மனதில் பதிக்க…
“அன்பில் நம்பிக்கை கொள்வோர் அவரோடு நிலைத்திருப்பர். அருளும் இரக்கமும் அவர் தேர்ந்து கொண்டோர்மீது இருக்கும்.” - சாலமோனின் ஞானம் 3 : 8-9
“Those who trust in him shall understand truth,and the faithful shall abide with him in love.” - Wisdom 3:8-9
மனதில் சிந்திக்க…
நம் கடவுள் நம்மேல் அளவுக்கு அதிகமாக அன்பு வைத்திருக்கிறார். நாமும் அவரை போல் எந்த வேறுபாடுமின்றி பிறரை நேசிக்க வேண்டும் என்று விரும்புகிறார். இயேசுவின் அழைப்பை பெற்ற நாம் அவரை போல அன்பு செலுத்தி அவரின் இறையாட்சியை மண்ணில் நிறுவ முயல்வோமா? சிந்திப்போம்?
God loves each one of us unconditionally. God expects the same from us to love everyone without any difference. We being the chosen people of God, shall we try to share the gift of love with everyone and build the kingdom of God on earth?
-- 32nd Tuesday in ordinary time - cycle 1