us by name, and reminds us that we have a purpose. can we trust in His saving power and respond with praise, acknowledging His glory above all?

-- Second Friday in Ordinary time - Cycle 2

 


Thursday, January 22, 2026

Jan 22

 

மனதில் பதிக்க 

என் தந்தை சவுல் உன்னைக் கொல்லத் தேடுகிறார்.- 1 சாமுவேல் 19: 2 

My father Saul is trying to kill you. - 1 Samuel 19:2

 

மனதில் சிந்திக்க 

மற்றவர்களின் ஆசீர்வாதங்களைக் கண்டு நாம் மகிழ்ச்சி அடையும்போது, நமக்குள்ளே அமைதி, தாழ்மை மற்றும் அன்பிற்கு இடம் கொடுக்கிறோம். இந்தத் திறந்த மனப்பான்மைக்குக் கடவுள் பதிலளித்து, நாம் எதிர்பார்ப்பதை விட மேலான வழிகளில் நம்மை ஆசீர்வதிக்கிறார். சவுலை போல இல்லாமல், யோனத்தான்  போல நாமும் பிறரிடம் அன்பு கொண்டிருப்போமா ?


When we rejoice in others’ blessings, we make room for peace, humility, and love within ourselves. God responds to this openness of heart by blessing us in ways beyond what we expect. Unlike Saul, will we too show love towards others, like Jonathan?


-- Second Thursday in ordinary time - Cycle 2

 


Wednesday, January 21, 2026

Jan 21

 மனதில் பதிக்க


என் பாறையாகிய ஆண்டவர் போற்றி! போற்றி. - திருப்பாடல் 144: 1


Blessed be the Lord, my Rock. - Psalm 144:1 


மனதில் சிந்திக்க


நம்முடைய அன்றாட வாழ்வில், குறிப்பாக நாம் போராட்டங்களையும், அச்சங்களையும், கட்டுப்பாடுகளையும் எதிர்கொள்ளும்போது, கடவுளே நமது உண்மையான பலமும் பாதுகாவலருமாய் இருக்கின்றார். கடினமான காலங்களில், நாம் அவரை நம்பி, நன்றி கூறி புகழுகிறோமா?


God is our true strength and protector in daily life, especially when we face struggles, fears, and limitations. In difficult times, do we trust Him and respond with gratitude and praise?


-- 2nd Wednesday in ordinary time - cycle 2


Tuesday, January 20, 2026

Jan 20

 மனதில் பதிக்க


தாவீதைச் சாமுவேல் திருப்பொழிவு செய்தார். ஆண்டவரின் ஆவி தாவீதின் மேல் நிறைவாக இருந்தது. - சாமுவேல் 16: 1


Samuel anointed David. The Spirit of the Lord was powerfully upon David. - 1 Samuel 16:1


மனதில் சிந்திக்க


இன்று குடும்பம், அலுவலகம், சமூகத்தில் நாம் வெற்றி, அந்தஸ்து மற்றும் தோற்றத்தை வைத்து ஒருவரை மதிப்பிடுகிறோம். ஆனால் இந்த வாசகம் குணநலன் மற்றும் நேர்மையை மதிக்க அழைக்கிறது. தாவீதைப் போல நாம் கவனிக்கப்படாதவர்களாக உணரலாம்; ஆனால் கடவுள் நம்மை காண்கிறார். மனிதரின் பாராட்டை நாடாமல், நம்பிக்கை, கீழ்ப்படிதல், அன்பில் நாம் வளர்கிறோமா?


In our families, workplaces, and communities, we often judge by success or status, but this passage calls us to value character and integrity. Like David, we may feel unnoticed, yet God sees us. Instead of seeking human approval, are we growing in faith, obedience, and love?


-- Second Tuesday in Ordinary Time - Cycle 2


Monday, January 19, 2026

Jan 19

 மனதில் பதிக்க


மணமகன் விருந்தினரோடு இருக்கிறார்.மாற்கு 2:18


bridegroom is with wedding guest. Mark 2:18


மனதில் சிந்திக்க


நாம் கடுமையான விதிகளால் அல்ல, பாசம், இரக்கம், தாழ்மை மற்றும் கருணையால் வாழ வேண்டும். பழிவாங்காமல் மன்னிப்பதை கடைப்பிடிக்க வேண்டும். புதிய வாழ்வை வரவேற்று,  நமது ஆன்மீக பயணத்தில் கடவுள் நம்மை மாற்ற  தயாரா?


We should not live by rigid rules, but by love, compassion, humility, and mercy. We must let go of grudges and practice forgiveness. Are we ready to welcome new life and let God transform us on our spiritual journey?


-- Second Tuesday in Ordinary Time - Cycle 2


Sunday, January 18, 2026

Jan 18

 

மனதில் பதிக்க

 

இதோ கடவுளின் செம்மறி! இவரே உலகின் பாவத்தைப் போக்குபவர். - யோவான் 1: 29

 

Behold, the Lamb of God, who takes away the sin of the world. - John 1:29

 

மனதில் சிந்திக்க

 

நாம் கடவுளின் செயல்களை  அறிந்து, அவரைப் பற்றி சாட்சி கூறி, நம்பிக்கையுடன் வாழ்ந்து, சேவை செய்து, மற்றவர்களை இயேசுவிடம் வழிநடத்தினால், நமது இதயங்களிலும் வாழ்விலும் இயேசு வருவதற்கான வழியை முன்னிலைபடுத்துகிறோம். யோவானைப் போல, நாமும் நம் வாழ்வில் கிறிஸ்துவின் பிரசன்னத்தை உணர்ந்து, தாழ்மையுடனும் விசுவாசத்துடனும் அவருக்குச் சாட்சி பகர முயிற்சிப்போமா?

 

When we see God’s work, tell others about Him, live faithfully, serve, and lead others to Jesus, we prepare the way for Him to live in our hearts and lives . Like John, can we recognize Christ’s presence in our lives and bear witness to Him through humility and faith?


-- Second Sunday in Ordinary time - Year A

 


Saturday, January 17, 2026

Jan 17

 

 

மனதில் பதிக்க

 

நோயற்றவருக்கு அல்ல, நோயுற்றவருக்கே மருத்துவர் தேவை. - மாற்கு 2:17

 

Those who are well do not need a physician, but the sick do. - Mark 2:17

 

மனதில் சிந்திக்க

 

இன்பத்தில் நண்பர்களோடும், உறவினர்களோடும் இன்புற்று இருக்கும் நாம் அவர்களின் வேதனைகளில் , தோல்விகளில் பங்கேற்க மறுத்து விடுகின்றோம். இன்பத்தில் விட துன்பத்தில் தான் நம் துணை அவர்களுக்கு தேவை என உணர்ந்து செயல்படுவோமா?

 

While we enjoy ourselves with friends and relatives during times of joy, we refuse to participate in their pain and failures. Let us realize that our support is needed more during times of sorrow than in times of happiness, and act accordingly.


-- First Saturday in Ordinary time - Cyle 2

 

Friday, January 16, 2026

Jan 16

 

 

மனதில் பதிக்க

 

இயேசு அவர்களுடைய நம்பிக்கையைக் கண்டு, முடக்குவாதமுற்றவரிடம், “மகனே, உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டனஎன்றார். - மாற்கு 2:5

 

When Jesus saw their faith, he said to the paralytic, “Child, your sins are forgiven.” - Mark 2:5

 

மனதில் சிந்திக்க

 

நோயுற்றவனை விட அவனை சுமந்து வந்த நால்வரின் விசுவாசம் இயேசுவை குணமாக்க தூண்டியது. பாவம் என்ற முடக்குவாதத்தில் இருந்து விடுபட இறை விசுவாசம் என்ற ஆயுதத்தை எடுப்போமா?

 

The faith of the four men who carried the sick man moved Jesus to heal him, even more than the sick man's own condition. Shall we take up the weapon of faith in God to be freed from the paralysis of sin?


-- First Friday in Ordinary Time - Cycle 2

 

Thursday, January 15, 2026

Jan 15

 

 

மனதில் பதிக்க

 

நான் விரும்புகிறேன், உமது நோய் நீங்குக!என்றார். - மாற்கு  1:41

 

“I do will it. Be made clean.” - Mark 1:41

 

மனதில் சிந்திக்க

 

உரிய நம்பிக்கையுடனும் , தயாரிப்புடனும் நாம் இருந்தால் நம்மையும் நோக்கி "நான் விரும்புகிறேன் நீ பெற்றுக்கொள்" என்பார் நம் இறைவன். இந்த வார்த்தைகளை கேட்க நம் உள்ளங்கள் தயாரா?

 

If we approach Him with proper faith and preparation, our Lord will say to us, "I desire it, you receive my graces." Are our hearts ready to hear these words?


-- First Thursday in ordinary time - Cycle 2

Wednesday, January 14, 2026

Jan 14

 

மனதில் பதிக்க

 

உமது திருவுளம் நிறைவேற்ற இதோ வருகின்றேன் ஆண்டவரே! - திருப்பாடல் 40:7a,8a

 

Here am I, Lord; I come to do your will. - Psalm 40:8a,9a

 

மனதில் சிந்திக்க

 

தனிமையிலே இறை இல்லத்திற்கு சென்று அமைதியிலே இறைவனோடு பேசும் போது அவருடைய குரலை நாம் கேட்கலாம். நம்மை படைத்த கடவுள் நமக்காக வைத்திருக்கும் திட்டத்தை அறிய அடிக்கடி நற்கருணை நாதரை சந்திப்போமா?

 

When we go to the house of God in solitude and speak with Him in peace, we can hear His voice. Shall we frequently meet with the Lord in the Blessed Sacrament to learn about the plan that God, our Creator, has for us?


-- First Wednesday in Ordinary Time

 


Tuesday, January 13, 2026

Jan 13

  

மனதில் பதிக்க

 

வாயை மூடு; இவரை விட்டு வெளியே போஎன்று இயேசு அதனை அதட்டினார். - மாற்கு 1:25

 

Jesus rebuked him and said, “Quiet! Come out of him!” - Mark 1:25

 

மனதில் சிந்திக்க

 

இந்த இறை வசனத்தில் இயேசுவின் அதிகாரம் வெளிப்படுகின்றது. நமது சொற்கள் அதிகாரம் கொண்டதாக அமையவேண்டுமென்றால், நமது சொற்களுக்கும், செயல்களுக்கும் முரண்பாடு இல்லாமல் இருக்கவேண்டும். நமது சொற்கள் நமது செயல்களில் எதிரொலிக்க வேண்டும். முயல்வோமா?

This divine verse reveals the authority of Jesus. For our words to be authoritative, there must be no contradiction between our words and our actions. Our words should be reflected in our actions. Shall we try?


-- First Tuesday in Ordinary Time - Cycle 2

 

Monday, January 12, 2026

Jan 12

 

 

மனதில் பதிக்க

 

நான் உமக்கு நன்றிப் பலி செலுத்துவேன்; ஆண்டவராகிய உம் பெயரைத் தொழுவேன். - திருப்பாடல்கள் 116:17

 

I will offer a sacrifice of praise and call on the name of the LORD.- Psalms 116:17

 

மனதில் சிந்திக்க

 

தங்கள் உடலை வருத்திய போதும் புனிதர்களால் இறைவனை போற்றி புகழ முடிந்தது. இறைவனும் ஒவ்வொரு துன்பத்திலும் இருந்து அவர்களை விடுவித்து வழிநடத்தினார் . நன்மையோ , தீமையோ என்ன நேர்ந்தாலும் நம்மால் இறைவனை புகழ்ந்து துதிக்க முடியுமா?

 

Even while enduring physical suffering, the saints were able to praise and glorify God. And God delivered and guided them through every hardship. Can we praise and glorify God regardless of whether good or bad befalls us?


-- First Week - Monday - Year 2

 

Sunday, January 11, 2026

Jan 11

 

மனதில் பதிக்க

 

ஆண்டவர் தம் மக்களுக்கு அமைதி அளித்து ஆசி வழங்குவாராக! - திருப்பாடல்கள் 29:11

 

May the LORD give might to his people; may the LORD bless his people with peace!- Psalms 29:11

 

மனதில் சிந்திக்க

 

நம் அனுதின வாழ்வில் மனக்கலக்கம், வருத்தம், தாழ்வு மனப்பான்மை, அமைதியின்மை  வருகிறபோது, சமாதானத்தை அருளக்கூடிய இறைவன் மட்டில் முழுமையான நம்பிக்கை வைத்து, எந்நாளும் அவருடைய ஆசிரை எதிர்பார்த்து வாழ்வோமா?

 

When anxiety, sorrow, inferiority complex, and restlessness arise in our daily lives, shall we place our complete trust in God, who can grant peace, and live each day anticipating His blessings?


-- Baptism of the Lord

 


Saturday, January 10, 2026

Jan 10

 

 

மனதில் பதிக்க

 

பிள்ளைகளே, சிலைவழிபாட்டைக் குறித்து எச்சரிக்கையாயிருங்கள். - 1 யோவான் 5:21

 

Children, be on your guard against idols. - 1 John 5:21

 

மனதில் சிந்திக்க

 

பொறாமை, பகை உணர்வுபெருமை, விட்டுக்கொடுக்காமை, குடிவெறி மற்றும் தீய பழக்கவழக்களாகிய சிலைவழிப்பாட்டிலிருந்து முழுதான விடுதலை பெற்று இறைஅ ன்புக்கு பாத்திரமான பிள்ளைகளாக வாழ்வோமா?

 

Shall we live a life, worthy of God's love, having gained complete freedom from the idolatry of jealousy, hostility, pride, stubbornness, drunkenness, and other evil habits?


-- Saturday after Epiphany

 

Friday, January 9, 2026

Jan 09

 

மனதில் பதிக்க

 

கடவுள் நமக்கு நிலைவாழ்வை அளித்துள்ளார். இந்த வாழ்வு அவர் மகனிடம் இருக்கிறது. இதுவே அச்சான்று. - 1 யோவான் 5:12

 

Whoever possesses the Son has life; whoever does not possess the Son of God does not have life. - 1 John 5:12

 

மனதில் சிந்திக்க

 

இயேசுவே இறைமகன் என்பதற்கு நீர், இரத்தம், தூயஆவி ஆகிய மூன்றும் சான்றாக கொடுக்கப்பட்டுள்ளது.  அவரே நமக்கு நிலைவாழ்வைத் தருகின்றவர். அவரில் முழுநம்பிக்கை வைத்து நாமும் முழுமையான வாழ்வை வாழ வரம் வேண்டுவோமா?

 

The water, the blood, and the Holy Spirit are given as evidence that Jesus is the Son of God. He is the one who gives us eternal life. Let us pray for the grace to place our complete trust in Him and live a fulfilling life.


-- Friday after Epiphany